மறுபடியும் வருவேன்
கொஞ்சம் பேசவேண்டும்
என் உயிர் - இந்த
உலகத்தை விட்டுப்
போவதற்கு முன்பதாக
இருபது நிமிடங்களுக்கு முன்னால்
இஸ்ரேலிய விமானங்கள்
வீசிய குண்டுகளினால்
வீழ்ந்து கிடக்கிறேன்
என் உயிர் - இந்த
உலகத்தை விட்டுப்
போவதற்கு முன்பதாக
இருபது நிமிடங்களுக்கு முன்னால்
இஸ்ரேலிய விமானங்கள்
வீசிய குண்டுகளினால்
வீழ்ந்து கிடக்கிறேன்
எங்கள் குடும்பத்தில்
எச்சமாயிருந்த நானும்
இராணுவத் தாக்குதலுக்கு
இரையாகிக் கிடக்கிறேன்
பலஸ்தீனத்தின்
பள்ளிக்கூடங்கள் எல்லாம்
பிணங்களைச் சுமக்கும்
இடுகாடாகிப் போயின
கனவில் கூட
கல்வி கற்க உரிமை இல்லை
சிறுவர்கள் எங்களுக்கே
சிரித்துப் பேச மனமில்லை
நாங்கள் இறந்தும்
வாழும் பிணங்கள்
எங்களுக்கு இல்லை
இனிமையான கணங்கள்
அமைதி என்பதே - எங்கள்
அகராதிதனில் இல்லையாமே
பிறக்கும் போது திறக்கும் விழிகளை
இறக்கும் போதுதான் மூடுகிறோம்
நித்திரைக்கும் நாங்கள் எதிரி
நித்தமும் இல்லை நிம்மதி
ஐ.நா வும் கவனிக்கவில்லை
ஐவேளை தொழுதும் பலனில்லை
அமைதிக்கான விருது பெற்ற
அமெரிக்க அதிபரே
எங்கள் மீது மட்டும்
ஏன் இத்தனை கோபம்
ஒன்பது வயதில் எனக்கு
ஒன்பது நாளேயான ஒரு பிஞ்சு
அறுபது வயது முதியவர்கள் என
அனைவருக்கும் பகிரப்படுகிறது சாவு
ஆயிரம் வருடம் வாழ
வரம் கேட்கவில்லை
அரைநொடியே வாழ்ந்தாலும்
அமைதியான சாவு வேண்டும்
காஸாவின் மூலை முடுக்கெல்லாம்
கண்கொள்ளாக் காட்சி
காவிரி நதியென
கரை புரண்டோடுகிறது இரத்தம்
உலக யுத்தத்தை எதிர்த்த
உலகம் காஸாவின் யுத்தத்தை
வேண்டும் என்கிறதா
வேதனையிலும் வேதனை
ஜனங்களின் மனமறியாத
ஜனாதிபதிகளே - இந்த
பிஞ்சு மொழியின்
பிதற்றலுக்கு செவி கொடுங்கள்
உலகின் காவலர்கள் என
உவகை கொள்வோரே
எங்களுக்கும் மனம் உண்டென
ஏற்றுக்கொள்ளுங்கள்
பலஸ்தீனத்தில்
பலியாகும் கடைசி உயிர்
நானாக இருக்க வேண்டும்
நாளைய புலர்வேனும் நல்லதாகட்டும்
போகிறேன் - உங்களால்
சாகிறேன்
பலஸ்தீனம் அமைதி பெறும் நாளில்
மறுபடியும் பிறந்து வருவேன்
அன்பாகக் கொஞ்சம் வாழ
அமைதியான இரவினை ரசிக்க
மனம் விரும்பும் கல்வி கற்க
மறுபடியும் பிறந்து வருவேன்
பலஸ்தீனத்தின் பிரஜையாக......!!!!!
அனைத்தும் ஒரு நாள் மாறும், இப்படியே, இன்று போல் என்றும் இருக்காது!!!
ReplyDeleteகாலம் ஒரு நாள் மாறும்-நம்
ReplyDeleteகவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணிச் சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி தங்களைப்போல்
நானும் அழுகின்றேன்
மனம் தொட்டப் பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நெஞ்சை உருக வைக்கும் துயர் மிஞ்சிய கவிதை! என்றுதான் உலகம் அமைதி காணுமோ?
ReplyDeleteநெஞ்சை உலுக்கிய கவிதை...
ReplyDeleteவலியை உணர்த்தும் அருமையான கவிதை..நன்றி
ReplyDeleteஅருமையான கவிதை வரிகள் சகோ.
ReplyDelete//நித்திரைக்கும் நாங்கள் எதிரி
நித்தமும் இல்லை நிம்மதி //
கீழ் உள்ள ஒரு வரியில் மட்டும் எமக்கு உடன்பாடு இல்லை.
//ஐவேளை தொழுதும் பலனில்லை //
பாலஸ்தீன் ஒருநாள் உறுதியாக வெல்லும் சகோ.
நன்றி !!!
நண்பரே
ReplyDeleteதங்களின் இப்பதிவு எனது வலைப்பூவிலும் இணைக்கப்பட்டுள்ளது நன்றியுடன் http://parithimuthurasan.blogspot.in/2012/11/samithaankonnuduchchu.html
kadavulkaluku kanilayo????/manam kanikirathu Barathi..valthukal.
ReplyDeleteஇந்த கவிதை சிகரம் தொடட்டும்! பலஸ்தீன மக்களுக்கு கைக்குட்டையாகட்டும்! உருக வைத்த கவிதை!
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி