Posts

Showing posts with the label பயணம்

பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 02)

Image
பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)   2018/06/14  அடுத்த நாளும் நண்பனுக்கு வேலை நாளாக இருந்தது. அன்றே நான் புறப்படவும் வேண்டியிருந்தது. அன்றைய தினம் எழுத்தாளர் யாழ் பாவாணன் அவர்களை சந்திக்க சென்றேன். அவரை சந்தித்த பின் அவரது நட்பு எழுத்தாளரான 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் வேலணையூர் தாஸ் அவர்களை சந்திக்க அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.  பின்னர் யாழ் பொது நூலகம் சென்றேன். பத்திரிகை வாசிப்புப் பிரிவுக்கு சென்று அன்றைய நாளிதழ்களைப் படித்தேன். இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நூலகத்திற்குள் அடியெடுத்து வைப்பதே பெருமை தரும் உணர்வாக இருந்தது.  அதன் பின்னர் யாழ் பாவாணன் அவர்கள் என்னை யாழ் பேரூந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். அங்கிருந்து எனது நண்பியின் இல்லம் அமைந்துள்ள வவுனியாவுக்கு சென்றேன். வவுனியா பேரூந்து நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் அவரது வீட்டைச் சென்றடைந்தேன்.  அன்று இரவு அங்கு தங்கினேன். தோழியின் உபசரிப்பு மிகவும் பிடித்திருந்தது. அவரும் அவரது கணவரும் ...

பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)

Image
'யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால் யாழ் மீட்டுமே ரயில் தண்ட வாளம்' என்றொரு இலங்கைப் பாடல் உண்டு. நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. வாங்க என்னோடு பயணிக்கலாம்.  2018/06/11 கொட்டகலை - கொழும்பு   மீண்டும் அதே கொழும்பு நோக்கிய பயணம். இந்த முறை நான் வேலை செய்து விலகிய நிறுவனத்தில் எனது சம்பளம் உள்ளிட்ட விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் பயணமாகியிருந்தேன்.  அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து கொழும்பு செல்வதற்காகத் தயாரானேன். அதிகாலை நான்கு மணியளவில் எனக்குத் தெரிந்த முச்சக்கர வண்டியில் பயணம் ஆரம்பமானது. சுதா என்னும் முச்சக்கர வண்டி நண்பர் கொழும்பில் இருந்து சிலரை ஏற்றி வருவதற்காக சென்றார். ஆகவே அவர் கொட்டகலையில் இருந்து வெறுமனே தான் சென்று வர வேண்டும். அதனால் நான் கொழும்பு செல்ல வேண்டியிருப்பதை அறிந்த அவர் தன்னோடு வருமாறு அழைத்தார். நானும் அவருடைய அழைப்பை ஏற்று அவருடன் பயணமானேன்.  அதிகாலை நேரம் குளிரும் தூக்கமும் துன்புறுத்தினாலும் அவருடன் உரையாடியபடி பயணித்தேன். காலை எட்டு மணியளவில் ஓரிடத்தில் நிறுத்தி காலை உணவை ...