சிகரம் பாரதி, யாழ் பாவாணன் மற்றும் வேலணையூர் தாஸ் இலக்கிய சந்திப்பு!
வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். கடந்த வாரம் நான் ஈழத்துக்குப் பயணமாகியிருந்தேன். அந்த யாழ் பயணம் மறக்கவியலாதது. என் வாழ்வில் முதல்முறையாக நான் யாழ்ப்பாணத்துக்குப் பயணமாகியிருந்தேன். கொழும்பில் இருந்து கடுகதிப் புகையிரதம் மூலம் முன்பதிவு செய்து சென்றேன். நகர்சேர் கடுகதி என்பதால் ஆறு மணித்தியாலங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லக்கூடியதாகவிருந்தது. வலைத்தளம் மூலமாக அறிமுகமாகியிருந்த நண்பர் யாழ்பாவாணன் அவர்களை முதலில் (2018/06/14) சந்தித்தேன். அவர் தொழில் புரியும் அலுவலகத்தில் அவரது வேலைப் பளுவுக்கு மத்தியிலும் எனக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். யாழ்பாவாணன் அவர்கள் இலக்கியம் மற்றும் தொழிநுட்பம் ஆகியவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். வயது ஐம்பதை நெருங்கினாலும் இன்னமும் இளமைத் துடிப்புடன் செயலாற்றி வருகிறார். என்னோடு இயல்பாகப் பழகிய விதம் அவரது நற்குணத்தைப் பறைசாற்றியது. பின்னர் என்னை அவரது மோட்டார் சைக்கிளில் யாழ் இலக்கியக் குவியம் அமைப்பின் தலைவர் வேலணையூர் தாஸ் அவர்களைச் சந்திப்பதற்காக அழைத்துச் சென்றார். நான், யாழ்பாவாணன் மற்றும் வேலண...