Monday, 12 November 2012

வெற்றியின் தோல்வி - நடந்தது என்ன?

46/8
வணக்கம் அன்பு வாசகர்களே! எனது தொடர் பதிவுக்கு நீங்கள் அனைவரும் வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றிகள் பல. நாம் இந்தத் தொடர் பதிவினூடாக இலங்கையின் பிரபல தனியார் தமிழ் வானொலியான வெற்றி வானொலிக்குள் எழுந்துள்ள சிக்கல் நிலைமை தொடர்பாக பேசி வந்திருக்கிறோம். இன்று ஒரு விரிவான தனிப் பதிவினூடாக மேலதிகத் தகவல்கள் சிலவற்றுடன் வருகிறது நம் பதிவு. வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

பயணம் - 14 
முதலில் வெற்றி வானொலியின் (முன்னாள்) பணிப்பாளர் லோஷன் அவர்களின் கருத்து:
"நண்பர்களே, ரசிகர்களே... 
உங்கள் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றிகள்...
நலம் விசாரிப்புக்கள், ஆதங்கங்கள், எங்கள் 
வருத்தங்களைக் களைய என்று நீங்கள் அனுப்பி வைத்த 
அத்தனை தனி மடல்கள், smsகள், FB Messages அத்தனைக்கும் 
தனித்தனி பதில்கள் அனுப்ப மனமும்,
 நேரமும் இடம் கொடுக்கவில்லை.

அனைவருக்கும் பொதுவாக எனதும் 
எமதும் Facebook Status Updates பேசுகின்றனவே. 

என்ன நடந்தது என்று இதுவரை அறியாதோர் முன்னைய 
எனது Fac
ebook status updates பார்க்கவும்...

உங்கள் தன்னலம் கருதா நட்பும் அன்பும் இத்தனை பரிவும் பெற்ற 
என்னை/எம்மை விட உலகில் பேறு பெற்றவர்கள் என்று வேறு 
யாரையும் நான் கருத முடியாது.

அடுத்த கட்டம், புதிய நகர்வு பற்றி நீங்கள் எல்லோரும் கேட்டதற்கு....

தனியாக நான் எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை; என்னோடு 
சேர்ந்து உண்மையாக உழைத்த நண்பர்களுக்காகவும் 
அவர்களோடு சேர்ந்ததாகவும் நல்ல, 
தீர்க்கமான முடிவு விரைவில்.
அவர்களையும் உங்களையும் மறந்தால் நானும் 
நன்றி மறந்த கூட்டத்தில் ஒருவனாவேன்.

நிச்சயம் உங்களுக்கும் அறிவிப்பேன்.

அத்துடன் எமக்கானவற்றைக் கோரும் 
நடவடிக்கைகள் தொடர்கின்றன.

எனதும்/எமதும் பயணம் உங்களோடு தொடரும்.

"தேடிச் சோறுநிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி,
மனம்வாடி துன்பமிக உழன்று,
பிறர் வாட பல செயல்கள் செய்து,
நரை கூடி கிழப்பருவம் எய்தி,
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"

வெற்றி வானொலியில் நிலவும் முரண்பாடுகள் குறித்துப் பேசும் ஒரு வலைப் பதிவு......

வெற்றி fm சிலரிடம் சில கேள்விகள்..


வெற்றி வானொலியின் முக நூல் பக்கங்களில் இருந்து அதன் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தடை செய்யப்பட்ட போது லோஷன் பதிவு செய்த கருத்து:

"

Vettri FM Group என்பதை உருவாக்கி ஒரு தேன் கூடு 

போல அதை சேர்ப்பதில் என்னுடனும் சேர்ந்து 

கஷ்டப்பட்டு உழைத்த Pradeep Sunthareswaran 

இப்போது அதிலிருந்து நீக்கப்பட்டு தடை 

செய்யப்பட்டுள்ளார். 
நிர்வாகியாக இருந்த நான் என்னைக் கேட்காமலேயே 

அதிலிருந்து தனியொரு நிர்வாகியாக 

உள்ளவரால் நீக்கப்பட்டுள்ளேன்.


எனது நண்பர்கள், நல்ல நேயர்கள் பலர் blocked. 
அப்படியானால் நான் மட்டும் ஏன் 

விட்டுவைக்கப்பட்டுள்ளேன்??

நான
் செய்த நிகழ்ச்சியான விடியலின் Facebook Page ஐத் 

தவிர ஏனைய பக்கங்களில் இருந்தெல்லாம் அகற்றப்பட்டுள்ளேன்.

நாங்கள் நாம் நேசித்த, இன்னும் நேசிக்கும் 

வெற்றியை எந்தவிதத்திலும் சேதப்படுத்தக் கூடாது 

என்று எதையும் செய்யாமல் இருக்கையிலேயே இப்படியா?

நல்லா வருவீங்க தம்பிமாரே.....

வாழ்த்துக்கள்...

மனம் போல வாழ்வு."


வெற்றி வானொலியில் இருந்து நீக்கப் பட்டுள்ளவர்களுக்காக குரல் கொடுக்க உருவாக்கப் பட்டுள்ள 'We support (ex) Vettri Staffஎன்ற பெயரிலான முக நூல் பக்கம் தரும் தகவல் இது:

"வெற்றி FM இலுள்ள அனைவரும், வெற்றியின் இரசிகர்கள் 
அனைவரும் போராடுங்கள்.
இன்று சிலருக்கு நடந்தது நாளை உங்களுக்காகவும் நடக்கலாம்.

உங்களின் உரிமைகளுக்காக முகாமைத்துவத்துடன் 
போராடியவர்கள் வெற்றியிலிருந்து மரியாதையெதுவுமின்றி 
வெளியேற்றப்பட்ட பின்னர் அந்நிறுவனத்தில் தொடர்ந்தும் 
பணிபுரிய நீங்கள் முடிவெடுத்தால் நாளை இதே நிலை
 உங்களுக்கு நடக்காது என்பது என்ன நிச்சயம்?

சிந்தியுங்கள்....

வெற்றியின் Facebook குழு தற்போது வெளிநபர்களிடம் சென்றுள்ளது.
அக்குழுவின் Admin பதவியை மற்றவர்களிடமிருந்து 
பறித்த ஹிஷாம், தற்போது தனது Facebook கணக்கை 
deactivate செய்துள்ளார்.
அதன் காரணமாக குழுவின் admin பதவியை வெளிநபர்கள் 
சாதாரணமாகக் கைப்பற
்ற முடியும் என்று நினைக்கிறோம்.

இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்பது யார்?
அந்தக் குழுவை வேறு யாராவது கைப்பற்றி அழித்தால் 
அதை உருவாக்கி, செயற்படுத்தியவர்களின் உழைப்பு என்னாவது?
யார் பதில் சொல்வது?"

முடிவாக வெற்றி வானொலியின் அறிவிப்பாளரும் வெற்றி வானொலியில் இடம்பெற்று வரும் பணிப் புறக்கணிப்பில் பங்கெடுக்காது பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சியான வர்ணம் தொலைக்காட்சியில் தற்போது பணியாற்றி வருபவருமான ஹிஷாம் அவர்கள் தரும் நீண்ட................................... விளக்கம்:

"
"எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே"

என்றும் கலையை நேசிக்கும் அன்புள்ள நண்பர்களுக்கு,

கடந்த ஒரு சில வாரமாக பல நண்பர்கள் வேண்டுமென்றே ஒரு சிலரால் ஏவிவிடப்பட்டு நாகரீகமாகவும் அநாகரீகமாகவும் கேள்விகளை தொடுத்திருந்தார்கள். அதற்கெல்லாம் பதில் சொன்னால் பலரும் மனம் நோகவேண்டி வந்து விடலாம் என்ற ஒரு காரணத்திற்காக நிறையவே பொறுமையாக இருந்து விட்டேன்.

என் மீது நீங்கள் கொண்ட பாசத்தை அவமதிப்பது பண்புள்ள ஒரு ஊட
கவியலாளனுக்கு அழகல்ல என்பதால் என்னுடைய கணக்கு முடக்கப்பட்டு மீளக்கிடைக்கப்பெற்ற இத்தருணத்தில் முதலும் முடிவுமாய் ஒரு விளக்கக் கடிதம் தருகிறேன்.

வெற்றி வானொலியின் வளர்ச்சி தனி மனித முயற்சியால் விளைந்த ஒன்றல்ல. இதில் பலரது பங்களிப்பும் இருக்கிறது. நான் இன்றும் தொழில் ரீதியாக மாத்திரம் மதிக்கும் லோஷன் அண்ணா, அருந்ததி அக்கா, பிரதீப் இவர்களோடு இன்னும் பலரது வியர்வை வெற்றியின் வெற்றியில் இருக்கிறது.

வெற்றி அணியில் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கிறது. வெற்றியே வாழ்க்கை என்று தங்கள் குடும்ப வாழ்க்கையையும் மறந்து உழைத்திருக்கிறோம். எமது 5 வருட கால உழைப்பு ''வெற்றி''. இந்த வருடம் சந்திக்கப்பட்ட சவால் புதிய ஒன்றல்ல ஏற்கனவே பல தடவை இது போல பல இடர் நிறைந்த காலங்களில் ஒன்றாக பயணித்திருக்கிறோம்.

கடந்த மே மாதம் முதல் வர்ணம் தொலைக்காட்சியில் முழு நேர நிகழ்ச்சி பொறுப்பதிகாரியாக நிர்வாகம் என்னை நியமித்தது. வர்ணம் தொலைக்காட்சி இன்னுமொரு முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் ஒரு அலைவரிசை. தொலைக்காட்சி பொறுப்புகள் அதிகம் என்பதால் வானொலியில் என் நிகழ்ச்சியில் மாத்திரமே என்னால் அதிக கவனம் செலுத்த முடிந்தது.

"We Should Over come the obstacles"
இம்முறை சவால்கள் இருக்கும்போது தனிப்பட்ட முறையில் ஒரு மடல் அனுப்பினேன் அது அணியின் அனைவருக்கும் அனுப்பப்பட்டது. வந்த பதில்கள் 'இவ்வளவு காலமும் கவலைப்படாதவர்கள் இப்போது வெற்றி பற்றி கவலைப்படுகிறார்கள்;.'
'நழுவிப்போய் பாதுகாப்பாக இருப்பவர்களாலும் வெளியில் இருப்பவர்களாலும் புரிந்து கொள்ள முடியாது.'
'எங்கிருந்து வந்தார் இந்த நலன் விரும்பி.'
அதற்கு பிறகு கருத்து சொல்வதில் இருந்து முழுமையாக ஒதுங்கிக்கொண்டேன்.

இம்முறை பணிப்பாளரால் எடுக்கப்பட்ட முடிவு சம்பந்தமாக அவர் என்னுடன் எதுவும் பேசவில்லை. அதற்கு நான் இணங்கவுமில்லை. பலர் வேலை விடுமுறையில் இருக்கும் போது நிகழ்ச்சி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன். ஆனால் இறுதி வரை காலை நேர நிகழ்ச்சியோ அந்த பெயரையோ நான் உச்சரிக்கவில்லை(ஒரே ஒரு நாள் விளம்பரம் மாத்திரம் வாசித்தேன்.). நவம்பர் 1,2,3 ஆகிய மூன்று தினங்களிலும் இதை சமரசப்படுத்திவைக்க முயற்சித்தேன். மூன்று தினங்களாக லோஷன் அண்ணாவுடன் தொலைபேசியில் பேசினேன். பேச்சுவார்த்தை தோற்றுப்போனது.

வெற்றிடமான பதவிக்கு நான் ஆசைப்படவுமில்லை யாரும் என்னை கேட்கவுமில்லை. எனக்கு அனுபவம் போதாது என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அத்தனையும் எதற்காக????

நான் நேசிக்கும் நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டினீர்கள்...

மத ரீதியாக அவமானப்படுத்தீனீர்கள்.. (எல்லாம் தெரியும் சிலரது கண்களுக்கு அவை மாத்திரம் தெரியாதது வியப்பளிக்கிறது.)

FB கணக்கை முடக்கி. வெற்றி Group மற்றும் நண்பனிடம் சொல்லுங்கள் போன்ற பக்கங்களில் மாற்றம் செய்தீர்கள்..

தனிப்பட்ட கடிதங்களை பிரசுரிப்பதாக சொன்னீர்கள்..

அதிரடி புதிரடி நிகழ்ச்சியில் நேயர்களுக்கு சேர வேண்டிய பணத்தை நான் எடுத்ததாக சொன்னீர்கள் - கூட இருந்த உண்மை தெரிந்த ஒருவரே இன்பொக்ஸ் மூலமாக ரகசியமாக பலருக்கும் தகவல் அனுப்பினார்.

அத்தனையும் எதற்காக??

இறைவன் தந்த நம்பிக்கையை யாராலும் நெருங்கவும் முடியாது. வாழுங்கள் வாழ விடுங்கள்!!

ஏற்கனவே முடக்கப்பட்ட எனது Gmail கணக்கிற்குமாய் சேர்த்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்திருக்கிறேன். சட்டம் அவர்களை தண்டிக்கட்டும்.

இனியும் வரும் சந்தேகங்களும் கேள்விகளும் பொறுப்பானவர்களை சென்றடையட்டும்..

எல்லோருக்கும் நியாயம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

கலையை நேசிக்கும் எல்லோரையும் நேசிக்கிறேன்."

வெற்றி வானொலியின் மிகத் தீவிர அபிமானியாக இருந்தவன் நான். வெற்றி வானொலிக்குள் இப்படியொரு குழப்பகரமான நிலை வரும் என்றோ அல்லது அந்த நிலைமை ஊரார் வாய்க்கு அவல் ஆகுமேன்றோ நான் நினைத்திருக்கவில்லை. இனி வெற்றி வானொலியினதும் அதன் (முன்னைய) அறிவிப்பாளர்களினதும் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி மட்டுமே மிஞ்சி நிற்கிறது. இலங்கையில் சகல இனத்தவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என வலியுறுத்தப் பட்டு வரும் இச்சூழ்நிலையில் சிங்கள முகாமைத்துவத்தினால் ஒரு தமிழ் வானொலியின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளதை என்னவென்பது? இது தான் இன ஒற்றுமையா? இது தான் சமாதானமா? ஊடகத் துறையினருக்கே இந்தக் கதியென்றால் சாமானியர்களான நமக்கு? பார்க்கலாம். இது இன்னும் எவ்வளவு தூரம் நீளும் என்று? தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்று இருக்கத் தானே வேண்டும்? வெற்றியின் தோல்வி - கேள்விக்குறி????????????

மீண்டும் நாளை மற்றுமொரு பதிவுடன் சந்திப்போம். 'சிகரம்' வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

4 comments:

 1. எனக்கு இந்த வெற்றி வானொலி பற்றி ஏதும் தெரியாது, இருப்பினும் தாங்கள் எழுதியுள்ளது படிக்கத் தூண்டுகிறது நண்பா... இந்த வானொலிப் பொட்டிய விட்டுட்டு உங்க கல்யாண வைபோக நாவல எழுதுங்களேன், கோடி புண்ணியமா போகும்...

  ReplyDelete
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...