Tuesday, 13 November 2012

வாங்க போகலாம்! - 46/9

வணக்கம் அன்பான வாசகர்களே! முகநூல் பக்கம் மூலமும் வலைப்பக்கம் மூலமும் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட அனைவருக்கும் நன்றிகள். மேலும் தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல வழிகளிலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். இன்று தான் எனது முகநூல் பக்கத்தில் நான் பகிர்ந்த STATUS ஒன்றுக்கு அதி கூடிய விருப்புகளைப் (Likes) பெற்றுள்ளேன். ரொம்ப இல்ல, 5 தான். அதுவும் தீபாவளி வாழ்த்துக்கு. இது தான் நமக்கு அதிகம்னா குறைஞ்சது?????? 000000000 தான்....... அதுவும் அடிக்கடி! எப்பவும் அப்படி தான்னாலும் அடிக்கடின்னு சொல்றது கெளரவம் இல்லையா? 'வெற்றி' வானொலி தனது ஒலிபரப்பினை இன்று ஆரம்பித்துள்ளது. வெற்றி வானொலியின் முகநூல் பக்கத்தில் இன்று பதியப்பட்ட எதிர்மாறான கருத்துக்கள் உடன் நீக்கப் பட்டிருக்கின்றன. பார்க்கலாம். என்னதான் நடக்குமென்று.

பயணம் - 15
வாங்க போகலாம்!
"என்னாது? வாங்க போகலாமா? எங்கய்யா கூப்புடுற?" அப்படின்னு கேக்குறீங்களா? நா தியேட்டர்ல படம் பாக்க போகப் போறேன். அதான் உங்களையும் வாங்க போகலாம்னு கூப்பிட்டேன். அது சரி, என்ன படம் பாக்கலாம்? அட, துப்பாக்கி இன்னிக்கு தானே வந்திருக்கு? ஐயோ... வேணாம் சாமி. தீபாவளியும் அதுவுமா ஒரு தற்கொலை முயற்சியா? ஆளை விடுங்கப்பா. அப்போ வேறென்ன? போடா போடி? சும்மா இருங்கப்பு. நமக்கு இந்த டண்டணக்கா டணக்குணக்கா படமெல்லாம் ஆகவே ஆகாது. அப்போ திருத்தணி? அத யாரோ ஆறிப் போன தேத்தண்ணி ன்னு யாரோ சொன்னாங்களே?


இப்போ என்ன தான்யா சொல்ல வர்ற? 'மாற்றான்'? ஆஹா... பயபுள்ள சிக்கிட்டான்யா... சிக்கிட்டான். நா மாற்றான் தான் பாக்கப் போறேன். விரைவில் உங்கள் அபிமான உலகளாவிய தமிழர்களின் ஒரே தெரிவான நோபல் பரிசுக்கும் தெரிவாகியுள்ள ஒபாமா கூட தினமும் படிக்கும் பின்லாடனையே நடுநடுங்க வைத்த தமிழ் வலைத்தளமான 'சிகரம்' ????????????????????????? வலைத்தளத்தில் 'மாற்றான்' திரை விமர்சனம் வெளிவரக் காத்திருக்கிறது. படிக்கத் தயாராகுங்கள். மீண்டும் நாளை...... அப்போ பதிவு முடிஞ்சிருச்சா?????? அட, ஆமாங்க. இது தான் இன்னிக்குப் பதிவு. யாராச்சும் ஒரு கருத்தாவது சொல்லிட்டுப் போங்க. நா படம் பாக்கப் போற விஷயம் உலகம் பூரா தெரிய என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அதான் இப்படி.

அதுக்கு நீ முகநூல் பக்கத்துல எதாச்சும் கிறுக்கிருக்கலாமேன்னு கேப்பீங்க. ஆனா நா என்ன யோசிச்சேன் தெரியுமா? (இன்னுமா யோசிக்கிற?) நாம ஒரு பதிவு போட்டு அந்த பதிவோட லிங்க்க முக நூல்ல பகிர்ந்தா????? எப்புடி??????

சரி... சரி.... கோவப்படாதீங்க. இன்னிக்கு போறேன். ஆனா, நாளைக்கு வருவேன். (மறுபடியுமா?) போயிட்டு வரட்டுமா? (நீங்க இன்னும் பதிவ வாசிக்கிறீங்க?) வணக்கம் வாசகர்களே!

4 comments:

  1. எழுதுங்க எழுதுங்க

    ReplyDelete
  2. // அத யாரோ ஆறிப் போன தேத்தண்ணி // நம்ம ஹாரி பய தாமனி அப்டி சொன்னது அருமையான ஆஸ்கர் படம் அது :-)

    ReplyDelete
  3. வணக்கம் பாரதி.....நானும் வந்திருக்கேன் உங்க பக்கம்.இனிய தீபாவளி வாழ்த்துகள்.சந்திப்போம் இனி அடிக்கடி !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...