சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே -எனக்குப் பிடித்த பாடல்

வணக்கம் வலைத்தள நண்பர்களே...! 


நலம், நலமறிய ஆவல். 


நீண்ட நாட்களுக்கு பின் வலைத்தளத்தில் சந்திக்கிறோம். 


இன்று நான் என்னைக் கவர்ந்த பாடலொன்று பற்றி இங்கு பகிர்ந்துள்ளேன். 





நயன்தாராவின் நடிப்பில் வெளியான நெற்றிக் கண் திரைப்படத்தில் இடம்பெற்ற இதுவும் கடந்து போகும் என்ற பாடலே அது. 


பேசுவதற்கு இப்போது அதிக நேரமில்லை. 


ஆனால் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். 


கேட்ட மாத்திரத்தில் பாடலை பிடித்து விட்டது. 


எளிமையான இசையும், அழகான வரிகளும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. 


நீங்களும் கேளுங்க.. 


விரைவில் சந்திப்போம்....


பாடலும், வரிகளும் இதோ..!



இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

சுடரி இருளில் ஏங்காதே
வேலி தான் கதவை மூடாதே
ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
அனுபவம் கொடுத்திடுமே

மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் …(3)
ஏதுவும் கடந்து போகும்

அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
மனம் தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
அது போல் இந்த கவலையே

நாள்தோறும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே

வாசம் தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே

சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே

சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே
அழகே சுடரி அட ஏங்காதே
மலரின் நினைவில் மணம் வாடாதே

இதுவும் கடந்து போகும் …(5)
போகும் ….கடந்து போகும் ….

Comments

  1. Replies
    1. மிக்க நன்றி நண்பரே. உங்கள் கருத்துரை மிகுந்த உற்சாகத்தை தருகிறது.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!