Posts

Showing posts with the label கூகுள்

கூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரையில் (Tab) திறக்கச் செய்வது எப்படி?

Image
இணைய உலகில் தேடல் என்றாலே அது கூகுள் தான். அது போலவே இணைய உலாவி என்றால் அது கூகுள் குரோம் தான்.  ஒரு தடவை கூகுள் குரோமில் உள்நுழைந்து வைத்தால் கூகுளின் அத்தனை சேவைகளையும் ஒரே சொடுக்கில் அணுக முடியும்.  நீங்கள் கூகுள் குரோம் பாவனையாளரா?  கூகுள் குரோம் வாயிலாக கூகுள் தேடு பொறியில் தேடல்  முடிவுகளை புதிய திரையில் (Tab) திறக்க முடியவில்லையா?  நீங்கள் தேடல் முடிவுகளை எடுத்த அதே திரையிலேயே (Tab) இணைய இணைப்புகள் திறக்கின்றனவா?  ஆங்கிலத்தில் சொல்வதானால் ' how to open google search results in a new tab?'  இதோ உங்களுக்கான தீர்வு!  கீழ்வரும் இணைப்பை உங்கள் முகவரிப் பட்டையில் திறவுங்கள்:  https://www.google.com/preferences   இப்போது உங்களுக்கு கீழ்வரும் அமைப்பிலான திரை கிடைக்கும்.  இந்தத் திரையில் 'Where Results Open' என்பதை ( முடிவுகள் திறக்கப்படும் இடம்) என்னும் தெரிவுக்கு செல்லுங்கள்.  அதில் ' Open each selected result in a new browser window' ( தேர்ந்தெடுத்த ஒவ்வொரு முடிவ...

சுந்தர் பிச்சையின் கதை | Sundar Pichai Story | Chief Executive Officer Google

Image
#கூகிள்  #சுந்தர்_பிச்சை  #தொழிநுட்பம்  #வளர்ச்சி  #முன்னேற்றம்  #குரோம்  #Google  #Chrome  #Technology  #ChromeBook  #Amdroid  #CEO  #Success  #StoryofStory  #SigaramINFO

கூகுளில் டொமைன் வாங்குவது எப்படி? How to Buy Domain? - தமிழ் விளக்கம்

Image
*நீங்கள் வலைப்பதிவரா?  அல்லது  *புதிதாக இணையத்தளம் தொடங்க விரும்புகிறீர்களா? * இணையத்தள முகவரியை எங்கே பெறுவது? வலைத்தளத்தில் இணைப்பது என்று அறிய வேண்டுமா? *போலியான சலுகைகளால் ஏமாற்றப்பட்டுள்ளீர்களா?  இதோ உங்களுக்கான தீர்வு! வழிகாட்டுகிறார் உங்கள் பிளாக்கர் நண்பன் !  - பிளாக்கர் நண்பன்   #Google #GoogleDomains #GoogleDomainsBeta #Domain #Blogger #WebSite #Writer #Tamil #Youtube #Guide #Purchase #Gpay #GooglePay #PersonalBlog #Adsense #SIGARAMCO 

ஆட்சென்ஸ்க்கு பதினைந்து வயது | 15 years of AdSense

Image
கூகிள் ஆட்சென்ஸ்க்கு பதினைந்து வயதாகிறது. 2003 ஜூன் மாதம் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை ஆரம்பிக்கப்பட்டது. உலகின் பல வலைத்தளங்களுக்கும் இணையத்தளங்களுக்கும் வருமானத்தை வழங்குவதிலும் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களை உலகம் முழுவதிலும் கொண்டு சென்று வியாபாரத்தை அதிகரிப்பதிலும் கூகிள் ஆட்சென்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.  ஆட்சென்ஸ் போன்ற பல்வேறு விளம்பர சேவைகள் தற்போது இயங்கி வந்தாலும் கூகிள் விளம்பரங்களை யாராலும் விஞ்ச முடியாது. குறிப்பாக வலைத்தளங்களில் பொழுது போக்காக எழுதி வந்தவர்களுக்கு வருமானமீட்ட சுலபமான வழியை ஆட்சென்ஸ் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  தற்போது தமிழ் மொழி இணையத்தளங்களுக்கும் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முதலே இந்த சேவை தமிழ் இணையத்தளங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இது தமிழ் இணையத்தளங்கள் மற்றும் வலைத்தளங்களுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும்.  உலகின் 14.3 மில்லியனுக்கும் அதிகமான இணையத்தளங்களுக்கு ஆட்சென்ஸ் விளம்பர சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் பில்லியன் கணக்கில் ஆட்சென்ஸ் மூலம் கூகிள் வரு...

கூகுளிடம் ஆங்கிலம் கற்கலாம் வாங்க!

Image
கூகுள் உலகின் முன்னணி தேடல் தளமாக இருக்கிறது. மைக்ரோசாப்ட்டின் பிங் மற்றும் பிரபல தேடல் தளமான யாஹு என எத்தனை தேடல் இயந்திரங்கள் காலத்துக்குக் காலம் தோன்றினாலும் கூகுளை மிஞச யாராலும் முடியவில்லை.  கணினி இயங்குதள உலகை மைக்ரோசாப்ட் கைப்பற்றியுள்ளது. ஆப்பிள் மற்றும் கூகுள் போட்டியில் இருந்தாலும் வெற்றி மைக்ரோசாப்ட்டுக்குத்தான். திறன்பேசி இயங்கு தள உலகில் கூகுளின் ஆன்ட்ராய்டும் ஆப்பிளும் போட்டியில் உள்ளன. ஏழைகளின் ஆப்பிளான ஆன்ட்ராய்டு தான் இதில் வெற்றியாளர். மைக்ரோசாப்ட் திறன்பேசி உலகில் கால்பதித்து தோற்றுப் போய் திரும்பி விட்டது.  திறன்பேசி தயாரிப்பு உலகிலும் கூகுள் தற்போது களமிறங்கியுள்ளது. ஆன்ட்ராய்டு உலகுக்கு அவசியமான செயலிகளையும் கூகுள் தற்போது வழங்கி வருகிறது. சரி, இதுவெல்லாம் இருக்கட்டும்.  கூகுளின் அடுத்த அறிமுகம் பற்றித்தான் இப்போது பேசப் போகிறோம். நமக்கு பாடசாலைக் காலத்திலும் சரி, தொழில் புரியும் காலத்திலும் சரி நமக்கு கசப்பான ஒரு விடயம் என்றால் அது ஆங்கிலம் தான். ஆங்கிலம் என்றால் எழுதப் பயம், வாசிக்கப் பயம், பேசப் பயம்... எல்லாம் பய மயம்...  ...