Posts

Showing posts from December, 2020

வாசிப்பும் பகிர்வும் -01

Image
வணக்கம் நண்பர்களே!  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.  இன்று நான் வாசித்துக் கொண்டிருக்கும் சில புத்தகங்களை பற்றி சொல்ல நினைக்கிறேன்.  முதலாவது புத்தகம் அல்ல. எதிர்காலத்தில் புத்தகமாக வெளிவரும். நண்பன் வெற்றிவேல் எழுதும் 'கரிகாலன்' தொடர்.  Image rights reserved to respective owners only. நண்பனின் முதலாவது வெளியீடான 'வானவல்லி' மிக அருமையாக இருந்தது. அதற்கு சற்றும் குறையாமல் 'கரிகாலன்' சுவாரஸ்யமாக இருக்கிறது.  ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரஸ்யம் குன்றாமல் வாசிக்க சொல்லி ஈர்க்கிறது. விட்டால் நாள் முழுவதும் வாசித்துக் கொண்டே இருக்கலாம்.  வார்த்தை பிரயோகங்களில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றம் தேவை என நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் போன்றவற்றின் பாதிப்பாக இது இருக்கலாம்.  ஆனால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை என்றே சொல்ல வேண்டும். மிகுதியை பிறகு சொல்கிறேன்.  மற்றைய புத்தகங்கள் கோபிநாத் எழுதிய 'ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!' மற்றும் அப்துல் ரகுமானின் 'பூப்படைந்த சப்தம்' ஆகியன.  இந்த இரண்டு புத்தகங்களை பற்றியும் பிறக