Thursday, 8 November 2012

46/4

வணக்கங்கள் பல, அன்பு நெஞ்சங்களே.........
நம்ம தொடர் பதிவு ஆஹா ஓஹோன்னு போய்கிட்டிருக்கதுல மிக்க சந்தோஷம். அண்மைக்காலமாக எனது நேர நெருக்கீடு காரணமாக என்னால் தங்கள் கருத்துரைகளுக்கு பதில் வழங்க முடியவில்லை. மனமார்ந்த மன்னிப்பைக் கோருவதுடன் தங்கள் கருத்துரைகளே என்னை வளப்படுத்தும் கருவியாதலால் வருபவர்கள் தங்கள் கருத்துக்களை தவறாது பதிவு செய்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது டுவிட்டர் (twitter) அன்பர்கள் @newsigaram என்ற எனது கணக்கை பின்தொடரவும் கருத்துக்களை பதிவு செய்திடவும் இயலும் என்பதை இத்தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். சரி... நம்ம பயணத்தைத் தொடரலாமா?

பயணம் - 08
நாம் நமது இரண்டாம் பதிவில் (46/2) இலங்கையின் பிரபல தமிழ் வானொலியான வெற்றி வானொலியில் நிலவும் சிக்கல்கள் குறித்துப் பேசியிருந்தோம். அவை பற்றி அவ்வானொலியின் தற்போதைய முகாமையாளரான லோஷன் அண்ணா தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த கருத்துக்களை அப்படியே இங்கே தருகிறோம்.

"நான் இப்போது அமைதியாகவே இருக்க விரும்புகிறேன்.
என்ன நடக்கிறது என்று உங்களில் பலருக்கு நன்றாகவே தெரிகிறது.
அன்பு நண்பர்களே, நேயர்களே, உங்கள் அன்பு, அனுதாபங்கள், ஆத்திரம் போன்றவற்றை நான் ஆதாயமாக்கி குளிர் காய விரும்பவில்லை.

ஆனால் எனது நேர்மையான உழைப்புக்கான கோரிக்கைகளும், என் சக நண்பர்கள், தொழிலாளர்களின் உரிமைக்கான, ஊதியத்துக்கான நியாயமான வேண்டுகோள்கள், கோரிக்கைகளும் கிடைக்கும்வரை விடப்போவதில்லை.

உரியவர்கள் எனக்கும், எமக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

எனக்கு பதில் சொல்லாமல் இருப்பதாலோ, எங்கள் மனுக்களுக்கு பதில் அனுப்பாமல் இருப்பதாலோ, அல்லது என்னுடைய அலுவலகப் பாவனைக்கான செல்பேசியின் இணைப்பைத் துண்டித்து வைத்திருப்பதாலோ நான் பணிந்துபோகப்போவதில்லை.

இந்த விடயத்தில் Brand என்பதை விட எங்கள் பலரின் வாழ்க்கையும் எதிர்காலமும், நாம் தொடர்ந்து ஏமாற்றப்படாமல் இருப்பதுமே முக்கியம் என்பதை இன்னும் சிலர் புரியாமல் இருப்பதே வேதனை.

நான்(ம்) உருவாக்கி வளர்த்த அன்புக்குரிய 'வெற்றி' மீது இருக்கும் விருப்புத் தான் இந்த அமைதிக்கான, காத்திருத்தலுக்கான முக்கிய காரணம் என்பதும் உங்களுக்குப் புரியாத ஒன்றல்ல.

பலரின் வாழ்க்கை விடிவுக்காக சில விடியல்கள் விடியாமல் இருப்பதால் குறைவொன்றும் இல்லை.

உண்மையாக உழைத்து அந்தக் கோபத்தை எனக்காக அடக்கி வைத்திருக்கும் என் சக நண்பர்களுக்கும் உண்மையாக இருப்பவர்களுக்கும் அன்பு காட்டுவோருக்கும் நன்றிகள்.

- உங்கள் அநேகரின் தனித் தனிக் கேள்விகளுக்கான பதிலாக -"

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு#

பயணம் - 09
முக நூலில் படித்த கருத்து - தங்கள் சிந்தனைக்கு:
படிக்காதவன் பட்டிக்காட்டுல இருந்து கத்தி அருவாள் எடுத்துக்கிட்டு ஜாதி சண்ட போடுறான்..
படிச்சவன் சிட்டில கம்யூட்டர் முன்னாடி உக்காந்துக்கிட்டு இன்டர்நெட் ஃபேஸ்புக் மூலமா ஜாதி சண்ட போடுறான்..
இடமும், உடையும், பொருளும் தான் வித்தியாசம்.. ஆனால் மனங்களில் இன்னும் காட்டுமிராண்டியாய் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..

பயணம் இன்னும் தொடரும் ..........

4 comments:

 1. நல்ல பல கருத்துக்கள்... தொடர்கிறேன்...

  ReplyDelete
 2. முகநூலில் பொறுக்கிய கருத்துக்கள் ரொம்பச் சரி

  ReplyDelete
 3. எவ்வளவு அறிவியல் வளர்ச்சியானாலும் அதிலும் எப்படி காட்டுமிராண்டிகளாக இருப்பது என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள்

  ReplyDelete
 4. கிராமங்களில் புதிதாக சாலை போடுவார்கள்
  பழைய மேடும் பள்ளமும் அப்படியே இருக்கும்
  கொஞ்சம் உயரமாக
  படிக்காதவர் படித்ததும் தன் குறுகிய உணர்வை
  கொஞ்சம் நாகரீகமாக காண்பித்துக்க கொள்கிறார்கள்
  அவ்வளவே
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?

பிரபல பதிவுகள்

Featured post

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்? #BB WEEK 01 NOMINATION

பிக் பாஸ் தமிழ்  பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01  18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...