அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்!
வணக்கம் வாசக உள்ளங்களே! இன்று நாம் அடுத்த தலைமுறைக்கான அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றிப் பார்க்கப் போகிறோம். இன்றைய அரசியலானது சாக்கடை அரசியல் என்றே அழைக்கப்படுகின்றது. இந்தநிலை மாறாதா என்கிற ஏக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் நம்மால் என்ன முடியும் என்கிற இயலாமை எண்ணம் காரணமாக வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக்கொள்கிறோம். வாக்குரிமை நம்கையில் இருக்கிற வரையில் நம்மால் அரசியலில் எதுவும் செய்ய முடியும். அதற்கு சமூகத்தின் ஒற்றுமையும் துணிச்சலும் தேவை. நமக்கான எதிர்கால அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொண்டால் விரைந்து செயலில் இறங்க வசதியாயிருக்கும் அல்லவா? பதிவில் தேவையான இடங்களில் பொருத்தமான திருக்குறள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
1.கல்வி அறிவு
நம் அரசியல் வாதிகளில் பலருக்கு கல்வியறிவு என்பதே கிடையாது. இதனால் அமைச்சுப் பதவிகள், அரசாங்க சொத்துக்கள் மற்றும் மக்கள் வரிப்பணம் என்பன துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. ஆகவே அரசியல்வாதியொருவர் தேர்தல் வேட்புமனு சமர்ப்பிக்கும்போது அவரது கல்வித்தகைமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தப்படல் வேண்டும். அரசியல் வாதியொருவருக்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தகைமை அரசினால் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.
இதற்கும் குறளுக்கும் என்ன தொடர்பு?
மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.
யாவுள முன்னிற் பவை.
நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.
[பொருட்பால், அமைச்சு]
குறள் அப்படி மட்டுமில்ல, இப்படியும் சொல்கிறதே?
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.
நீங்கா நிலனாள் பவற்கு.
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.
[பொருட்பால், இறைமாட்சி]
இது மட்டுமில்ல, இன்னும் இருக்கு.....
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
தொகையறிந்த தூய்மை யவர்.
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
[பொருட்பால், அவை அறிதல்]
இப்போ புரிஞ்சுதா?
இன்னும் இருக்கு.... ஆனால் நேர நெருக்கீடு காரணமாக மிகுதியை நாளை பார்க்கலாம். அதுவரை உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்....
அன்புடன்
சிகரம்பாரதி.
Good... Article frind. Kural also well...
ReplyDeleteகுறள்களுடன் நல்ல பகிர்வு...
ReplyDelete