BB TAMIL 2 | WEEK 09 | DAY 59 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | நாள் 59 | வட போச்சே!

58ஆம் நாள் இரவுக் காட்சிகளுடன் இன்றைய அத்தியாயம் துவங்கியது. புகைக்கும் அறையில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மஹத்திடம் இந்தப் போட்டியில் விட்டுத் தருவதாக ரகசியம் பேசிக்கொண்டிருந்தார்கள். அடப்பாவிகளா... உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையாடா? இப்படியா அணிக்கு துரோகம் பண்ணுவீங்க? பிக் பாஸ் குறும்படம் போட்டா உங்க நிலைமை என்ன ஆகுறது? கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பார்த்தீங்களா? 

நள்ளிரவு 02.30 மணியளவில் நான்காம் கட்ட மூலப் பொருட்கள் வழங்கப்பட்டன. அடித்துப் பிடித்து மூலப் பொருட்களை இரு அணியினரும் சேகரித்தனர். அதன் பின்னர் தைப்பதற்கான அறிவிப்பு வழங்கப்படாததால் பாலாஜியின் அணியினர் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினர். அந்த நேரம் பார்த்து மெதுவாக பதுங்கிப் பதுங்கி அங்கு வந்த மஹத் பாலாஜி அணியினரின் மூலப் பொருட்கள் அடங்கிய கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடினார். 



சத்தம் கேட்டு விழித்த அணியினர் சுதாகரிப்பதற்குள் மஹத் தனது இடத்துக்கு சென்று விட்டார். 59ஆம் நாள் தைக்கும் அறிவிப்பு வரும்போது தைப்பதற்கான மூலப் பொருட்கள் இப்போது பாலாஜி அணியிடம் இல்லை. பாலாஜி வீட்டின் உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். 

59ஆம் நாள் காலையில் மும்தாஜ் அணியினர் மட்டும் தைக்க ஆரம்பித்தனர். பாலாஜி அணியினர் மும்தாஜ் அணியின் பொம்மைகளை எவ்வாறு நிராகரிக்கலாம் என்று கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். பொம்மைகளை தரம் பார்க்கும் நேரம். நிறைய பொம்மைகளை மும்தாஜ் அணி தைத்திருந்த போதும் பாலாஜி இரண்டு பொம்மைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். ( மும்தாஜ் அணி - 80 காசுகள்) 

பின்னர் பாலாஜி தவிர ஏனைய நான்கு போட்டியாளர்களையும் ரகசிய அறைக்கு அழைத்துப் பேசுகிறார் பிக் பாஸ். உங்கள் அணி மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதால் உங்கள் மேற்பார்வையாளரை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கிறார் பிக் பாஸ். நால்வரும் கலந்துரையாடி யஷிகாவை புதிய மேற்பார்வையாளராக தேர்ந்தெடுக்கின்றனர். 


SIGARAM | Public Opinion Poll | Week 09

* இது சிகரம் இணையத்தள வாசகர்களின் மன நிலையை அறிவதற்கான வாக்கெடுப்பு மட்டுமே. 

* நீங்கள் காப்பாற்ற விரும்பும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம். 

* உங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு சந்தர்ப்பம் வீதம் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான ஆறு நாட்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். 



* வாக்களிப்பு முடிவுகள் திங்கள் வெளியாகும். 



Bigg Boss Tamil 2 | Week 09 | Public Opinion Poll | Who Will Be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | மக்கள் வாக்களிப்பு | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்?

Vaishnavi | வைஷ்ணவி
Senrayan | சென்றாயன்
Janani | ஜனனி
Daniel | டேனியல்
Rythvika | ரித்விகா
Created with PollMaker



ஐந்தாம் கட்ட மூலப் பொருட்கள் வழங்கப்பட்டு தைக்கும் பணி ஆரம்பமாகிறது. பொம்மைகள் தரம் பார்க்கும் நேரம். பாலாஜி அணியின் இரண்டு பொம்மைகளும் மும்தாஜ் அணியின் ஒரு பொம்மையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. (யாஷிகா அணி 100 காசுகள், மும்தாஜ் அணி 50 காசுகள்) அந்த நேரம் மஹத் பாலாஜி அணியின் பணத்தைத் திருட வேகமாக ஓடி வர சிறு கலவரம் அரங்கேறுகிறது. 

மாலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார் பிக் பாஸ். இனி மூலப் பொருட்கள் அனுப்பப்படும் போது ஒலி எழுப்பப்படாது. எந்த நேரம் வேண்டுமானாலும் மூலப் பொருட்கள் அனுப்பப்படலாம். ஆறாம் கட்ட மூலப் பொருட்கள் வழங்கப்பட்டு பொம்மைகளைத் தைக்கின்றனர். பொம்மைகளை தரம் பார்க்கும் நேரம். இரு அணியில் இருந்தும் தலா ஒரு பொம்மை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

ஏழாம் கட்டமாக மும்தாஜ் அணி மட்டும் ஒரு பொம்மையை தைக்க யாஷிகா அதனை நிராகரித்து விடுகிறார். இந்தப் போட்டி இன்று முடிவடையலாம். நாளை சுதந்திர தின அத்தியாயம். கிராம சபை மாதிரிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஏற்கனவே கமல் கூறியிருக்கிறார். தவிர சுதந்திர தினத்திற்கு வேறு போட்டிகளை பிக் பாஸ் வழங்கியிருப்பார். 

அடுத்தது போனஸ் சுற்று. இந்த சுற்றின் முடிவில் தரப்பரிசோதனையின் பின்னர் எந்த அணி அதிக பொம்மைகளை வைத்திருக்கிறதோ அந்த அணிக்கு 500 பிக் பாஸ் காசுகள் வழங்கப்படும். இனி மீதம் நாளை தான் தெரியவரும். பார்க்கலாம் இது எங்கே போய் முடியப் போகிறதென்று...

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!