எண்ணங்கள் என்ன விலை?
வணக்கம் வலைத்தள நண்பர்களே! ஒவ்வொருவருடைய மனதிலும் ஆயிரமாயிரம் எண்ணங்கள். அந்த எண்ணங்கள் அனைத்திற்கும் ஒரு பெறுமதி உண்டு. அந்தப் பெறுமதியைத் தீர்மானிப்பவை இடமும் காலமும் தான். வலைத்தளங்களில் பலரும் தங்கள் பெறுமதியான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வலைத்தளம் கூட என் எண்ணத்தால் உருவானதுதான். மனிதனின் எண்ணங்கள் தான் ஆதிகால உலகத்தை நவீன மயப்படுத்தியது. எண்ணங்கள் கட்டுப்பாடற்றவை, எல்லையற்றவை. உறங்கும் போது கூட மனிதன் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறான்.
எண்ணங்கள்! இந்த உலகின் சக்தியே எண்ணங்கள் தான். கல்வி, வாழ்க்கை, அறிவியல் மற்றும் விவசாயம் என அனைத்திலும் மனிதனின் எண்ணங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. 'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்றார் சுவாமி விவேகானந்தர். நமது எண்ணங்களே நமது வாழ்க்கையை வடிவமைக்கின்றன. நல்ல எண்ணங்கள் நல்ல பலன்களையும் தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தரும்.
இன்றைய நவீன உலகத்தை மனிதனின் எண்ணங்களே வடிவமைத்துள்ளன. விலைமதிப்பில்லாத மனித எண்ணங்களுக்கும் இவ்வுலகில் ஒரு பெறுமதியை பணம் நிர்ணயித்துவிடுகிறது. இத்தனை பெறுமதி வாய்ந்த எண்ணங்களை நாம் மதிக்கிறோமா? அதற்கு உரிய பெறுமதியை தரத் தயாராக இருக்கிறோமா? இல்லை. விலைமதிப்பற்ற எண்ணங்களை நாம் மதிப்பதில்லை என்பதே உண்மை.
நாம் நம்மை நம்ப வேண்டும். நம் எண்ணங்களை நம்ப வேண்டும். எண்ணங்களை ஒரு நிலைப்படுத்தி இலக்கை நிர்ணயிக்க வேண்டும். வெற்றி நிச்சயம். எண்ணங்களே நமது வாழ்க்கை. எண்ணங்களே சமூகம். எண்ணங்களே வரலாறு. எண்ணங்களே உலகம். நமது எண்ணங்கள் வலிமையானதாக இருந்தால் இந்த உலகத்தையே மாற்றி அமைக்க இயலும். அதற்கு நம் எண்ணங்களின் வலிமையை நாம் உணர வேண்டும்.
எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும். எதிர்மறையான நட்புகளிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் சூழலில் இருந்து விலகியிருக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணம் கொண்ட நட்புகளை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அழகிய சிந்தனைகளினாலான சூழலை உருவாக்க வேண்டும்.
நம் எண்ணங்களின் பெறுமதியையும் வலிமையையும் நாம் உணர வேண்டும். அதுவே வெற்றியின் முதற்படி. நமது எண்ணங்களின் மீது நாம் வைக்கும் நம்பிக்கை அடுத்த படி. நம் எண்ணங்கள் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை முதலில் நமக்கு இருக்க வேண்டும். அடுத்த படியாக நேர காலத்துக்காக காத்திராமல் நமது எண்ணங்களை செயற்படுத்த வேண்டும். நாம் முன்னேறும் ஒவ்வொரு நிமிடமும் நல்ல நேரம் தான்.
உலகில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்க வேண்டும். சிறியதோ பெரியதோ அளவில் பேதமில்லை. எல்லோரும் அவரவர் எண்ணங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். தோல்விகளையும் அவமானங்களையும் கண்டு துவண்டு விடக் கூடாது. நேர்மையான விமர்சனங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். வெற்றி நமதே! இப்போது சொல்லுங்கள், எண்ணங்கள் என்ன விலை?
#எண்ணங்கள் #வெற்றி #வாழ்க்கை #மகிழ்ச்சி #இலக்கு #விலை #பெறுமதி #உலகம் #பயணம் #மனிதன் #சிந்தனை #சிகரம்

நல்ல சிந்தனை.... பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
Delete