Posts

Showing posts with the label தமிழ்ப் புத்தாண்டு

இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

Image
'சிகரம்' வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் "இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!" தெரிவித்துக் கொள்வதில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்.  இன்றைய நாள் மிக இனிமையான நாளாகவும் நல்ல ஆரம்பங்களுக்கான ஒரு தொடக்கமாகவும் அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.  உங்கள் வாழ்க்கையில் ஒளி வீசச் செய்யும் எல்லா நிகழ்வுகளுக்குமான ஆரம்பம் இன்றைய நாளாக அமையட்டும்.  பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் மனக் கசப்புகள் நீங்கவும் துன்பங்கள் நீங்கவும் மனம் அமைதி பெறவும் சிந்தனை தெளிவு பெறவும் புதிய எண்ணங்கள் உருவாகவும் சாதனைகள் படைக்கவும் மனமார வாழ்த்துகிறோம்.  'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தமிழராகிய நம் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உங்கள் அனைவரின் வாழ்விலும் ஒளி வீசச் செய்யட்டும் என உங்கள் அனைவருக்கும் 'சிகரம்' தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!  https://newsigaram.blogspot.com/2020/01/happy-tamil-thai-new-year.html  #Thai_Pongal #Happy_P...

தமிழ்ப் புத்தாண்டு 2048 வருக வருக!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! தமிழ்ப் புத்தாண்டாம் தைத்திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறேன். வள்ளுவராண்டு 2048 பிறந்துள்ள இந்நன்னாளில் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து வாழ்வில் புதிய இன்பங்கள் பிறக்கட்டும்.  உண்மையான தமிழ்ப்புத்தாண்டு தை யா அல்லது சித்திரை யா என்னும் விவாதங்கள் இன்னும் முடிவுறாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நம் முன்னோர்களும் அறிஞர்களும் ஆராய்ந்து நமக்குக் கூறிய அடிப்படையில் தைத்திருநாளே நம் புத்தாண்டு எனக்கொண்டு தொடர்ந்திடுமாறு 'சிகரம்' நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது. நம் புத்தாண்டில் புதிய விடயங்களைத் தொடங்கிடுங்கள். ஆடம்பரங்களைத் தவிர்த்து புத்தாண்டைக் கொண்டாடிடுங்கள்.  புதிய மாற்றங்கள் இப்புத்தாண்டில் நிகழட்டும்! அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!