BB TAMIL 2 | WEEK 09 | DAY 60 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | நாள் 60

BB2/09/60/1
'பொம்மலாட்டம்' போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 59ஆம் நாள் இரவு 08.30 மணிக் காட்சிகளுடன் இன்றைய அத்தியாயம் துவங்கியது. மாலை தைக்கப்பட்ட பொம்மைகளை மும்தாஜ் தரம் பார்த்தார். மூன்று பொம்மைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக மும்தாஜ் அறிவித்தார். அடுத்து யாஷிகா தரம் பார்க்க ஆரம்பித்தார். யாஷிகா மும்தாஜ் அணியின் ஒரு பொம்மையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். யாஷிகா மும்தாஜ் அணியின் பொம்மைகளை நிராகரித்ததால் மும்தாஜ் தானும் தனது முடிவை மாற்றிக் கொள்வதாக அறிவித்தார்.

BB2/09/60/2 
இரவு 10.30 மணி. மும்தாஜ் அணிக்கு 50 பிக் பாஸ் காசுகளையும் யாஷிகா அணி 650 பிக் பாஸ் காசுகளையும் பெற்றுக்கொள்கின்றனர். இது போனஸ் சுற்று என்பதால் யாஷிகா அணிக்கு 500 பிக் பாஸ் காசுகள் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. விடிய விடிய இரு அணிப் போட்டியாளர்களும் விழித்திருந்தனர். நேற்று இரவு யாஷிகா அணி உறங்கிக் கொண்டிருந்த போது மஹத் மூலப் பொருட்களை தூக்கிச் சென்றது நினைவிருக்கும். 



BB2/09/60/3 
ஏ. ஆர். ரகுமானின் தாய் மண்ணே வணக்கம் பாடலோடு பொழுது விடிந்தது. காலை 11.30 மணி. போட்டியின் இறுதிப் பகுதி. இந்த முறை ஒரு பொம்மைக்கு 60 காசுகள். 12.30 மணிக்கு தைக்க ஆரம்பித்தனர். 01.15 மணிக்கு தரம் பார்க்க ஆரம்பித்தனர். யாஷிகா மும்தாஜ் அணியின் எல்லா பொம்மைகளையும் நிராகரிக்க மும்தாஜும் யாஷிகா அணியின் எல்லா பொம்மைகளையும் நிராகரித்தார். 

BB2/09/60/4 
இதற்கிடையில் சென்றாயனை ஐஸ்வர்யாவும் யஷிகாவும் வம்புக்கு இழுத்தனர். இந்தப் பஞ்சாயத்து கொஞ்ச நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மஹத், ஐஸ்வர்யா, யாஷிகா மூவரும் ஏற்கனவே போட்டியின் இறுதியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் எனப் பேசி வைத்திருந்ததால் மஹத் அமைதியாகவே இருந்தார். மற்றவர்கள் ஏதோ பெரிய பிரச்சினை உருவாகிவிடுமோ என்கிற பதற்றத்திலேயே இருந்தனர்.   

BB2/09/60/5
மதியம் போட்டி முடிவுக்கு வந்தது. யஷிகாவிடம் 950 காசுகளும் மும்தாஜிடம் 1290 காசுகளும் இருந்தன. மும்தாஜ் அணி போட்டியில் வெற்றி பெற்றது. பின்னர் சுதந்திர தின கொண்டாட்டம் ஆரம்பமானது. ஒவ்வொருவரும் சுதந்திர தினத்தைப் பற்றிய தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். கமல் கிராம சபை மாதிரி கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறியிருந்த போதும் அது நடத்தப்படவில்லை. 

SIGARAM | Public Opinion Poll | Week 09

* இது சிகரம் இணையத்தள வாசகர்களின் மன நிலையை அறிவதற்கான வாக்கெடுப்பு மட்டுமே. 

* நீங்கள் காப்பாற்ற விரும்பும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம். 

* உங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு சந்தர்ப்பம் வீதம் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான ஆறு நாட்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். 

* வாக்களிப்பு முடிவுகள் திங்கள் வெளியாகும். 




Bigg Boss Tamil 2 | Week 09 | Public Opinion Poll | Who Will Be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | மக்கள் வாக்களிப்பு | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்?

Vaishnavi | வைஷ்ணவி
Senrayan | சென்றாயன்
Janani | ஜனனி
Daniel | டேனியல்
Rythvika | ரித்விகா
Created with PollMaker


BB2/09/60/6 
மேகியின் போட்டி. இந்த வீட்டில் யார் நன்றாக சமைக்கிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இது. எல்லோரும் டானியைத் தெரிவு செய்ய பாலாஜியும் டானியும் சென்றாயனைத் தேர்வு செய்தனர். டேனிக்கு மேகி பரிசாக வழங்கப்பட்டது. பொம்மலாட்டம் போட்டியில் பாலாஜி அணியில் இருந்து யாஷிகாவும் மும்தாஜ் அணியில் இருந்து மஹத்தும் சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாலாஜி அணியில் இருந்து பாலாஜியும் மும்தாஜ் அணியில் இருந்து சென்றாயனும் மோசமான போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 

யஷிகாவும்  மஹத்தும் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். சென்றாயனும் பாலாஜியும் அடுத்த வார வெளியேற்றத்திற்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். பல போட்டியாளர்கள் சென்றாயன் மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அதனை மும்தாஜிடம் நேரடியாகத் தெரிவிக்கவில்லை. 

நாளை வெள்ளிக்கிழமை. தலைவருக்கான போட்டி இடம்பெறலாம். வேறு சிறு சிறு போட்டிகள் நடத்தப்படக் கூடும். பிரச்சினைகளோ சிக்கல்களோ இருக்க வாய்ப்பில்லை. வர வர பிக் பாஸ் சலிப்புத் தட்டுகிறது. சுவாரசியம் குறைவு என்பதை பார்வையாளர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். கமலும் பல தடவை போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தியும் அவர்கள் மாறவில்லை. மூன்றாம் பருவத்துக்கான எதிர்பார்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கும். பிக் பாஸ் நிர்வாகம் குறைகளை சரி செய்யுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.   


#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!