Posts

Showing posts from September, 2012

குருவியின் பயணம்

Image
"நாமும் ஒரு நாள் பேரூந்தில் போனால் எப்படியிருக்கும்?" குருவி தீவிரமாய் யோசித்தது "முதலில் பறக்கத் தேவையில்லை பிறகு இரை தேடி அலையத் தேவையில்லை சொகுசாய்ப் போகலாம் தூங்கிக் கொண்டு போகலாம்" இப்படியெல்லாம் இருபது நிமிடம் யோசித்த பிறகு சட்டென்று குருவியின் மனதில் ஒரு சலனம்  Image Credit: Google "பேரூந்து விபத்தில் விழுந்து விட்டால்.......? கொள்ளையர்கள் கடத்திவிட்டால்........? தீவிரவாதிகள் குறிபார்த்து குண்டு வைத்துவிட்டால்.....? வேண்டாம்! நமக்கு சிறகுகள் நன்றாகத்தான் இருக்கின்றன! பேரூந்தை விட வேகமாய்ப் பறக்க நம்மால் முடியும் நம் சிறகே நமக்கு பேரூந்து போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" இப்போது நிம்மதியாய் உல்லாசமாய் தன் சிறகை விரித்து வானில் சிறகடித்துப் பறந்தது - 'குருவி'! எனது இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான "வீரகேசரி" இல் 2008.06.01 அன்று வெளியானது. 

காமிக்ஸ் பண்டிகைக் கொண்டாட்டம்!

Image
வணக்கம் பதிவுலக உள்ளங்களே! ஒரு முக்கியச் செய்தியுடன் இப்பதிவு உங்களை நாடி வருகிறது. நான் அறிந்த ஒரு விடயத்தை நீங்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இப்பதிவினை எழுதுகிறேன். சற்றே அவசரத்துடன் இதனை வெளியிட வேண்டியிருக்கிறது. காரணம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. தலைப்பைப் பார்த்ததுமே சிலருக்கு பதிவு எதைப் பற்றி அமையப் போகிறது என்பது புரிந்திருக்கும். ஆம்! நம் அபிமான "காமிக்ஸ் கதை"கள் பற்றிய பதிவு தான் இது. இலங்கையில் காமிக்ஸ்களுக்கு புத்துயிரளித்துக் கொண்டிருக்கும் "கோகுலம் வாசகர் வட்டம்" ஆனது தற்போது பழைய காமிக்ஸ் கதைகளைப் பெற்று வாசிப்பதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளது. காமிக்ஸ் கதைகள் மீதான ஆர்வத்தின் காரணமாக "கோகுலம் வாசகர் வட்டம்" உடன் மின்னஞ்சல் மூலமான தொடர்புகளைப் பேணி வரும் நான் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலமாக தந்த செய்தியையே இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். மேலதிக விபரங்களுக்கு: kogulamrc@gmail.com Image Credit : Google / tamilcomicsulagam.blogspot.com Lion Jolly Special, Lion Cow boy Special (Lion 200t

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08

Image
பகுதி - 01 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01   பகுதி - 02 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02   பகுதி - 03 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03   பகுதி - 04 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 0 4   பகுதி - 05 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05   பகுதி - 06 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06   பகுதி - 07 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07 பகுதி - 08 திவ்யா பரீட்சை முடிந்து வரும் நேரம் நெருங்க நெருங்க மனம் படபடவென அடித்துக் கொண்டது. பாடசாலையில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து வந்து தான் பேரூந்து நிலையத்தை அடைய வேண்டும். பாடசாலைக்கும் பேரூந்து நிலையத்திற்குமான இடைவெளி தான் அவளிடம் பேச உகந்த இடமாக இருந்தது. ஏனெனில் அந்த பிரதேசத்திற்குள் வெளியாரின் நடமாட்டம் இருக்காது. மேலும் அந்த எல்லைக்குள் சொல்லப்பட்ட காதல்கள் ஏராளம். தைரியமாக அந்த இடத்தில் வைத்து பேசி விட்டால் எப்படிப்பட்ட பெண்ணையும் மடக்கிவிட முடியும் என்பது எங்கள் 'ஐதீகம்'.                             குனிந்த தலை ந