நீ - நான் - காதல்
மணிக்கணக்காய்
திங்கள் முகத்தாளை
பேசியும் தீரவில்லை - நம்
பேச்சு
அலைபேசிக்கே
அலுத்திருக்கும் - ஆனால்
குறையாது
நமக்குள்ளே
பூத்திருக்கும் புதுச் சுகம்
சிரிப்பு பாதி
கோபம் மீதி என
நகர்கின்றன
நம் நாட்கள்
அலுக்காத பேச்சும்
அனுப்பிக்கொண்டே இருக்கும்
குறுஞ் செய்திகளும்
நம் காதலின்
அன்றாட
அடையாளங்கள்
அலைபேசியிலேயே
கொஞ்சிக் கொள்வதும்
எப்போது தான்
கல்யாணமோ என்று
ஏக்கப் பெருமூச்சு
விட்டுக் கொள்வதும்
நம் மேடையில்
அன்றாடம்
அரங்கேறுபவை
திங்கள் முகத்தாளை
திங்கள் ஒரு முறை
சந்திக்கும் போது
சர்க்கரையாய்த் தித்திக்கும்
நம் அன்றைய பொழுது
அந்தி மயங்கும்
வேளையில்
பிரியாவிடை பெற்று
'போய்வரவா' என்று
கேட்கும் போது
கேளாமலே
கண்ணீர்த் துளியிரண்டு
துளிர்த்து நிற்கும்
நம் இருவர் கண்களிலும்
உன்னை
வழியனுப்பி வைத்துவிட்டு
உள்ளமதையும்
உன் பின்னால்
காவலுக்கு அனுப்பி விட்டு
உடலை மட்டும்
சுமந்து கொண்டு
ஊர் வந்து சேர்கையில்
மறுபடியும்
ஆரம்பிக்கும்
அலைபேசியின் கொஞ்சல் ஒலி
மீண்டும்
தொலைந்து போவோம்
நாம்
நமக்குள்ளும்
நம்மை இணைக்கும்
அலைபேசிக்குள்ளும் ................
வருங்கால கனவு தேவதைக்கு "சிகரம் பாரதி" தரும் பாத காணிக்கை.
*****************************
கவிதைக்கொரு கீதம்:
சொல்லிட்டாளே அவ காதல.......
சொல்லும் போதே சுகம் தாளல ........
திரைப்படம்: கும்கி
நன்றி: YOUTUBE.
பதிவு வெளியிடப்பட்டது: 20 நவம்பர், 2012
திருத்தப்பட்டது: 10 பெப்ரவரி , 2019
இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான 'மெட்ரோ நியூஸ்' இன் வாரப் பதிப்பில் 'முத்திரைக் கவிதைகள்' பகுதியில் 08-02-2019 அன்று 'மெட்ரோ Plus - B 12' பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அருமை... ரசித்தேன்...
ReplyDeleteநல்ல கண்ணொளி... நன்றி...
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி உள்ளமே. முதல் ஆளாய் வந்து கருத்திட்டமைக்கும் நன்றிகள்.
Deleteதொலைந்து விட்டால், நன்றாகத் தான் இருக்கும்... தொலைந்து விடுங்கள், யாராலும் காண இயலாதபடி...
ReplyDeleteஅருமை...
நிச்சயமாக.... எல்லோருமே என்றோ ஒரு நாள் காதலுக்குள் தொலைந்து போகத் தானே போகிறோம்? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உள்ளமே.
Deleteகாதலிக்கும் பொழுது
ReplyDeleteபேசுவது இனிமையாகத் தான் இருக்கும்....
கவிதை அருமை பாரதி.
கவிதை உணர்வு பொய்யல்ல.உண்மையென உரைக்க ஒரு துளி நீர் உன் கண்ணில்....என் கண்ணிலும்...அருமை பாரதி.திங்கள் முகத்தாளை
ReplyDeleteதிங்கள் ஒரு முறை ..... ரசித்தேன் !
கவிதை மிகவும் அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
காதல் என்றாலே அப்படித்தான்!
ReplyDeleteஅருமை
Kathal enpathu kallaraithottam
ReplyDeleteஅருமையான காணொளி இணைப்பு
ReplyDeleteஅழை பே சி காத லர்களுக்கு அருமையான கவி, வெற்றிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் கவி வரிகளின் மூலம் என் நிஜ வாழ்வை நினைத்துப் பார்த்தேன். நன்றி . கவி பயணம் தொடர என் வாழ்த்துக்கள் .
ReplyDeleteஇது அம்மாவின் கைசியோ!
ReplyDeleteஇனிமையான பாடலுடன் பதிவும் அருமை பாராட்டுகள்
ReplyDelete