வலைப்பூவில் அப்பாடக்கர் ஆகலாம் வாங்க!
வணக்கம் அன்பு வலைத்தள வாசகர்களே! தொடர் பதிவின் மற்றுமொரு அத்தியாயத்தில்
காலடி எடுத்து வைத்திருக்கிறேன். இத்தருணத்தில் நான் அறிந்தவற்றை
பகிர்ந்துகொள்ளும் நோக்குடன் இதனை எழுதுகிறேன். இன்று தமிழ் மொழியிலான
வலைப்பூக்கள் ஆயிரமாயிரம் உருவாகி இருக்கின்றன. இன்னும் பல புதுமுகங்கள்
அறிமுகமாகிக் கொண்டுமுள்ளனர். ஆனால் இவர்களில் பலருக்கு தமது வலைப்பூவை
சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க இயலவில்லை. எனவே வலைப்பூவை உருவாக்குவதில் இருந்து அதற்கான வழிமுறைகளை சுருக்கமாக
இங்கே தரவிருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் இருந்தால் அவற்றையும்
இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
வலைப்பூ உருவாக்கம்
1.1 மின்னஞ்சல் கணக்கு
வலைப்பூ ஒன்றை எந்தவொரு மின்னஞ்சல் கணக்கையும் பயன்படுத்தி உருவாக்க முடியும். ஆனால் கூகிள் மின்னஞ்சல் கணக்கின் மூலம் உங்கள் வலைப்பூவை உருவாக்குவதே சிறந்தது. ஏனெனில் வலைப்பூ சேவையானது தற்போது கூகிளுக்கு உரித்தானதாகக் காணப்படுகிறது. ஆகவே கூகிள் மின்னஞ்சல் கணக்கை ஆரம்பிப்பதன் ஊடாக பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அவை பற்றி வரும் பிரிவுகளில் பார்க்கலாம்.
1.2 Google Plus சுயவிவரம்
உங்கள் வலைப்பூவுக்கான சுயவிவரத்தை கூகிளின் புதிய அறிமுகமான Google Plus சமூகத் தளத்துடன் இணைத்துவிடுங்கள். இதன் மூலம் உங்கள் பதிவை "வெளியிடு" என்ற தெரிவை சொடுக்கியதுமே Google Plus சமூகத்தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இப்போது பெரும்பான்மையான தமிழ் வலைப்பதிவர்கள் Google Plus உடன் இணைந்துள்ள அதே வேளை இதுவரை இணைந்து கொள்ளத் தவறியவர்கள் உடன் மாற்றிக் கொள்ளுங்கள்.
1.3 Google Plus கணக்கு Google Plus என்பது கூகிளுக்கு சொந்தமான ஒரு சமூக வலைத்தளம் ஆகும். Facebook, Twitter போல இதுவும் உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக பரிணமித்திருக்கிறது. இதன் மூலம் உங்கள் பதிவுகளை அதிக எண்ணிக்கையானோரிடம் கொண்டு சேர்க்க உதவுகிறது.
1.4 திரட்டிகள்
நமது பதிவுகளை வாசகர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் திரட்டிகள் தனியிடம் வகிக்கின்றன. உங்கள் வலைப்பூவில் பதிவிடலினைத் தொடங்க முன்பதாக ஒவ்வொரு திரட்டிகளின் தன்மைகளையும் ஆராய்ந்து உங்களுக்குத் திருப்தி தரக்கூடிய திரட்டிகளில் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் அவற்றின் வாக்களிப்புப் பட்டைகளையும் மறக்காமல் உங்கள் தளங்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.
1.5 சமூக வலைத்தள இணைப்புகள்
தற்போது Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திவரும் தளங்களாகும். இவற்றின் இணைப்புப் பட்டைகளை உங்கள் வலைத்தளங்களில் இணைப்பதன் மூலம் அதிகளவான வாசகர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். அவற்றுக்கான இணைப்புகள் இவ்வலைத்தளத்தில் இணைக்கப் பட்டுள்ள பட்டைகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
இன்னும் ஏராளமான தகவல்கள் காத்திருக்கின்றன. அவை அனைத்தையும் ஒரே பதிவில் இட முடியாது என்பதால் அவற்றை இன்னுமொரு பதிவில் பார்க்கலாம். அதுவரை நீங்கள் அறிந்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம்.

நன்றி சகோ.
ReplyDeleteநல்லது... சுருக்கமான விளக்கம்... நன்றி...
ReplyDeleteஉண்மை தான்...
ReplyDeleteவிளக்கங்களுக்கு நன்றி!
ReplyDeleteஎதிர்பார்க்கிறேன் உங்கள் அடுத்த பதிவுகளை. கற்றுக்கொள்ளலாம் அல்லவா.
ReplyDeleteThanks a lot..
ReplyDeleteநல்லதொரு விளக்கம்... புதியவர்களுக்குப் பயன்படும்...
ReplyDelete