BB Tamil 2 | Week 08 | Day 52 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | நாள் 52 | ஆதவனுக்கு அஞ்சலி

'பாப்பா பாப்பா பப்பரப்பா' என்று 52ஆம் நாள் காலைப்பொழுது விடிந்தது. 'என்னைப் போல் ஒருவன்' குழப்பகரமான போட்டி தொடர்ந்தது. ஏதோ எல்லோருக்குள்ளும் ஆவி புகுந்தாற் போல இருக்கிறது இந்தப் போட்டி. தலையும் புரியவில்லை, வாலும் விளங்கவில்லை. நீங்களும் உங்க போட்டியும். 



மஹத் சுடிதார் போட்டிருந்தார். வைஷ்ணவி வேட்டி கட்டியிருந்தார். ஜனனி அரைக் காற்சட்டை போட்டிருந்தார். டேனியல் யாஷிகாவாக மாறுகிறேன் என்று அரைக் காற்சட்டையுடன் தொப்புளைக் காட்டிக்கொண்டு இருந்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆடையணிந்து இருந்தார்கள். போட்டியில் ஈடுபாட்டோடு இருக்கிறார்களாம். சரி தான் போங்க. 

நீல அணி பிக் பாஸ் அவர்களுக்குக் கொடுத்த இரகசிய சவாலைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அவ்வப்போது இரகசியமாக கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பிக் பாஸுக்கு நடுவில் யாரையாவது கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பதே வாடிக்கை ஆகி விட்டது. 



BB Tamil 2 | Week 08 | Who will be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | யாரைக் காப்பற்றப் போகிறீர்கள்?

SENRAYAN | சென்றாயன்
PONNAMBALAM | பொன்னம்பலம்
JANANI | ஜனனி
Created with Survey Maker



மதியம் 02.00 மணி. பிக் பாஸ் நீல அணியைக் கூப்பிட்டு கூட்டம் போட்டார். எதிரணியை மூன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைத்திருக்கிறீர்கள். இன்னும் மூன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைத்தால் அதற்கு பரிசு வழங்கப்படும். பின்னர் சிவப்பு அணியைக் கூப்பிட்டு கூட்டம் போட்டார். நேற்றைக்கும் இன்றைக்கும் போட்டியில் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள் என்று கேட்டார். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் போலும். 

மாலை ஆறு மணியளவில் நடுவர் ரித்விகா இரண்டு அணிகளையும் அழைத்துக் கூட்டம் போட்டார். நீங்க அப்படிப் பண்றீங்க இப்படிப் பண்றீங்க என்று அடித்துக் கொண்டார்கள். ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஆனது. ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி கூட்டத்தை முடித்து வைத்தார் ரித்விகா. 




உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா YASHIKA
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் ANANTH
ரம்யா RAMYA
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMaker


இரவு 07.00 மணி. இந்த வார போட்டி 'என்னைப் போல் ஒருவன்' முடிவுக்கு வந்தது. முன்னாள் தமிழக முதல்வர் மறைந்தது காரணமாக இருக்கலாம். அது தொடர்பான காட்சிகள் முன்னோட்டக் காணொளியிலும் காண்பிக்கப்பட்டது. போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். அப்பாடா குழப்பம் தீர்ந்ததுடா சாமி என்று நமக்கும் நிம்மதியாக இருக்கிறது. 

இரவு 09.00 மணி. கலைஞர் கருணாநிதி மறைந்தார் என்கிற செய்தியை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவித்தார் பிக் பாஸ். அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். மஹத் கண்ணீர் விட்டு அழுதார். தொலைக்காட்சி முன் நின்று ஒருவர் பின் ஒருவராக தங்கள் இரங்கலைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கினார் பிக் பாஸ். கடைசியாக கவிதையாய்ப் பேசி இன்றைய அத்தியாயத்தை நிறைவு செய்தார் பிக் பாஸ். 


#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!