கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09

வணக்கம் அன்பு வலைத்தள வாசக உள்ளங்களே! அனைவரும் நலம் தானே? நீங்கள் அனைவரும் "வருமா? வராதா?" எனக் காத்திருந்த "கல்யாண வைபோகம்" கதைத் தொடர் இன்று முதல் மீள ஆரம்பிக்கிறது. ஆனால், இத்தனை நாள் இடைவெளியில் தான் அடுத்த பகுதி வெளியாகும் என்கிற உத்தரவாதத்தை என்னால் வழங்க முடியாதுள்ளது. மன்னிக்கவும். ஆனால் 10 முதல் 15 நாள் இடைவெளியில் கட்டாயம் வெளிவரும் என்று உறுதியளிக்கிறேன். "சிகரம்" வலைத்தளத்திற்கு அதிகளவு வாசகர்களை கொண்டு வந்து சேர்த்ததே இந்த "கல்யாண வைபோகம்" தொடர் தான் என்பதை நான் சற்றும் மறந்திடவில்லை. ஆதலால் தான் எனது தொழில் நிமித்தம் இடைநிறுத்தப்பட்ட இத்தொடரை மீண்டும் இன்று முதல் வெளியிட உத்தேசித்துள்ளேன். வாசிங்க! ரசிங்க! கருத்துக்கள பகிர்ந்து கொள்ளுங்க!

இரண்டாவது விடயம், நான் எனது தோழிக்காக அவரது கவிதைகளை வெளியிட்டு வரும் வலைத்தளமான "கவீதாவின் பக்கங்கள்" வலைத்தளத்தில் இன்று புதிய கவிதை ஒன்று வெளியாகியுள்ளது. இவ்வலைத்தளத்தின் மேலால் அதற்கான இணைப்பு உள்ளது. சென்று படித்து எனது தோழிக்கும் உங்கள் ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வாங்க போகலாம் "கல்யாண வைபோகம்" காண..........!!!

பகுதி - 01

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01

பகுதி - 02

பகுதி - 06

பகுதி - 07

 
 


பகுதி - 09

அன்றைய இரவு இளமை தனது விளையாட்டை என்னில் காட்டத் துவங்கியிருந்தது. திவ்யாவைப் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் என் உறக்கத்தை ஆக்கிரமித்திருந்தன. அவளுடைய பெயரைத் தெரிந்துகொண்டதும் அவளுடன் ஓரிரு நிமிடங்கள் உரையாடக் கிடைத்ததும் என் மனதுக்குள் குதூகலத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன. 'அட, இதுதான் காதலா......? தெரியாமப் போச்சே...........!'. இத்தனை மகிழ்ச்சிக்குள்ளும் கொஞ்சம் சோகமும் இழையோடிக் கொண்டுதான் இருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, திவ்யா பதிலேதும் சொல்லாமல் போனது. அடுத்தது, நாளை திவ்யாவிடம் பேசக் கூடாது என்று நண்பர்கள் சொன்னது. ஒருவேளை திவ்யாவுக்கு என்மேல் விருப்பம் இருந்து நாளைக் காலை என்னைக் காணாமல் தவித்தால் அவளுடைய பரீட்சை பாதிக்கப்படுமே என்பது தான் என் சிந்தனையாக இருந்தது. ஆனால் நண்பர்களை மீறி செயற்படவும் முடியாது. மகிழ்ச்சி கரைந்து போய் சிந்தனை மட்டுமே எஞ்சியிருந்தது. 

இரவு எத்தனை மணிக்கு உறங்கிப் போனேன் என்றே தெரியவில்லை. ஆனால் ஆறுமணிக்கெல்லாம் எழுந்துகொண்டேன். விடிய விடிய பரீட்சைக்குத் தயாரான மாணவனைப் போல் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன. உடனே எழுந்து அம்மாவின் தேநீரைப் பருகிவிட்டு அவசர அவசரமாகத் தயாராகி அதே இடத்தைச் சென்றடைந்தேன். அந்த இடத்திலிருந்த மரத்தடிக்குப் பின்னால் நாங்கள் ஒளிந்து கொண்டோம்.

பேரூந்தை விட்டு இறங்கிய திவ்யா சற்று வேகமாக நடந்து, பின் நடையில் ஒரு தளர்வைக் காட்டினாள். என் வரவை எதிர்பார்க்கிறாள் என்று உள்ளுணர்வு சொன்னது. ஆனால் நிற்கவோ திரும்பிப் பார்க்கவோ இல்லை என்பது ஏமாற்றமளித்தது. அவள் பாடசாலைக்குள் போனதும் சங்கம் பேச ஆரம்பித்தது.

"என்னடா அவ பாட்டுக்கு போறா?" - முரளி 
"அவளுக்கு உன் மேல லவ் இல்லடா........" - விசு 
"இல்ல.. இருக்குடா...." - சுசி 
"எப்படி?" - முரளி 
"பகல் அவ திரும்பிப் போகும் போது பாரேன்" - சுசி 
"விளையாடாத சுசி...." - நான் 
"பார்டா........ மாப்பிள்ளைக்கு கோவமெல்லாம் வருது..........." - முரளி 
"இப்பவே காதலி மேல அவளோ பாசமா?" - விசு 
"சும்மா இருங்கடா.... விளையாட்டு வினையாகப் போகுது.........." - நான் 
"என்ன ஆனாலும் நாங்க இருக்கோம் ஜெய். பாத்துக்கலாம்." - விசு 
"சரிடா....." - நான் 

அத்தோடு எங்கள் காலை நேரச் சந்திப்பு முடிந்து போனது. அதன் பின் எல்லோரும் அவரவர் வழியில் பிரிந்து போக, மனம் உடன் துணைவர வீடு நோக்கி சிந்தனைகளுடன் நடைபோட்டேன் அன்று மாலை நடக்கப் போவதை சற்றும் அறியாமல்..............

                                                   *********************************

நேர நெருக்கீடு காரணமாக இதன் மிகுதிப் பகுதி நாளை இதே நேரம் உங்கள் கணிப்பொறிகள் தேடி வந்திடும். இணைந்திருங்கள். சந்திப்போம்.

Comments

  1. ஓ, சந்திக்களைன்னா பரீட்சை பாதிக்கப் படுமா???
    இப்படில்லாம் இருக்காங்களா???

    நீண்ட நாட்களுக்குப் பிறகு, கல்யாண வைபோகம் வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி...
    வாழ்த்துகள், தொடர்ந்து வெளிவரட்டும்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!