சச்சினுக்குக் கட்டாய ஓய்வு!
வணக்கம் அன்பு சொந்தங்களே! இன்று கொஞ்சம் கிரிக்கெட் பேசலாம் என்று எண்ணினேன். வாங்க போகலாம்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பித்துள்ளது. ஆரம்பமே தடுமாற்றம். மளமளவென விக்கெட்டுகள் சரிய புஜாராவும் அஷ்வினும் அணியை தூக்கி நிறுத்தியிருக்கின்றனர். எதிர்பார்க்கப்பட்டவர்கள் அனைவருமே ஏமாற்றியுள்ளனர். தனது 100 வது டெஸ்ட்டில் சதம் அடிப்பார் என பலராலும் எதிர்வு கூறப்பட்ட ஷேவாக்கும் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்திருக்கிறார். அவரின் இரண்டாவது துடுப்பாட்டத்தின் போதாவது தங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நமது பதிவின் நாயகன் சச்சின் டெண்டுல்கர் வழமை போலவே சொதப்பியிருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் அவரின் பெறுபேறுகள் மிக மோசமாகக் காணப்படுகின்றன. முதல் டெஸ்ட்டில் முதலாவது ஆட்டத்தில் மட்டும் ஆடிய அவர் 13 ஓட்டங்களையும் இந்த போட்டியில் 8 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். மேலும் இவரின் அண்மைய டெஸ்ட் பெறுபேறுகள் இவைதான்.
17, 27 (எதிர் நியூசிலாந்து - 31/08/2012)
19 (எதிர் நியூசிலாந்து - 23/08/2012)
இன்னும் மோசமான பெறுபேறுகளே தொடருமானால் கங்குலியைப் போல அவமானத்துடனேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டி ஏற்படும் என பலரும் அஞ்சுகின்றனர். கிரிக்கெட்டின் தெய்வமாக மதிக்கப்படும் சச்சினுக்கு அப்படியொரு இழிநிலை ஏற்படுவதை எந்தவொரு கிரிக்கெட் ரசிகனுமே விரும்ப மாட்டான். ஆனாலும் அபாரமான சத சாதனையுடன் சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்பதே பலரதும் கருத்தாக இருக்கிறது. 1989 இல் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். அவற்றைப் பட்டியலிடப் போனால் ஒரு பதிவு போதாது. நூறு பதிவுகள் தேவை நட்சத்திர நாயகனைப் பற்றி எழுத.
உங்களுக்காக டெண்டுல்கரின் கிரிக்கெட் பெறுபேறுகளின் சுருக்கம்:
Test | ODI | |
Matches | 191 | 463 |
Runs Scored | 15546 | 18426 |
Not Outs | 32 | 41 |
Batting average | 54.93 | 44.83 |
Batting Strike Rate | 54.08 | 86.24 |
100s | 51 | 49 |
50s | 65 | 96 |
Top score | 248* | 200* |
Ball Bowled | 4186 | 8054 |
Runs Conceded | 2459 | 6850 |
Wickets | 45 | 154 |
Bowling Average | 54.64 | 44.48 |
5 Wickets in innings | 0 | 2 |
மேலும் ஒரு 20-20 சர்வதேச போட்டியில் விளையாடி 10 ஓட்டம், ஐ.பி.எல் இல் 64 போட்டிகளில் 2047 ஓட்டம், Champions League இல் 8 போட்டிகளில் 195 ஓட்டம், முதல் தரப் போட்டிகள் 296 இல் 24602 ஓட்டம், A தரப் போட்டிகள் 551 இல் 21999 ஓட்டம் மற்றும் ஏனைய 20-20 போட்டிகள் 77 இல் 2440 ஓட்டம் என ஒரு மாபெரும் சாதனைப் பட்டியலையே சச்சின் தன்னகத்தே கொண்டுள்ளார்.
மீண்டும் பழைய சச்சினை குறுகிய காலத்திற்கு காணும் எதிர்பார்ப்போடு அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? பதில் சச்சினின் துடுப்பு மட்டையிடம் தான் உள்ளது. சச்சினின் சாதனைப் பயணத்தை முழுமையாக அறிந்துகொள்ள cricbuzz இணையத்தளத்தின் சச்சினின் விசேட பக்கத்திற்கு செல்லுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம்.
அன்புடன்,
சிகரம்பாரதி.
நல்ல அலசல்... பார்ப்போம், அவர் எப்படி விடை பெறுகிறார் என்று... அவர் அவர் தலையில் என்ன எழுதியுள்ளது தானே நடக்கும்...
ReplyDeleteநீங்கள் சொல்வதும் சரிதான்
ReplyDeleteஅருமையான அலசல்
.வாழ்த்துக்கள்
சச்சினுக்கு ஒய்வு கொடுக்கணும் என்று தோணி நினைத்தால் கிடைக்கும்! தோனிக்கு ஒய்வு...!
ReplyDeleteலிட்டில் மாஸ்டர் தான் முடிவு செய்ய வேண்டும்... நல்லதொரு அலசலுக்கு நன்றி...
ReplyDeleteநல்லதொரு அலசல்....
ReplyDelete