Posts

Showing posts with the label கவிஞர் கவீதா

எனக்குமோர் நாள் இறப்பு வரும்... | கவின்மொழிவர்மன்

Image
வயோதிக மடைந்தோ நோய்வாய்ப் பட்டோ விபத்துநடந் தோயன்று தனக்குத் தானோ எனக்கும் ஓர்நாள் இறப்புவரும் அன்று! என்னுடலும் தரையில் சாய்ந்திருக்கும் விழிகளை இமைகள் காத்திருக்கும் உடையவளருகில் வீற்றிருப்பாள் விழிநீர்காய்ந்து சோர்ந்திருப்பாள், பிள்ளைகளருகில் சேர்ந்திருப்பர்! நேரஞ்சிறிதாய் கடந்தேற உறவினர் வெகுவாய் புடைசூழ காத்திருப்பர், என்னுடல் நீரால் கழுவப்பட என்னுடை உடமைகள் கலையப்பட! நிர்வாணக்கோலம் நான்பூண்டேன் என்னுடல் மறைக்கும் துணிக்கூட என்னுடன் பிறப்புகளீந்த பிச்சையன்றோ, என்பெயரதும் நீங்கிபிணமானேன் தாயுடல்வந்த ஊனானேன்! தென்னங் குறுத்தோலை பின்னல் சடைபோட்டு என்னையதி லீட்டி பாடையதைத் தூக்க, உறவுகளெல்லாம் உதறிவிட உடையவளென்று வீதிவர! பெற்றமகனோ காடுவரயென்னை கட்டையில் வைத்தாலும் குழிதோண்டி புதைத்தாலும் மொட்டையடித்தான் எனக்காக முடியையீந்தான் கணக்காக சட்டியுடைப்பது மெதுக்காக! காடுவந்தவன் வீடுசென்றான் காலொடுயெனையும் கழுவிவிட்டான், கிடத்தியவிடத்தை துடைத்தார்கள் தீட்டாயெனையே நினைத்தார்கள், என்னுடல்தனையே பட...

வலைப்பதிவர் கவீதா காலமானார்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். பாடசாலைக் காலத்தின் பின் இலங்கையின் பத்திரிகைகளில் தனது கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வந்தார். அவரது கவிதை ஆர்வத்தைக் கண்ட நான் அவரது கவிதைகளை உலகறியச் செய்ய எண்ணி ' கவீதாவின் பக்கங்கள் ' என்னும் வலைப்பதிவை உருவாக்கி அவரது கவிதைகளை பிரசுரித்து வந்தேன். அவரிடம் கணினி வசதியில்லாததன் காரணமாக நானே தொடர்ந்து அந்த வலைப்பதிவை நடத்தி வந்தேன். என்றாலும் என்னால் இவ்வலைப்பதிவை சரிவர தொடர்ந்து நடத்திட இயலவில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக அவருடன் உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இன்று (2016.10.11) பள்ளித் தோழி ஒருவரிடம் நீண்ட நாட்களின் பின் உரையாடிக் கொண்டிருந்த போது 2016.07.05 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். அதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக , அதாவது 2016.06.15 ஆம் திகதியே அவருக்குத் திருமணம் இடம்பெற்றுள்ளது. அவசர கதியில் உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக்...