சிகரத்துடன் சில நிமிடங்கள் : பாரதி மைந்தன்

சிகரத்துடன் சில நிமிடங்கள் 

பத்துக் கேள்விகள் - முத்துப் பதில்கள் 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

பெயர் - அருள்தாஸ் கிளைம்சென் 
புனைபெயர் -பாரதி மைந்தன் 
தாய் பெயர் :- ஜெயசீனா 
தந்தை பெயர்:- அருள்தாஸ் 
வதிவிட முகவரி - பாரதி தாசன் வீதி, 8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, இலங்கை 
பிறந்த திகதி - 1994.03.11 
வயது - 24 
தொழில் - சமூக சேவை, வறிய மாணவர்களுக்காக கல்வி ஊக்குவிப்பு 
குடும்ப விபரம் :- அம்மா, அப்பா, மாமா, 4 அண்ணா, 4அண்ணி. 
தொலைபேசி - 0779071472, 0776584179 
மின்னஞ்ஞல் - claimsen25@gmail.com 

மேலதிக தகமைகள் : கடந்த 05 ஆண்டுகளாக எழுத்துத் துறையில் இருக்கின்றேன். எனது கன்னிப் படைப்பான உண்ர்வுகளின் பாதை நூலை வெளியிட்டுள்ளேன். ஆதனால் மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளேன். பத்திரிகைக்கு சில கவிதைகள் எழுதி அனுப்பியுள்ளேன். வானொலியில் கவிதைகள் சொல்லி வருகின்றேன். அத்துடன் டான் தொலைக்காட்சியில் கவிதைகள் சொல்லவா மற்றும் சங்கர பலகையில் கவிதை விமர்சனம், படித்ததில் பிடித்தது போன்ற நிகழ்வுகளில் பங்கு கொண்டுள்ளேன். நாடக துறை மற்றும் கவிதை துறையில் மாணவர்களை வளர்த்து வருகின்றேன். பாடசாலை மாணவர்களுக்கு நாடகம் பழக்கி போட்டியில் முதல் இடம் பெற வைத்துள்ளேன். 

மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் இலவசமாக மாலை வகுப்பு எடுக்கின்றேன். செயற்றிட்டம் எழுதும் பயிற்சி பெற்றுள்ளேன். முகநூல் குழுமத்தில் கவிதை போட்டிகளில் இணைந்து சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். முகபுத்தக குழுமத்தில் நடுவர் பணி ஆற்றுகின்றேன். நாடகத்துறை மற்றும் அறிவிப்புத் துறையில், பேச்சு, கட்டுரை, விவாதம் ஆர்வம் உண்டு. இப்போது யூலை தினத்துக் கான பாடல் எழுதியுள்ளேன். 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

அனைவருக்கும் விளங்கும் வகையிலும் வாசகர்களின் மனதில் உடனே பதிந்து தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாகவும் சமூக வாழ்க்கையை காட்டுவதாகவும் தமிழின் இலக்கணத்தை உள்கொண்டதாகவும் மனித மனங்களை புரிந்தும் படைக்க வேண்டும். அப்போதே ஒரு மாற்றத்தையும் விருப்பையும் தரும் படைப்பாக இருக்கும். 

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? 



பணத்துக்காக உரிமையை இழக்கும் கூட்டமாக மாறுகிறது எம் சமூகம். பணத்தை மதிக்கின்றார்கள் மக்கள், மனிதத்தை மிதிக்கிறார்கள் அரசியல் வாதிகள். இதுவே இன்றைய நிலை பாவம் எம் மக்கள். 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? 

மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு மொழியின் முக்கியத்துவமும் உள்ளது. என் தாய் மொழி தமிழ் உலகம் ஆண்ட மொழி, சுவைகள் சிந்தும் மொழி. அதை நாம் மதிப்பது போலவே மொழியின் அவசியம். அவை இல்லை எனில் நாமும் இல்லை. நாடியின் துடிப்பு போன்றது மொழிகள்.  

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

சிறப்பாக என் மொழியின் மற்றும் இனத்தின் வரலாற்றை கவி மூலம் உலகுக்கு வழங்குவதும் அத்துடன் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் உதவுவதும் தமிழுக்காக வாழ்வதுமே. 

கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?

எம் இனத்தின் வீரம், வடுக்கள், வாழ்வியலை சமூகத்துக்கு வெளிக்காட்ட வேண்டியதே அவசியம். 

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 

அவ்வாறு கூற முடியாது. பூரணமான மனிதன் வாசிப்பதால் தான் உருவாகின்றான். அதனால் அதை தக்க வைக்கும் பொறுப்பு எம்மிடம் உண்டு. இறுதி வரை காப்போம், தமிழால் இணைவோம்.  

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 

சிலருக்கு வாழ்வு, சிலருக்கு சாபம். அது எமது நடத்தையை பொறுத்துள்ளது. இன்று பலர் தமது மனதை தொலைப்பதால் சாபமாக மாறுகின்றது. அவர்களின் வாழ்வில் அனைத்தையும் அளவாக நன்மை கருதி சுயத்தை இழக்காமல் பாவித்தால் நன்மையே.  

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்? 

கவிஞர் கண்ணதாசன் - தெய்வதரிசனம், வைரமுத்து-வின் பெய்யெனப் பெய்யும் மழை.  

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 

அனைவருக்கும் மொழியின் முக்கியத்துவத்தை வெளிக்காட்ட வேண்டும். மொழி கருத்தரங்குகள் செய்ய வேண்டும். வரலாற்றை அறிய வைக்க வேண்டும்.

-பாரதி மைந்தன்

-சிகரம் 

#பாரதி_மைந்தன் #கேள்வி #பதில் #தமிழ் #ஈழம் #உரையாடல் #இலக்கியம் #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!