Posts

Showing posts from April, 2015

மனமே.... மனமே.....

Image
                      வணக்கம் நண்பர்களே! மனதில் தோன்றிய சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.  முதலாவது நமது வலைத்தள நண்பர் வெற்றிவேல் அவர்களின் "வானவல்லி" புதினம் பற்றியது. வலைத்தளத்தில் வெளிவந்து பின், இடைநிறுத்தப்பட்டு முழுமையாக புத்தகமாகவே வெளியிடுகிறேன் என்று வெற்றிவேலினால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வருட துவக்கத்தில் வெளிவரவிருந்தது. என்றாலும் இன்னும் வெளியீட்டுத் திகதி உறுதிப்படுத்தப்படவில்லை. "வானவல்லி"யின் வரவுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன். கல்கியின் "பொன்னியின் செல்வன்"ஐப் போல ஒரு பெரிய வரலாற்றுப் புதினம் இது. நாளும் பொழுதும் இதனை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் வெற்றிவேல். விரைவில் "வானவல்லி சிறப்பு நேர்காணல் - உங்கள் வெற்றிவேல்" உடன் சிகரம் வலைத்தளத்தில் வெளியாகும். அடுத்தது , நான் எனது வலைத்தளத்தினை மேம்படுத்துவதற்காக பேஸ்புக் (facebook ) பக்கம் ஒன்றை ஆரம்பித்திருப்பது நீங்கள் அறிந்ததே. நான் கடந்த ஆறு மாதங்களாக வலைத்தளப் பக்கம் வரவில்லை. ஆகவே அக்காலப்பகுதியில் நான் பேஸ்புக் (facebook ) பக்கத்த

டுவிட்டர் @newsigaram - 06

Image
# அவ்வளவு பயங்கரமான பேய் இரவு நம் தலைமேட்டில் உள்ள விளக்குமாத்துக்கு பயப்படும்னு நினைப்பது தான் மூடநம்பிக்கை # ஒன்றை ஓகோவெனத் தூக்கிப் பிடித்து ஆடுவதும் பின் அதையே தூக்கிப் போட்டு மிதிப்பதுமே இன்றைய சமூகத்தின் இயல்பு வாழ்க்கை.... # சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பதில்கள் "ஆம்" மற்றும் "இல்லை"!! # தூக்க மாத்திரை கண்டுபிடிப்பதற்கு முன்னால் நம் முன்னோர்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்து வைத்திருந்தார்கள் அயராத உழைப்பு # பேசிக்கொண்டே இருந்தால் நம் பலவீனமும்.... மவுனமாக இருந்தால் அடுத்தவர் பலவீனமும் தெரியவரும்... # 'ஏதாவது செய்ய வேண்டும்'என நினைக்காதவர்களே இல்லை, ஆனா என்ன செய்ய வேண்டுமென்ற புரிதல் மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கிறது!   # "இத நீயா உடைச்ச?"எனக்கேட்டு குழந்தை ஆமாம் என்று உண்மையை சொன்னால் அடிக்காதீர்கள் பிறகு உண்மை பேசினால் அடிப்பார்கள் என பயந்து பொய்பேச பழகும்!   # அறிவை விட அறியாமையே நிறைய கற்றுத் தருகிறது  

ஏன்? ஏன்?

                      வணக்கம் வாசக நெஞ்சங்களே! மிக நீண்ட இடைவேளைக்குப் பின் - 181 நாட்களுக்குப் பின் - 6 மாதங்களுக்குப் பின் - அரை வருடத்துக்குப் பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சரி.. சரி... அரை வருசத்துக்குப் பிறகு வந்தா என்ன, ஆறு வருசத்துக்குப் பிறகு வந்தா என்ன? விசயத்த சொல்லணும். அதானே? சொல்றேன்யா....            முதலில் இனிய சித்திரைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். "சித்திரைப் புத்தாண்டு" என்று சொல்வதா, இல்லையா என்று தெரியவில்லை. முதலாவது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்கவில்லை. அடுத்து, நமது சமூக வலைத்தளப் போராளிகள் கூட இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர்.         அடுத்து, ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கார் இன் பிறந்த நாளாமே? சன் டிவி , கே டிவி லயெல்லாம் ஒரு சிறப்பு நிகழ்ச்சி கூட இல்லையே, ஏன்?                இன்னும் ஒன்று. ஜெயலலிதா சொத்து வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என்பது என் கருத்து. காரணம், தமிழக அரசு ஒரு ஒழுங்கு முறைக்கு வரும். இந்த போலி வழிபாடுகள் குறையும். பதிலளிக்கும் கடப்பாடுள்ள ஒருவர் இருப்பார். இன்றேல் ஆட்சி மாற்றம் ஒன்றே த