Posts

Showing posts with the label கேள்வி பதில்

தூறல்கள்: சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்

Image
கேள்வி : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  படைப்பு என்பது மொழியாளுமை மிக்க அறிஞர்கள் மட்டும் புரிந்துகொள்ளும் விதத்தில் தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் வித்தைக்காட்டி எழுதாமல், எழுத்துக்கூட்டிப் படிக்கும் குறைந்த படிப்பாற்றல் / மொழியறிவுக் கொண்டவர்களும் புரிந்துக்கொள்ளும் விதத்தில் எளிமையான சொல்லாடல்களால் இருத்தல் வேண்டும்.  முழுமையாக வாசிக்க>>>   #கோபால்_கண்ணன் #நேர்காணல் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #கேள்வி #பதில் #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

தூறல்கள்: சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள் பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?   இந்தக் கேள்விகள் உட்பட மொத்தம் பத்துக் கேள்விகளுக்கு நமது தோழி பௌசியா இக்பால் நம்மோடு மனம் திறந்திருக்கிறார். முழுமையாக வாசிக்க கீழே சொடுக்குங்கள்.  முழுமையாக வாசிக்க   #நேர்காணல் #கேள்வி  #பதில்  #பௌசியா_இக்பால்  #உரையாடல்  #வாசிப்பு  #தமிழ்  #வலைத்தளம்  #எழுத்து  #சிகரத்துடன்_சில_நிமிடங்கள்  #சிகரம் 

சிகரத்துடன் சில நிமிடங்கள் : நண்பர்கள் பதிப்பகம்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்:  பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? நான் வாசகன், எழுத்தன். கூடவே நண்பர்கள் பதிப்பகம் எனும் நூல் மகப்பேறு மையத்தின் வைத்தியன்.  கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? எதிர்மறை எண்ணம் முற்றுப்புள்ளி அளவில் கூட இல்லாமல் இருக்க வேண்டும்.  கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? அரசியல் ஒரு வரியில்லா வர்த்தகம். அவன் மட்டுமே அங்கே விற்கும் ஏமாளி.   கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? உயிருக்கு உதவும் காற்று போன்றது.  கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? எனைப்போன்ற நால்வருக்கு உதவி என்றில்லாமல் உறுதுணையாவது.   கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? இரண்டுமே இன்றியமையாதது.   கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடு...

சிகரத்துடன் சில நிமிடங்கள் : பாரதி மைந்தன்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்  பத்துக் கேள்விகள் - முத்துப் பதில்கள்  கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  பெயர் - அருள்தாஸ் கிளைம்சென்  புனைபெயர் -பாரதி மைந்தன்  தாய் பெயர் :- ஜெயசீனா  தந்தை பெயர்:- அருள்தாஸ்  வதிவிட முகவரி - பாரதி தாசன் வீதி, 8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, இலங்கை  பிறந்த திகதி - 1994.03.11  வயது - 24  தொழில் - சமூக சேவை, வறிய மாணவர்களுக்காக கல்வி ஊக்குவிப்பு  குடும்ப விபரம் :- அம்மா, அப்பா, மாமா, 4 அண்ணா, 4அண்ணி.  தொலைபேசி - 0779071472, 0776584179  மின்னஞ்ஞல் - claimsen25@gmail.com   மேலதிக தகமைகள் : கடந்த 05 ஆண்டுகளாக எழுத்துத் துறையில் இருக்கின்றேன். எனது கன்னிப் படைப்பான உண்ர்வுகளின் பாதை நூலை வெளியிட்டுள்ளேன். ஆதனால் மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளேன். பத்திரிகைக்கு சில கவிதைகள் எழுதி அனுப்பியுள்ளேன். வானொலியில் கவிதைகள் சொல்லி வருகின்றேன். அத்துடன் டான் தொலைக்காட்சியில் கவிதைகள் சொல்லவா மற்றும் சங்கர பலகையில் கவிதை விமர்சனம், பட...

சிகரத்துடன் சில நிமிடங்கள் : ரேகா சிவலிங்கம்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள் : பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!   கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  பெயர் - ரேகா சிவலிங்கம்  வசிப்பிடம் - கம்பர்மலை, யாழ்ப்பாணம்  கல்வி - இசைத்துறை பட்டதாரி  ஈடுபாடு - தமிழ் இலக்கியம் மீது  பொழுதுபோக்கு - கவிதை, கட்டுரைகள் புனைவது  கவிப்பயணம் - உயர்தரத்திலே கற்கும்போது ஆரம்பித்தது என் கவிப்பயணம். அதன்பிறகு என் கவிவரிகள் மித்திரன், வலம்புரி போன்ற பத்திரிகைகளிலும் தற்காலத்தில் யாழ்களரி பத்திரிகையிலும் பிரசுரமாகியுள்ளன. அத்தோடு சர்வதேச வானொலிகள், இலங்கை வானொலி போன்றவற்றில் தனிநிகழ்ச்சிகளாகவும் கூட்டுநிகழ்ச்சியாகவும் என் கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. மேலும் டான் தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெறும் கவிதைகள் சொல்லவா நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பிலே கலந்து கொண்டுள்ளேன். மேலும் கவிக்குழுமங்களின் மூலம் "காதல் கவிதை நாயகி", "வித்தகக்கவி" போன்ற விருதுகளை பெற்றுள்ளேன்.  அத்தோடு பிரான்ஸ் நாட்டின் அனைத்துலக மனித உரிமை சங்கம் மற்றும் புனிதபூமி இணையத்தளம் இணைந்து யாழ் நூலக எரிப்பின் 37 ஆவது ஆண்டு நினைவு ...

சிகரத்துடன் சில நிமிடங்கள் : புதியமாதவி

Image
கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  பெயர் புதியமாதவி கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  உண்மையிலிருந்து பிறக்கும். ஆனால் உண்மைக்கும் அப்பாற்பட்டது. ரத்தமும் சதையுமான மனிதர்களின் வாழ்க்கை. ஆனால் ஆடிப்பிம்பங்களும் அல்ல. எழுத்து ஒரு கலை. படைப்பு அக்கலையின் ஜீவன். கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?  சொற்களின் ஒலிக்குப்பைகளால் நிரம்பி இருக்கிறது . கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?  மொழியே மனிதன். இடம் காலம் பருவம் அவன் மொழியின் ஒலிவடிவங்களைத் தீர்மானிக்கிறது. மொழியின்றி மனிதனிடம் வளர்ச்சி சாத்தியமில்லை. எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும்  அந்தந்த இனக்குழுவின் கருத்துப் பரிமாற்றமாக இருந்த மொழி, இன்று கணினி மொழியாகி  குறியீடுகளுக்குள் புகுந்து தன் சமூகத்தை விசாலப்படுத்தி இருக்கிறது. கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? மானிடம் போற்றுதும். கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது ...

சிகரத்துடன் சில நிமிடங்கள் : பவானி

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? எனது பெயர் பவானி. படிப்பு எம்.ஏ, பி.எட் தமிழ், பிஎஸ்சி கணக்கு. உடுமலைக்கு அருகில் பாறையூர் என்ற கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிகிறேன்.  கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? ஒரு நல்ல படைப்பு அனைத்து மக்களுக்கும் பிடித்தமானதாக வாசிக்க எளிமையாக இருத்தல் வேண்டும். வாழ்க்கைக்கான ஏதோ ஒரு கருத்தை கூறுவதாக அமைந்திருக்க வேண்டும். கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? தமிழகத்தை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆண்டு கொண்டிருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். இது மக்களுக்கான ஆட்சி அல்ல.   கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? மொழியில்லையேல் சமுதாயமே இல்லை. தாய் மொழியால் மட்டுமே வளர்ச்சியின் உச்சத்தை எட்டமுடியும்.  கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?   எதிர் காலத்தில் அனைத்து குழந்தைகளும் இலவசமாக படிக்க சர்வதேச தரத்துடன் ஒரு பள்ளியை உரு...

சிகரத்துடன் சில நிமிடங்கள் : முகில் நிலா தமிழ்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  எனது இயற்பெயர் கனகீஸ்வரி, புனைபெயர் முகில்நிலா தமிழ். இல்லத்தரசி, கோவை மாவட்டத்தைச் சார்ந்தவள்.  கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  வாசிக்கும் வாசகனை ஈர்க்கும்விதமாகவும் அவனின் (சமூகம்) வாழ்வியல் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வைத்தருவதாகவும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.  கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?  மிக நெருக்கடியான நிலையில் தற்சமயம் மக்கள் தள்ளப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். மக்களுக்கான சேவை மனப்பான்மை கொண்ட காமராசரைப்போல ஒரு தலைவர் தற்போதைக்கு தேவையென நினைக்கிறேன்.  கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?  மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். தனது சொந்த மொழியில் இயற்றப்படும் கலை, இலக்கிய நூல்கள்தான் பெரும்பாலும் சமூகத்தின் விடிவெள்ளியாய் இருந்து வழிகாட்டுகிறது (குறிப்பாக திருக்குறளைச் சொல்லலாம்). ஒவ்வொரு மொழியினருக்கும் தனித்த...

சிகரத்துடன் சில நிமிடங்கள் : யாழ்பாவாணன்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப் பதில்கள்! கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன்.  நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன். நம் தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேணச் சிறந்த நூல்கள் தேவை என்பதை உணர்ந்து, அறிஞர்களின் சிறந்த பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்கும் பணியிலும் இறங்கி உள்ளேன். உலகெங்கும் வாழும் தமிழர் படித்து முன்னேறவும் தமிழரல்லாத ஏனையோரும் தமிழைக் கற்பதற்கு உதவும் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிர மின்நூல் களஞ்சியங்களையும் பேணுகிறேன்.  எனது தளங்கள்:  http://www.ypvnpubs.com/   https://seebooks4u.blogspot.com/   ht...

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! - காணொளி

Image
#சிகரம் #சிகரம்பாரதி #கேள்வி_பதில் #நேர்காணல் #SIGARAM #SIGARAMCO #Interview #SigarambharathiLK #Q&A #Tamil #YouTube 

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் - பாலாஜி

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?   பெரியதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.  வயது 67. வசிப்பது பெங்களூர்.  'தி இந்து' பத்திரிகையில் பணியாற்றி ஓய்வு. இசை விரும்பி. மொழியார்வம் உண்டு. தமிழர் வரலாறு விருப்பம். கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? என்றும் மனதில் நிற்குமாறு,  உணர்வு நிறைந்ததாய்! கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? எனக்கு அது பற்றிய அறிவு போதாது. நாட்டமுமில்லை. கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? எண்ணங்களைத் தெளிவுபடுத்த மொழி ஒரு ஊடகம். மிகவும் தேவை. அது இல்லையெனில் ஆதிமனிதன் வாழ்க்கைதான். கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?  என்றும் இதே திருப்தியுடன், வாழ்த்தி வளம் பெறல் ஒன்றே!  கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? இரண்டும் வேண்டும்.  கடந்தது கிடைத்த வரம். இனி கடக்க ...

சிகரத்துடன் சில நிமிடங்கள் - மாரிராஜன்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?   பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு சராசரி கலை இலக்கிய ரசிகன். வரலாறு விரும்பி... கொஞ்சம் ஆர்வக்கோளாறு... கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? நம்மை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும். கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? ஆரோக்கியமாக இல்லை. சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறப்பு. மருத்துவர்கள் மாறுவதால் தீர்வுகிட்டாது. மருத்துவர்களாய் மாறினால் தீர்வு கிட்டும்.  கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? சமூக பண்பாடு, அதன் கலாச்சாரம் இவற்றை தக்கவைப்பதில் மொழியின் பங்கு அளப்பரியது. கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? வருத்தங்களை தேடிச்சென்று சம்பாதிக்காமல் இருக்க வேண்டும். கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? நமது பாரம்பரிய வரலாற்றை அறிந்திருந்தால் இன்னும் செம்மையான வாழ்க...

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! - தங்க. வேல்முருகன்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்:  பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  பெயர் : தங்க வேல்முருகன்  ஊர் : விருத்தாசலம் அருகில், திருமுட்டம் வட்டம், மருங்கூர் கிராமம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு.  படிப்பு : தமிழில் எம்.ஏ, எம்ஃபில். வேலை : சிங்கப்பூரில்  படைப்பு : சமீபத்தில் வெளியிட்ட 'நினைப்பதற்கு நேரமில்லை' கவிதை நூல். கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  நல்ல படைப்பு சமூக விழிப்புணர்வு முன்னேற்றத்தைப் பற்றியே இருக்க வேண்டும்.  கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?  விழிப்புணர்வு தேவை  கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?  மொழிதான் குழந்தைக்குத் தாய் போன்றது.  கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?  யாரையும் பிடிக்கவில்லை என்று ஒதுக்கக் கூடாது. மற்றவருக்கு உதவிக் கொண்டே மகிழ்வுப்படுத்த வேண்டும்.  கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்...

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே? கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?  கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?  கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?  கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?  கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா?  கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா?  கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?  கேள்வி 10 :...