Posts

Showing posts from September, 2021

சோறுடைக்கும் சோழநாட்டின் குடிமகள் 'அபிராமி பாஸ்கரன்' உடனான சிகரம் வழங்கும் நேர்காணல்!

Image
சிகரம்: வணக்கம் அபிராமி! சிகரம் இணையத்தளம் சார்பாக உங்களை வரவேற்கிறோம்! அபிராமி பாஸ்கரன்: வணக்கம் சிகரம்: எமது வாசகர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அபிராமி பாஸ்கரன்: வணக்கம். நான் அபிராமி பாஸ்கரன். எனது ஊர் மன்னார்குடி. சோறுடைக்கும் சோழ நாட்டின் குடிமகள். MBA., M.Phil., பட்டதாரி. நான் வெற்றிக்களிறு என்ற சரித்திர நாவலின் ஆசிரியர். வரலாற்றின் மீது அதீத ஆர்வம் உண்டு. சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழுவின் துணைத்தலைவராக உள்ளேன். முகநூலில் இயங்கும் பொன்னியின் செல்வன் குழுவின் நிர்வாகிகளில் ஒருத்தி. சிகரம் இணையத்தளத்துடன் இணைந்து பயணிப்பத்தில் மகிழ்ச்சி. சிகரம்: தங்களின் எழுத்துப் பயணம் பற்றிக் குறிப்பிடுங்களேன்? அபிராமி பாஸ்கரன்: எனது முதல் நாவல் வெற்றிக்களிறு. தற்பொழுது அடுத்த நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். சில சிறுகதைகளும் எழுதியுள்ளேன். எனக்கு வரலாற்று நாவல் ஒன்று எழுதுவதற்கும், வரலாற்றின் மீதான ஆர்வத்திற்கும் தூண்டுக்கோலாக அமைந்தது அமரர் திரு. கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் தான். Abirami's Articles about Ponniyin Selvan என்ற எனது முகநூல் பக்கத்தில் பொன்னியின் செலவன் கு

சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே -எனக்குப் பிடித்த பாடல்

Image
வணக்கம் வலைத்தள நண்பர்களே...!  நலம், நலமறிய ஆவல்.  நீண்ட நாட்களுக்கு பின் வலைத்தளத்தில் சந்திக்கிறோம்.  இன்று நான் என்னைக் கவர்ந்த பாடலொன்று பற்றி இங்கு பகிர்ந்துள்ளேன்.  நயன்தாராவின் நடிப்பில் வெளியான நெற்றிக் கண் திரைப்படத்தில் இடம்பெற்ற இதுவும் கடந்து போகும் என்ற பாடலே அது.  பேசுவதற்கு இப்போது அதிக நேரமில்லை.  ஆனால் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.  கேட்ட மாத்திரத்தில் பாடலை பிடித்து விட்டது.  எளிமையான இசையும், அழகான வரிகளும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.  நீங்களும் கேளுங்க..  விரைவில் சந்திப்போம்.... பாடலும், வரிகளும் இதோ..! இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் சுடரி இருளில் ஏங்காதே வேலி தான் கதவை மூடாதே ஆறு காலங்களும் மாறி மாறி வரும் இயற்கையின் விதி இதுவே அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் இதுவும் கடந