Monday, 13 August 2018

BB Tamil 2 | Week 08 | Day 55 & 56 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | நாள் 55 & 56 | வாங்க கமல்ஜி

கலைஞர் கருணாநிதிக்கான அஞ்சலியுடன் சனிக்கிழமை அத்தியாயம் ஆரம்பமானது. நாம் எதிர்பார்த்தது தான். கருணாநிதியைப் பற்றிய தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த வார மீள்பார்வை, வெள்ளிக்கிழமை சுருக்கப் பார்வை என்பன வழமையான ஒழுங்கில் வந்தன. அடுத்தது அகம் டிவி வழியே அகத்திற்குள். இந்த முறை ஆரம்பத்திலேயே வெளியேற்றப்படலத்தை ஆரம்பிக்கப்போவதாக பீதியைக் கிளப்பினார் கமல். அடடே இது நல்லாயிருக்கே என்று எதிர்பார்த்தால் நம் எதிர்பார்ப்பு புஸ்வானமாகிப் போனது. வழக்கம் போல அதையும் இதையும் பேசி நேரத்தைக் கடத்தினார். நீங்க நல்லா வருவீங்க கமல் ஜி. 

'புகார்ப் பெட்டி' போட்டியின் போது டேனி கமலுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கமல் அதனை படித்துக் காட்டி விளக்கம் கேட்டார். அதில் பொன்னம்பலம் குறித்த புகார்கள் இருந்தன. ஆனால் அதற்கு மழுப்பலாக பதிலளித்த டேனி அது பொய்யான புகார் என்றும் தெரிவித்தார். பின்னர் கமல் இது போன்ற விளையாட்டுகளை என்னிடம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கண்டித்தார். என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டார். 'என்னைப் போல் ஒருவன்' போட்டியில் அவர்கள் அணிந்திருந்த டீ-ஷர்ட் ஐ அணிந்து அமர வைத்தார் கமல். அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களின் மீது கேள்விக்கணைகளைத் தொடுத்தார் கமல். ஒருவரை ஒருவர் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

வெள்ளிக்கிழமை அத்தியாயத்தின் போது 'பியார் பிரேமா காதல்' திரைப்பட முன்னோட்டத்துக்காக ஹரிஷ் மற்றும் ரைசா உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். அதன் போது அவர்கள் கேட்ட கேள்விக்கு போட்டியாளர்கள் ஆம், இல்லை என பதிலளித்தனர். ஹரிஷ் மஹத்திடம் மஹத் - யாஷிகா இடையிலான உறவு நட்பைத் தாண்டியும் புனிதமானது என்று குறிப்பிட்டதற்கு யாஷிகா உள்பட அனைவரும் ஆம் என்று பதிலளிக்க மஹத் இல்லை என்று பதில் வழங்கினார். இது யாஷிகாவின் மனதைப் பாதித்திருந்தது. அதைப் பற்றி கமல் வினவினார். ஞாயிறு அத்தியாயத்திற்கு முன்பாகவும் பிக் பாஸ் போட்டியாளர்களிடையே இது குறித்த உரையாடல்கள் தொடர்ந்தன. மஹத் காட்டும் அன்பு யாஷிகாவை காதலாக உணர வைத்திருக்கிறது. ஆனாலும் யாஷிகாவிற்கும் சரி மஹத்திற்கும் சரி வெளியில் துணை காத்திருக்கிறது. எது உண்மையான அன்பு எது காதல் என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. எதுவாக இருந்தாலும் பிக் பாஸ் முடிந்த பிறகு வெளியுலகில் சென்று உறுதியான தீர்மானம் மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும். 

கமல் இந்த வார வெளியேற்றத்தை பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று அறிவித்தார். கமலின் அதிரடி வரவால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர் போட்டியாளர்கள். மும்தாஜ் தேநீர் தயாரித்துக் கொடுத்தார். விஸ்வருபம் திரைப்பட முன்னோட்டத்துக்காக மலையாளம் மற்றும் தெலுங்கு பிக் பாஸ் இல்லங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த வார வெளியேற்றம் பொன்னம்பலம். யாரும் அழவில்லை. பாலாஜி எல்லா வாரமும் நீங்க வெளியேற்றப் பட்டியலுக்கு வர்றீங்க, ஆனா போக மாட்டேங்குறீங்க. இருங்க உங்களை கமலே வந்து கூட்டிட்டுப் போவார் என்று சொன்னது பலித்து விட்டதாக பொன்னம்பலம் குறிப்பிட்டார். பொன்னம்பலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். பொன்னம்பலத்துக்கு விளையாட்டுக்கள் ஏதும் இல்லை. ஒருவேளை பொன்னம்பலத்துக்கு சண்டை போடத்தான் தெரியும், விளையாடத் தெரியாது என்று கமல் நினைத்துக் கொண்டாரோ? இருக்கலாம். 

இந்த வார இறுதி நிகழ்ச்சிகளும் வழமை போலவே சுமார் ரகம் தான். ஞாயிறு அத்தியாயம் அரை மணிநேரம் முன்னதாகவே முடிந்து போனது சோகம். கமல் அரசியலில் தீவிரமான கட்டத்தில் இருப்பதால் முழுமையாக நிகழ்ச்சிக்குள்ளும் வராமல் அரசியலும் பேசாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தன் பணியைச் செய்து வருகிறார். ரசிகர்களின் இந்த எண்ணமும் கமலின் காதுகளைச் சென்றடையுமா? பழைய பொலிவு மீண்டும் திரும்புமா? காத்திருப்போம். 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...