இக்கட்டுரை இலங்கையின் தேசிய நாளேடான ‘வீரகேசரி’ இல் 24.02.2008 அன்று கதிர் பகுதியின் 04 ஆம் பக்கத்தில் வெளியானது. ‘சிகரம் பாரதி’ என்னும் புனை பெயரில் வெளியானது. வாசிப்பை நேசிப்போம் வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். அதிலும் பத்திரிகை வாசித்தல் மனிதனை பல்துறை சார்ந்த அறிவு கொண்டவனாக மாற்றும். இலக்கியம், அரசியல், விளையாட்டு என பல செய்தி வகைகள் பத்திரிகையில் உள்ளன. அத்துடன் நம்முடைய திறமைகளை வெளியிட ஆக்கங்களையும் பிரசுரித்து ஊக்கம் தருகிறது. மேலும் கேள்வி கேட்கும் சுதந்திரம் பத்திரிகைகளிலேயே அதிகம் கிடைக்கிறது. நூல்கள் எமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமாகும். செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வைரத்திலும் உயர்வானவை. புத்தகங்களும் அது போன்றவையே. ‘உனக்கு வரம் வர யாரோ இருந்த தவமல்லவா புத்தகம்’ என்கிறார் வைரமுத்து. மேலும் ‘ஒரு நல்ல புத்தகம் திறந்துகொண்டால் நரகத்தின் வாசல் மூடப்படும். ஒவ்வொரு பக்கம் நகரும் போதும் நீ எதிர்காலத்துள் காலடி வைக்கிறாய் – ஒரு புத்தகம் முடிகிறது மனசின் மர்மப் பிரதேசம் விடிகிறது’ என்றும் கூறியிருக்கிறார் வைரமுத்து. வாசிப்பதற்கும் மலையக மக்களின் முன்...