BB Tamil 2 | Week 07 | Day 47 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07 | நாள் 47 | கஜினிகாந்த்

'ராணி மகா ராணி' கதறி அழுத காட்சிகளோடு நேற்றைய அத்தியாயம் முடிந்திருந்தது. பிக் பாஸ் அழாதடா செல்லம் என்று தேற்றிக் கொண்டிருந்தார். பிக் பாஸ்க்கு உருவம் இருந்திருந்தால் மடியில் உட்கார வைத்து சோறு ஊட்டியிருப்பார் போல. அவ்வளவு பாசம். நாளை கமலின் நாள். என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதை நாளை பார்த்துக் கொள்வோம். 



46ஆம் நாள் நண்பகல் 12.30மணி. ஐஸ்வர்யா பிக் பாஸ் அறையில் இருந்தார். போட்டி முடிந்தது என்றும் வெளியில் யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் எனவும் கூறி அனுப்பி வைக்கிறார் பிக் பாஸ். மதியம் 01.30 மணி. ராணி மகா ராணி போட்டி முடிந்ததாக பிக் பாஸ் அறிவிக்கிறார். ஐஸ்வர்யா இன்னும் அழுது கொண்டிருந்தார். அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் பிக் பாஸ். 

ஷாரிக் மற்றும் ரித்விகா ஆகியோர் பொதுமக்களில் இருந்து சிறப்பாக செயல்பட்டதாக ஐஸ்வர்யா தேர்வு செய்து அறிவிக்கிறார். இவர்கள் இருவரும் அடுத்த வார தலைவர் போட்டிக்கு நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். ஐஸ்வர்யா அடுத்த வார வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறார். ஐஸ்வர்யா சக போட்டியாளர்களிடம் மன்னிப்புக் கேட்கிறார். தனிப்பட்ட பழிவாங்கல் எதுவும் இல்லையாம். நம்பிட்டோம் போங்க. 

இரவு மும்தாஜ், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா பேசிக்கொண்டிருக்கின்றனர். பாலாஜி மீது குப்பை கொட்டியது தவறு என்று ஜனனி கூறுகிறார். தான் பாலாஜியை ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை என்றும் இன்னொரு முறை இது போன்ற வாய்ப்பு கிடைத்தால் இதற்கு மேலும் பாலாஜிக்கு தண்டனை வழங்குவேன் என ஐஸ்வர்யா கூறுகிறார். 



Who will be saved for Week - 07 | நீங்கள் யாரைக் காப்பற்றப் போகிறீர்கள்?

பொன்னம்பலம் - Ponnambalam
மும்தாஜ் - Mumtaz
மஹத் - mahath
ரித்விகா - Riythvika
பாலாஜி - Bhalaji
ஷாரிக் - Shariq



இரவு 08.30 மணி. வைஷ்ணவி வீட்டுக்குள் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என அறிவிக்கிறார் பிக் பாஸ். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்து பிக் பாஸின் ரகசிய அறையில் விட்டிருந்தனர். பிக் பாஸ் வீட்டில் யார் அதிக நேர்மையானவர் என்று ஒன்றில் தொடங்கி யார் நேர்மையற்றவர் என்பது வரை வரிசைப்படுத்துமாறு வைஷ்ணவிக்கு கூறுகிறார் பிக் பாஸ். 

டேனியல், பொன்னம்பலம், ரித்விகா, மும்தாஜ், ஜனனி, மஹத், பாலாஜி, ஐஸ்வர்யா, சென்றாயன், யாஷிகா, ஷாரிக் - இது தான் வைஷ்ணவியின் தர வரிசை. வைஷ்ணவி இனியும் அவரது திருவிளையாடலைத் தொடர்வாரா? வைஷ்ணவிக்குள் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துள்ளதாக தெரியவில்லை. பார்க்கலாம். 

இரவு 10.30 மணி. பிக் பாஸ் அவசர கூட்ட நேரம். ஐஸ்வர்யா கேமரா மீது தண்ணீர் படும் விதமாக நடந்து கொண்டதால் ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் உள்ள எல்லாக் கேமராக்களிடமும் 'சாரி கேமரா' என்று மன்னிப்புக் கேட்க வேண்டும். பொன்னம்பலம் டேனி மற்றும் ஐஸ்வர்யா மீது உடல் ரீதியான தாக்குதல் நடத்தியதாலும் மைக்கில் தண்ணீர் படுமாறு நடந்து கொண்டதாலும் அவர் இந்த வீட்டில் இருந்து மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப் படுகிறார். 



ஐஸ்வர்யா பாலாஜியிடம் மன்னிப்புக் கேட்கிறார். பாலாஜி தன்னிடம் பேசா விட்டாலும் பரவாயில்லை, வழமை போல எல்லோரிடமும் சிரித்துப் பேச வேண்டும் என்று கேட்கிறார். அவர் போனதும் பாலாஜி அழுகிறார். அவர் இந்த வாரம் முழுவதுமே மன அழுத்தத்துடனேயே இருக்கிறார். பாலாஜியின் கைகளில் சேலைன் மருந்து ஏற்றியதற்கான ஊசி இருப்பதை இன்று அவதானிக்க முடிந்தது. 

47ஆம் நாள் காலை எட்டு மணிக்கு அப்படிப் போடு பாடலுடன் காலைப் பொழுது விடிந்தது. மதியம் 12.45 மணி. ராணி மகா ராணி போட்டிக்கு 2400 புள்ளிகள். பாலாஜி இந்தப் போட்டியில் பங்கேற்காததால் 200 புள்ளிகள் குறைக்கப்பட்டு 2200 புள்ளிகள் வழங்கப்படுகிறது. அதற்கான பொருட் கொள்வனவும் இடம்பெறுகிறது. 

பாலாஜி சாப்பிட்டால் தான் மற்றையவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறியதாக டேனியல் கூறுகிறார். பாலாஜி மேல பிக் பாஸ்க்கு அவ்ளோ பாசமா? பின்னர் தான் தெரிந்தது அது டேனி பாலாஜியை சாப்பிட வைக்க சொன்ன பொய் என்று. பரவால்லியே, அவ்ளோ நல்லவனா நீ? 




உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா YASHIKA
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் ANANTH
ரம்யா RAMYA
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMaker


ஐஸ்வர்யாவின் தலைமைப் பொறுப்பு முடிவுக்கு வருகிறது. அடுத்த தலைவருக்கான போட்டி. ஏற்கனவே அறிவித்த படி ரித்விகா மற்றும் ஷாரிக் மட்டும் போட்டியில் பங்கேற்கின்றனர். இருவருக்கும் கொடுக்கப்பட்ட பூக்களை மண் மேடையில் நட வேண்டும். யார் அதிக பூக்களை நடுகிறார்களோ அவரே அடுத்த தலைவர். ஷாரிக் வெற்றி பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அடுத்ததாக பிக் பாஸ் வீட்டில் அணிகள் பிரிக்கப்படுகின்றன. 

'கஜினிகாந்த்' படக்குழு பிக் பாஸ் வீட்டுக்கு வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியின் டிடி, நடிகர் சதீஷ், நடிகர் ஆர்யா மற்றும் சிலர் வருகை தந்திருந்தனர். மஹத்தை கலாய்க்கின்றனர். மஹத் ஆர்யாவிடம் தன் காதலி என்ன சொன்னார் என்று கேட்கிறார். நீ தான் இங்க ஜாலியா இருக்கியே என்கிறார் சதீஷ். 

அனைவரும் முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பின்னர் வரவேற்பறையில் அமர்ந்து பேசுகின்றனர். பின்னர் சந்தோஷ் கஜினிகாந்த் படக்குழு சார்பாக பேசுகிறார். அடுத்து நடிகர் சதீஷ் பேசுகிறார். கஜினிகாந்த் படம் தொடர்பாக தனது கருத்துக்களைப் பதிவு செய்கிறார் ஆர்யா. தொடர்ந்து 'கஜினிகாந்த்' திரைப்பட முன்னோட்டக் காணொளி ஒளிபரப்பப் படுகிறது. 



கஜினிகாந்த் படக்குழுவினர் விடைபெறுகின்றனர். புயலுக்குப் பின் அமைதி என்பது போல போட்டியாளர்களின் மனதில் அமைதி திரும்பியிருந்தாலும் நாளைய தீர்ப்பை எதிர்நோக்கி புயல் வீசிக்கொண்டிருக்கிறது என்கிறார் பிக் பாஸ். அட போங்க பாஸ். கமல் என்னிக்கு மக்கள் நினைச்சதை பேசியிருக்கார்? வழக்கம் போல ஒரு கதையைச் சொல்லி எல்லாத்தையும் பூசி மெழுகிடுவார். பயப்படாதீங்க. 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!