BB Tamil 2 | Week 08 | Day 54 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | நாள் 54 | பியார் பிரேமா காதல்
'பியார் பிரேமா காதல்' படக்குழுவினர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருந்தனர். பிக் பாஸ் முடிவதற்குள் இந்த ஆண்டுக்கான தமிழ்ப்படங்கள் எல்லாம் வெளியாகிவிடும் போல இருக்கிறது. அந்த அளவுக்கு திரைப்பட முன்னோட்டங்கள் பிக் பாஸ் வீட்டில் இடம்பெறுகிறது. பிக் பாஸ் முதலாம் பருவ போட்டியாளர்களாக ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோரும் இயக்குனரும் வந்திருந்தனர்.
மூவரும் நீண்ட நேரத்தை பிக் பாஸ் வீட்டில் செலவிட்டனர். ஹரிஷ் போட்டியாளர்களை மதிப்பிட்டிருந்த விதம் சிறப்பாக இருந்தது. 'பியார் பிரேமா காதல்' திரைப்பட முன்னோட்ட காணொளி காண்பிக்கப்பட்டது. ஹரிஷ் மற்றும் ரைசா ஜோடிப் பொருத்தம் சிறப்பாக இருந்தது. மூவரும் கேள்வி கேட்டு ஆம், இல்லை பதில்களை கேட்டுப் பெற்றனர். எல்லாம் பிக் பாஸோட வேலையாதான் இருக்கும்.
யாஷிகா - மஹத் இடையிலான நட்பு யாஷிகாவின் மனதைப் பாதித்திருக்கிறது. மஹத் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அவர் யாஷிகாவின் மீது காண்பிக்கும் அன்பு இருவருக்குமிடையிலான நெருக்கத்தை அதிகரித்திருக்கிறது. கடந்த முறை ஓவியா ஆரவ் மீது அன்பு கொண்டது போல இதுவும் மாறக் கூடும். வெளியுலகத் தொடர்புகள் இல்லாத நிலையில் கொஞ்சம் அன்பு கிடைத்தாலும் மனம் அதையே நாடும்.
எது எப்படி இருந்தாலும் பிக் பாஸ் கடந்த முறை போல உயிரோடு விளையாடாமல் இந்த முறையாவது இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்துவார் என நம்புவோமாக. இன்று வேறு முக்கியமான நிகழ்வுகள் எதுவும் இல்லை. போட்டிகளும் இல்லை. நமக்கும் இதுவும் ஒரு நாள் தான் என்பதாய்க் கடந்திருக்கிறது. சனி ஞாயிறுகளில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்