Monday, 27 April 2015

மனமே.... மனமே.....

                      வணக்கம் நண்பர்களே! மனதில் தோன்றிய சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.  முதலாவது நமது வலைத்தள நண்பர் வெற்றிவேல் அவர்களின் "வானவல்லி" புதினம் பற்றியது. வலைத்தளத்தில் வெளிவந்து பின், இடைநிறுத்தப்பட்டு முழுமையாக புத்தகமாகவே வெளியிடுகிறேன் என்று வெற்றிவேலினால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வருட துவக்கத்தில் வெளிவரவிருந்தது. என்றாலும் இன்னும் வெளியீட்டுத் திகதி உறுதிப்படுத்தப்படவில்லை. "வானவல்லி"யின் வரவுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன். கல்கியின் "பொன்னியின் செல்வன்"ஐப் போல ஒரு பெரிய வரலாற்றுப் புதினம் இது. நாளும் பொழுதும் இதனை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் வெற்றிவேல். விரைவில் "வானவல்லி சிறப்பு நேர்காணல் - உங்கள் வெற்றிவேல்" உடன் சிகரம் வலைத்தளத்தில் வெளியாகும்.

அடுத்தது , நான் எனது வலைத்தளத்தினை மேம்படுத்துவதற்காக பேஸ்புக் (facebook ) பக்கம் ஒன்றை ஆரம்பித்திருப்பது நீங்கள் அறிந்ததே. நான் கடந்த ஆறு மாதங்களாக வலைத்தளப் பக்கம் வரவில்லை. ஆகவே அக்காலப்பகுதியில் நான் பேஸ்புக் (facebook ) பக்கத்தில் எவ்வித இடுகையையும் இடவில்லை. ஆனால் ஆறு மாதத்திற்கு முன்பு சுமார் 100 க்கும் 140 க்கும் இடையில் இருந்த பயனாளர் விருப்பங்கள் இப்போது 750 ஐ தொட்டுவிட்டது. ஒரு பேஸ்புக் (facebook )பக்கம் இத்தனை விருப்பங்களை அடைவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான். எனினும் வலைத்தளம் செயற்பட்ட காலத்தில் வராமல் இப்போது வந்திருக்கும் இவர்களெல்லாம் யார்? எத்தனை பேர் விரும்பியிருக்கிறார்கள் என்னும் எண்ணிக்கையல்ல என் தேவை, எத்தனை பேர் என் எழுத்துக்களை நேசிக்கிறார்கள் என்பதே என் தேவை. எண்ணிக்கைக்காக அலைபவன் நானல்ல. எனவே எனது பக்கத்திற்கு வருபவர்கள் சற்று சிந்திக்கவும்.

    மூன்றாவதும் இறுதியும். நேபால் பூகம்பம். சுமார் 2500 மனித உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. மிகுந்த சோகம் நம் எல்லோர் மனத்திலும். இலங்கையிலுள்ள தனியார் ஊடக நிறுவனமொன்று நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவ திட்டமிட்டுள்ளதாக அறிய வருகிறது. இந்திய அரசு உதவிகளை அறிவித்துள்ளது. உலக நாடுகள் பலவும் உதவக்கூடும். உருக்குலைந்து போயிருக்கும் நாட்டை மீளமைக்கும் சக்தியையும் மன தைரியத்தையும் கடவுள் அந்நாட்டு மக்களுக்கு வழங்கட்டும். மக்களிடம் ஒரு வேண்டுகோள். உங்கள் சுய இலாபத்திற்காக இப் பூகம்பத்தினை விளம்பரமாக ஆக்க வேண்டாமே?

2 comments:

 1. வணக்கம்
  ஐயா
  நேபால் நாட்டு மக்களுக்காக பிராத்திப்போம்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...