BB TAMIL 2 | WEEK 10 | DAY 66 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | நாள் 66 | உத்தம வில்லன்

'ஏய் தக்காளி, ராஜமாதா' 

யாரப் பாத்து தக்காளின்ற? 

உன்ன இல்லடா, இந்த மஹத் பையன் இருக்கான்ல. அவன் தான் நம்ம ராஜ மாதாவைப் பார்த்து அப்புடி சொன்னான்.

ஓ. ராஜ மாதா மும்தாஜ் இல்ல?

ஆமா. ராஜ மாதா மேல சூப்பர் வில்லன் ஏற்கனவே கோவமா இருக்காரே? 

ஆனா ராஜ மாதா இப்போலாம் என்ன நடந்தாலும் அமைதியா இருக்காங்க. அமைதியா சிரிக்கறாங்க. 




கோல்கேட் பற்பசைல பல்லு விளக்கியிருப்பாங்க. அதான் சிரிக்கறாங்க. 

நீ வேற. சூப்பர் வில்லன் மஹத் ராஜ மாதாவை என்ன பண்ணியும் அவங்க அசஞ்சு குடுக்கவே இல்லை. 

இந்த வாரம் வெளியேற்றப் பட்டியல்ல இருக்காங்க தானே? அதுதான் இந்த அமைதியா இருக்கும். 

அது மட்டும் இல்லை. அவங்க இறுதிப் போட்டி வரை முன்னேறணும்னு உறுதியா இருக்காங்க. 

டேனியோட கூட மஹத் முட்டிக்கிட்டார் இல்ல? 

டானின்னா யாரு? பாகுபலியவா சொல்ற? 

ஆமா மச்சி. பாக்க ஒரு ஓரத்துல பாகுபலி மாதிரியே இருக்காரு. 

ம்ம்... டேனி கூட கோவப் படவே இல்ல. 

உள்ளுக்குள்ள எதாவது திட்டம் இருக்கும். அதோட டேனி போட்டின்னு வந்தா அதை ஜெயிக்கிறதுல தான் குறியா இருப்பார். 

ஆமா, இந்த போட்டி என்னாது? 

இதுவா? இது 'உத்தம வில்லன்' போட்டி. வில்லன் அணியும் சூப்பர் ஹீரோக்கள் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி. ஒரு சிறைக்கூடு அமைக்கப்பட்டு அதற்குள் ஹெலெனா என்னும் உருவ பொம்மை அடைக்கப்பட்டுள்ளது. அதை விடுவிக்க ஐந்து சாவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சூப்பர் ஹீரோக்கள் வில்லன்களின் எதிர்ப்பை மீறி ஹெலெனா விடுவிக்க வேண்டும். 

முக்கியமானத விட்டியே மச்சி, வில்லன்கள் ஹீரோக்களை கடுப்பேற்றலாம். ஆனால் அவர்கள் அமைதி காக்க வேண்டும். 

ஓ. ராஜ மாதாவோட அமைதிக்கு இந்த விதி தான் காரணமோ?

இதுவும் காரணம். 

பாலாஜியை மோசமான போட்டியாளரா அறிவிக்க இப்போவே திட்டம் போட்டுட்டாங்களே? 

ஐஷுவைக் காப்பாற்ற வேறு வழி? 

அதுக்கு தான் பிக் பாஸ் இருக்காரே? 

ஹீரோக்களின் பங்குக்கு அவங்களும் ஏதாவது செய்யணுமில்ல? 

ஆமாமா, இல்லாட்டி பிக் பாஸ் கோவிச்சுக்குவாரு. 

ராஜ மாதாக்கு பாகுபலி மேலே இன்னா அன்பு? இன்னா அன்பு... 

மஹத் வில்லன் பாகுபலி தலைல முட்டையை உடைச்சு ஊத்தினதும் சாம்பு போட்டு கழுவி விட்டதை பாத்தியா? 

பாம்பு சாம்பு போட்டிச்சா? 

ராஜ மாதா பாம்பா? 

ஆமா, நேத்து பிக் பாஸ் விருதுகள்ன்னு குடுத்தாங்களே? 

ஆமால்ல. ம்ம்... 

இந்த அன்பு எது வரைக்கும் போகுமோ? 

போட்டி முடியும் வரைக்கும். 

இந்த யாஷிகா பிள்ள என்ன பண்ணிக்கிட்டிருக்கு? 

அது தலைவர்ல. நடுவரா இருக்கும். 

இல்லடா, அது சூப்பர் ஹீரோடா.  

ஏன்னா ஹீரோவோ. எல்லாம் ஜீரோவா இருக்கு. 

பிக் பாஸும் என்னென்னமோ பண்ணிப் பாக்கறாரு. ஆனா சேத்துல சிக்குன தேர் மாதிரி நிகழ்ச்சி சலிப்பாவே போய்க்கிட்டிருக்கு. 




Bigg Boss Tamil 2 | Week 10 | Public Opinion Poll | Who Will Be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | மக்கள் வாக்களிப்பு | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்?

பாலாஜி | BALAJI
சென்றாயன் | SENRAYAN
மும்தாஜ் | MUMTAZ
மஹத் | MAHATH
Created with Survey Maker


மக்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டாங்க. 

தலைவருக்கு அரசியல் பண்ணவே நேரம் சரியா இருக்கு. பிக் பாஸை கவனிக்க அவருக்கு நேரமே இல்லை. 

ஐஸ்வர்யாவுக்கு திரிஷா வேஷம். பாத்தியா? 

யாஷிகா நயன்தாராவாம். 

மஹத் தான் சிம்புவோ? 

அது கேமராவுக்கு மட்டும் தான் தெரியும். 

பாலாஜி எந்திரன். 

அதுனால தான் ஒன்னும் பன்னாம இருக்காரோ? 

அவரு எப்பவுமே இப்படி தானே? பத்து வாரம் வந்ததே பெரிய விஷயம். 

கலகலப்பா ஆரம்பிச்ச போட்டி கலவரமா போய்க்கிட்டிருக்கேப்பா? 

ஆமா. அஞ்சு மேக்னட் பூட்டுக்கள்ல மூணு திறந்தாச்சு. 66ஆம் நாள் இன்னும் முடியலை. 

இன்னும் ரெண்டு பூட்டைத் திறந்ததும் அணிகளை மாறி நடிக்க வைப்பாரா இருக்கும். 

மும்தாஜ் கூட அதைத்தான் சொன்னார். 

அப்படி நடந்தா டேனியல் மஹத்தை வச்சு செய்வாப்ல. 

ம்ம்.. நடக்கட்டும். 

சரி நாம் விடை பெறட்டும். 

டும்.   

BIGG BOSS TAMIL EPISODE 67 | BIGG BOSS TAMIL 22/08/2018 | BIGG BOSS TAMIL 22-08-2018 | BIGG BOSS TAMIL ONLINE | BIGG BOSS TAMIL ELIMINATION | BIGG BOSS TAMIL GOOGLE VOTE | BIGG BOSS TODAY EPISODE | BIGG BOSS TAMIL 2 22/08/2018 VIJAY TV SHOW | BIGG BOSS TAMIL 2 VIJAY TV SHOW ONLINE | OVIYA ARMY | AISHWARYA ARMY | YASHIKA ARMY | PONNAMBALAM ARMY | SENRAYAN ARMY | BIGG BOSS TAMIL GROUP | MUMTAZ ARMY | BIGG BOSS TAMIL 2 WILD CARD ENTRY | BIGG BOSS TAMIL SEASON 2 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!