குறள்நெறி வாழ்வீர்!
அருமறை குறளைக்கற்று அதுதரும் பொருளைப்பெற்று நெறிமிகு வழியில்நின்று நிலத்தினில் வாழ்தல்நன்று மனைவியும் மக்களோடும் மனதினி உறவினோடும் மதியுரை நண்பரோடும் மகிழ்வுடன் வாழ்தல்வேண்டும் அளவிலாப் பொருளைப்பெற்று அளவுடன் செலவுசெய்து வளமிகுப் பெருமையோடு வாழ்கநீர் நீடுவாழ்க! *** நெஞ்சம்நிறைந்த வாழ்த்துகளுடன்... மானம்பாடி புண்ணியமூர்த்தி குறள்நெறி வாழ்வீர்! https://newsigaram.blogspot.com/2018/10/kural-neri-vaalveer.html #திருக்குறள் #வாழ்க்கை #வழிகாட்டி #அனுபவம் #உண்மை #குறள்நெறி #உறவுகள் #தமிழ் #வலைத்தளம் #வள்ளுவர் #எண்ணம் #சிகரம்