Share it

Monday, 29 April 2019

வலைப்பதிவு வழிகாட்டி - 04

பிளாக்கர் (Blogger) துணையுடன் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது பற்றி இதுவரை நாம் பார்த்தோம். 

Image Credit: Google 


அதன் படி முறைகளை நீங்கள் கீழ்வரும் இணைப்புகளில் ஒழுங்குமுறையில் காணலாம். 
சரி, வலைப்பதிவை உருவாக்கிவிட்டோம். இனி எழுதப் போகலாமே என்பது உங்கள் எண்ணமாக இருக்கும். ஆனால் அதை விட முக்கியமான சில படிமுறைகள் இருக்கின்றன. அவற்றையும் செய்த பின்னர் நாம் எழுதத் துவங்குவோம். 

வலைப்பதிவு அமைப்புகளை (Settings) கட்டமைக்க வேண்டும். 

உங்கள் வலைப்பதிவின் கட்டுப்பாட்டு பகுதியில் (Dashboard) இடது பக்கத்தில் கீழே இந்த Settings காணப்படும். Settings இனை தெரிவு செய்யுங்கள் இங்கு 'Basic' என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவின் அடிப்படை விவரங்களை மீண்டும் மாற்றி அமைக்கலாம். 
Title என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவு தலைப்பை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உங்கள் வலைப்பதிவுக்கான புதிய தலைப்பை உள்ளிட்ட பின்னர் 'Save Changes' என்பதை சொடுக்குங்கள். 'Description' என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவு குறித்த விளக்கத்தை அளிக்க முடியும். என்ன நோக்கத்துக்காக நீங்கள் இந்த வலைப்பதிவை துவங்கியிருக்கிறீர்கள் என்பதை 500 சொற்களுக்குள் இங்கே கொடுக்கலாம். 


இது உங்கள் வலைத்தளத்தின் தலைப்பின் கீழேயே காட்டப்படும். வாசகர்கள் கண்ணில் தலைப்புக்கு அடுத்தபடியாக முதலில் கண்ணில் படுவது இது தான். ஆகவே வாசகர்களைக் கவரக் கூடியவாறும் உங்கள் நோக்கத்தை தெளிவாக விளக்கக் கூடியவாறும் இது அமைதல் சிறப்பு. 

'Description' ஐ கொடுத்து 'Save Changes' பொத்தானை சொடுக்குங்கள். இப்போது உங்கள் வலைப்பதிவின் முகப்புப் பக்கம் மேற்கண்டவாறு காட்சியளிக்கும். அடுத்ததாக 'Basic' இல் 'Privacy' என்பதை தெரிவு செய்யுங்கள். இதில் இரண்டு தெரிவுகளும் 'Yes' என்பது தெரிவு செய்யப்பட்டிருக்கும். 

முதலாவது 'BLOGGER' சேவைகளில் உங்கள் வலைத்தளம் பட்டியலிடப்படுவதையும் அடுத்தது இணையத்தள தேடு பொறிகளில் (Search Engines) உங்கள் வலைத்தளம் காண்பிக்கப்படுவதையும் குறிக்கும். 

இரண்டையும் முடக்காமல் இருப்பது நல்லது. உங்கள் வலைத்தளத்துக்கான வாசகர்கள் வருகை எண்ணிக்கையை இதுவும் தீர்மானிக்கும். தெரிவுகளை மாற்றாமல் 'Save Changes' ஐ சொடுக்குங்கள். 

இன்னும் இருக்கிறது நமது வழிகாட்டி. காத்திருங்கள். அனைத்து அடிப்படை மற்றும் அவசியமான விடயங்களையும் உங்களுக்காக இங்கே விளக்கத் தயாராக உள்ளோம். இந்தத் தொடர் முடிவடைந்ததும் வேர்ட்பிரஸ் தளங்களை வடிவமைப்பது குறித்தும் விளக்க எதிர்பார்த்துள்ளோம். 

வலைப்பதிவு வழிகாட்டி - 04 
https://newsigaram.blogspot.com/2019/04/valaippathivu-valikaatti-04.html 
#Blogger #WordPress #Tamil #Guide #பிளாக்கர் #வேர்ட்பிரஸ் #வலைப்பதிவு #வழிகாட்டி #தமிழ் #இணையத்தளம் #வலைத்தளம் #வலைப்பூ  

Sunday, 28 April 2019

அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன? - 7 முக்கிய தகவல்கள் | கட்டுரை | பிபிசி தமிழ்

அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன? -

7 முக்கிய தகவல்கள்!

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த பாராளுமன்றம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது. 

இந்நிலையில், அவசரகால சட்டம் எப்போது இலங்கையில் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம். 

காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டது.ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் போன்ற காரணிகளினால் அவசரகால சட்டம் தொடர்ந்தும் பல தடவைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. 

இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவசர கால சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்திருந்தது. 

எனினும், கடந்த 9 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அவசர கால சட்ட சரத்துக்களை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்குதலை அடுத்து, ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை நீக்கி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அவசர காலச் சட்டத்தினால் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் சட்டத்தரணி ஜி. ராஜகுலேந்திரா பி.பி.சி தமிழுக்கு தெளிவூட்டினார். 

1. சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு மாத்திரம் காணப்படுகின்ற அதிகாரம், தற்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

2. பொலிஸார் தவிர்ந்த ஏனைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள், அவர்களின் தடுப்பு காவலில் 24 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படுகின்றது. 

3. 24 மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸாருக்கு சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டு, தடுப்பு காவல் கட்டளையின் பிரகாரம், அவரை ஒரு மாத காலம் தடுத்து வைக்க முடியும். 

4. ஒரு மாத காலத்திற்கு மேல் சந்தேக நபரை தடுத்து வைத்து, விசாரணை செய்ய வேண்டுமாயின், பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் குறித்த சந்தேகநபர் மேலும் ஒரு மாத காலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அதிகாரம் காணப்படுகின்றது. 

5. கைது செய்யப்படும் சந்தேக நபரிடம் முழுமையான விசாரணை நிறைவடையும் வரை, நீதிமன்றத்திற்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் கிடையாது. 

6. கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் சந்தேக நபர் குற்றமிழைக்காதவர் என்பதனை பாதுகாப்பு தரப்பினரால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே பிணை வழங்கப்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

7. தேவை ஏற்படும் பட்சத்தில், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது. 

(பிபிசி தமிழ் /  https://www.google.com/amp/s/www.bbc.com/tamil/amp/sri-lanka-48044941 ) 

Saturday, 27 April 2019

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | பங்களாதேஷ் அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 

பங்களாதேஷ் அணி விபரம் 

15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி 

Image Credit : ICC 


மஷ்ரபி மோர்தசா (தலைவர்) 

தமீம் இக்பால் 

லிதோன் தாஸ் 

சௌம்யா சர்கார் 

முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்) 

மஹ்மதுல்லாஹ் 

ஷகிப் அல் ஹசன் 

மொஹம்மட் மிதுன் 

சப்பிர் ரஹ்மான் 

மொஸாடெக் ஹாசன்  

மொஹமட் சைபுதீன் 

மெஹிதி ஹாசன் 

ருபேல் ஹுசைன் 

முஸ்தபிஸுர் ரஹ்மான் 

அபு ஜயித் 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | பங்களாதேஷ் அணி விபரம் 
https://newsigaram.blogspot.com/2019/04/icc-cricket-world-cup-2019-team-squad-bangladesh.html 
#CWC19 #Australia #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

உலகில் கோபமும் மன அழுத்தமும் அதிகரித்துள்ளன - புதிய ஆய்வில் தகவல்

ஒரு புதிய உலகளாவிய ஆய்வின் படி உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிக கோபம், மன அழுத்தம் மற்றும் கவலையால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Gallup என்னும் நிறுவனம் உலகின் 140 நாடுகளில் உள்ள 151,000 பேரிடம் 2018ஆம் ஆண்டு நடத்திய நேர்காணல் ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. 

ஆய்வில் பங்கு கொண்ட மூன்றில் ஒரு பகுதியினர் தாம் மனா அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். அத்துடன் ஐந்து பேரில் ஒருவர் சோகம் அல்லது கோபமாக உணர்கின்றனர். 

Gallup 2019 Global Emotions Report மூலம் மக்களின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான அனுபவங்கள் குறித்து Gallup நிறுவனத்தினர் கேட்டறிந்துள்ளனர். 

Image Credit : gallup.com


ஆய்வில் பங்கேற்ற மக்களின் ஆய்வு நடத்தப்பட்ட நாளுக்கு முந்தைய நாளின் அனுபவங்கள் குறித்து Gallup நிறுவனத்தினர் கவனம் செலுத்தியிருந்தனர். 

71% பேர் முந்தைய நாளில்குறிப்பிடத்தக்க மகிழ்ச்சியை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர். 

மன அழுத்தம், கவலை மற்றும் சோகம் ஆகியன முன்பை விட அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்கு முந்தைய நாளில் 39% பேர் கவலையாகவும் 35% பேர் மன அழுத்தமாகவும் உணர்ந்துள்ளனர். 

நேர்மறையான எண்ணங்களை அதிகம் கொண்ட முதல் 5 நாடுகள் 

* பரகுவே 

* பனாமா 

* குவாதமாலா 

* மெக்ஸிகோ 

* எல் சல்வடோர் 

எதிர்மறையான எண்ணங்களை அதிகம் கொண்ட முதல் 3 நாடுகள் 

* சாட் 

* நைஜர் 

* சியரா லியோன் 

* ஈராக் 

* ஈரான் 

கிறீஸ் நாட்டைச் சேர்ந்த 59% பேர் ஆய்வுக்கு முந்தைய நாளில் அதிக மன அழுத்தத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். அமெரிக்கவைச் சேர்ந்த வயது வந்தோரில் 55% பேர் மன அழுத்தத்தை உணர்வதாகப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி : 

ஆங்கில மூலம் - பிபிசி 

Gallup இணையத்தளம் 

உலகில் கோபமும் மன அழுத்தமும் அதிகரித்துள்ளன - புதிய ஆய்வில் தகவல் 
https://newsigaram.blogspot.com/2019/04/angry-and-stress-increased-in-the-world.html 
#Gallup #Research #Interview #angry #Stress #Worry #Sad #Survey #Positive #Negative #Experience #day #Society #Poll #Global #Emotions 

Wednesday, 24 April 2019

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | அவுஸ்திரேலிய அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 

அவுஸ்திரேலிய அணி விபரம் 

15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி 


Image Credit: ICC 


ஆரோன் பின்ச் (தலைவர்) 

ஜேசன் பெஹ்ரென்டோர்ப்ஃ 

அலெக்ஸ் கரே 

நெதன் கோல்டெர் நைல் 

பெட் கம்மின்ஸ் 

உஸ்மான் கவாஜா 

நெதன் லயன் 

ஷோன் மார்ஷ் 

கிளென் மெக்ஸ்வெல் 

ஜாய் ரிச்சர்ட்ஸன் 

ஸ்டீவ் ஸ்மித் 

மிட்சேல் ஸ்டார்க் 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் 

டேவிட் வார்னர் 

ஆடம் ஸம்பா 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | அவுஸ்திரேலிய அணி விபரம் 
https://newsigaram.blogspot.com/2019/04/icc-cricket-world-cup-2019-team-squad-australia.html 
#CWC19 #Australia #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

Tuesday, 23 April 2019

இலங்கையில் பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் - நாளேடுகளில் நமது பார்வை - 2019.04.22

இலங்கை நாளேடுகளில் சில... 
இந்திய நாளேடுகளில் சில... 

இலங்கையில் பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் - நாளேடுகளில் நமது பார்வை - 2019.04.22 
https://newsigaram.blogspot.com/2019/04/sri-lanka-terror-attack-our-view-on-news-papers.html 
#MetroNews #Virakesari #Vidivelli #DailyExpress #CeylonToday #Thinakaran #Dinakaran #TamilMurasu #Dinamalar #DailyThanthi #Dinasudar #TheHinduTamil #Thinaboomi #NewsPaper #Review #Lka #Lanka #SriLanka #BombBlast #SriLankaBlasts #srilankaterrorattack #EasterSundayAttacksLK #EasterAttackSL 

Monday, 22 April 2019

இலங்கையில் சமூக வலைத்தள முடக்கம் சொல்லும் செய்தி

இலங்கையில் 2019.04.21 அன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து பேஸ்புக், வைபர் மற்றும் வாட்ஸப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. 

கடந்த வருடம் கண்டி திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து குறித்த சமூக வலைத்தளங்கள் முதல் முறையாக முடக்கப்பட்டிருந்தன. 

இப்போது இரண்டாவது முறையாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. 

Image Credit: Google 


அண்மையில் நியூஸிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சேர்ச் பகுதியில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களுக்காக பேஸ்புக் கடும் கண்டனங்களை சந்தித்திருந்தது. 

சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறு பரப்புவதும் வன்முறையைத் தூண்டும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. 

தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்பது போல திறன்பேசி வைத்திருக்கும் எல்லோரும் ஊடகவியலாளர்களாகி விடுகிறார்கள். பக்கத்து வீட்டு சண்டை முதல் பக்கத்து நாட்டு சண்டை வரை எல்லாவற்றையும் வரைமுறையின்றி பதிவிடுகின்றனர். 

தனி மனித தாக்குதல்களும் இன முறுகல்களைத் தோற்றுவிக்கக் கூடிய வகையிலான கருத்துக்களும் கட்டுப்பாடின்றி பகிரப்படுவதே இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படக் காரணமாகும். 

ஆகவே இனி வரும் காலங்களில் உலக நாடுகள் ஒன்றிணைந்து சமூக வலைத்தளங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும். இது இணைய சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என்றாலும் அதனை தவறாகப் பயன்படுத்தியதன் விளைவை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும். 

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அனைவரும் ஒரு நிமிடம் சிந்தியுங்கள். அடுத்தவர் மனம் புண்படும் படியான பதிவுகளை வெளியிடாதிருங்கள். போலியான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிருங்கள். நமது எழுத்துக்கள் யாரையும் காயப்படுத்தாவண்ணம் அமைவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

இப்படியெல்லாம் முடியாது, நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன் என்றால் இணைய வெளியில் நம் குரல் வளை நசுக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. 

இலங்கையில் சமூக வலைத்தள முடக்கம் சொல்லும் செய்தி 
https://newsigaram.blogspot.com/2019/04/social-media-ban-in-sri-lanka.html 
#LKA #SriLanka #Lanka #Attacks #ChurchAttacks #Explosions #Curfew #Blast #BombBlast #Killed #Colombo #Batticaloa #Negombo #TerrorAttack #SocialMediaBan #News 

உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்கள்!

சித்திரை விடுமுறைக்குப் பின்னர் வழமைக்குத் திரும்ப முயன்ற இலங்கை பெரும் துயரில் வீழ்ந்துள்ளது. இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்களினால் சுமார் 227 பேர் வரை பலியாகியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள், மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகள், தேசிய மிருகக் காட்சி சாலைக்கு அருகாமையிலுள்ள உணவகம், தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதி ஆகியன குண்டுவெடிப்புக்கு இலக்கான பகுதிகள். 

2019.04.21 அன்று காலை முதல் மதியம் வரை எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகின. 

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் - 65 பேர் பலி; 267 பேர் காயம். 

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் - 30 பேர் பலி; 75 பேர் காயம். 

நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் - 112 பேர் பலி; 100 பேர் காயம். 

தெஹிவளை மிருகக் காட்சி சாலைக்கு அருகில் உள்ள உணவகம் - 2 பேர் பலி. 

Image Credit: FB


கொழும்பு தெமட்டகொட குடியிருப்பு பகுதி - 3 பேர் பலி. 

கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதிகள் (சின்னமன் கிராண்ட், ஷங்ரிலா மற்றும் கிங்ஸ்பெரி) - 30 பேர் பலி. 

மேலும் நீர்கொழும்பு கட்டுநாயக்க பிரதேசம் மற்றும் வெள்ளவத்தை பிரதேசங்களில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பேஸ்புக், வைபர் மற்றும் வாட்ஸப் ஆகிய சமூக வலைத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. 

இயவு நேர தபால் புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

பல்வேறு போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன. 

மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

பேரூந்துகளில் பெரிய பயணப் பொதிகளைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் முப்படைகளின் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

தேவைப்பட்டால் அவசர கால சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னெடுக்கும். 

இறந்தவர்களின் உடல்களை அரசு செலவில் அடக்கம் செய்ய நடவடிக்கை. 

உலகத் தலைவர்கள் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம்! 

உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்கள்! 
https://newsigaram.blogspot.com/2019/04/attacks-at-sri-lankan-hotels-and-church.html 
#LKA #SriLanka #Lanka #Attacks #ChurchAttacks #Explosions #Curfew #Blast #BombBlast #Killed #Colombo #Batticaloa #Negombo #TerrorAttack #SocialMediaBan #News 

Saturday, 20 April 2019

பேராதனை பழைய புகையிரத நிலையம்

இலங்கையில் புகையிரத சேவை இற்றைக்கு சுமார் 161 ஆண்டுகளுக்கு முன்பு 1858ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

படிப்படியாக ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் புகையிரத சேவைகள் விஸ்தரிக்கப்பட்டன. 

இன்று காணப்படும் புகையிரத மார்க்கங்களில் பெரும்பாலானவை சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்டவை ஆகும். 

ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையின் அளவுக்கு சிங்கள அரசாங்கத்தால் புகையிரதப் பாதைகள் மேம்படுத்தப்படவில்லை. 

இன்றைக்கும் கூட ஆங்கிலேயர் கால சேவை அட்டவணையின் பிரகாரமே புகையிரத சேவைகள் மேற்கொள்ளப்படுவதாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன். 

சரி, 2019.04.20 அன்று எனது ஊரில் இருந்து கொழும்புக்கு வரும் வழியில் பேராதனை புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் போது புகையிரத நிலையத்தின் ஒரு புறம் இருந்த பேராதனை பழைய புகையிரத நிலைய கட்டடம் கண்ணில் பட்டது. இப் புகையிரத நிலையம் 1867ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. அதாவது இலங்கையில் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகளில்! காலம் கடந்த நினைவுச் சின்னங்கள் அருகி வரும் நிலையில் அதனை இங்கே பகிர வேண்டும் என்று தோன்றியது. அதனால் இங்கே சிறு குறிப்பாக இங்கே பகிர்ந்து கொண்டேன். 

Thursday, 18 April 2019

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இந்திய அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 

இந்திய அணி விபரம் 

15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி 

Image Credit: ICC

விராட் கோஹ்லி (தலைவர்) 

ரோஹித் ஷர்மா 

ஷிக்கர் தவான் 

கே.எல். ராகுல் 

மகேந்திர சிங் தோனி 

கேதார் ஜாதவ் 

ஹர்திக் பாண்டியா 

விஜய் ஷங்கர் 

குல்தீப் யாதவ் 

யுஸ்வேந்திர சாஹல் 

ஜஸ்பிரிட் பும்ரா 

புவனேஷ்வர் குமார் 

மொஹமட் ஷமி 

ரவீந்திர ஜடேஜா 

தினேஷ் கார்த்திக் 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இந்திய அணி விபரம் 
https://newsigaram.blogspot.com/2019/04/icc-cricket-world-cup-2019-team-squad-india.html 
#CWC19 #NewZealand #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

வேண்டும்

Image Credit : Google


கல்வியில் சிறப்பு வேண்டும் 
வறுமையில் பொறுமை வேண்டும் 
உலகில் சமாதானம் வேண்டும் 
இனத்தில் ஒற்றுமை வேண்டும் 
வாழ்வில் அமைதி வேண்டும்! 

துரைசாமி லட்சுமணன், 
கொட்டகலை. 

குறிப்பு : 2003ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் என்னால் முதன்முதலில் எழுதப்பட்ட கவிதை இது. எந்த தினத்தில் வெளியிடப்பட்டது என்பதை மிகச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஆகவே 04.01.2019 திகதிக்கு இப்பதிவை அமைக்கிறேன். 

Wednesday, 17 April 2019

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 

நியூசிலாந்து அணி விபரம் 

15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி 

கேன் வில்லியம்சன் - தலைவர் 

டொம் ப்ளன்டெல் 

ட்ரெண்ட் போல்ட் 

லொக்கி ஃபெர்குசன் 

கொலின் டீ க்ரென்தோம் 

மார்டின் கப்டில் 

மாட் ஹென்றி டொம் லெதம் 

கொலின் முன்றோ 

ஜிம்மி நீஷம் 

ஹென்றி நிகோல்ஸ் 

மிட்ச் சாண்ட்னெர் 

இஷ் சோதி 

டிம் சௌதீ 

ரொஸ் டெய்லர் 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம் 
https://newsigaram.blogspot.com/2019/04/icc-cricket-world-cup-2019-team-squad-new-zealand.html 
#CWC19 #NewZealand #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

மலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும்

மலையகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கல்வியறிவு மேம்படுத்தப்பட வேண்டும். உரிய தரப்பினர் அக்கறை செலுத்தாமையினால் எமது கல்வி நிலை முன்னேறுவதற்குப் பதிலாக பின்னடைவையே எதிர்நோக்குகிறது. மலையகக் கல்வியின் பின்னடைவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகள், சமூகம் என சகல தரப்பினருக்கும் பங்குண்டு. ஆனால், பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு ஆசிரியர்களுக்கே உண்டு. ஏனெனில் இதில் அவர்கள் தான் நேரடியாக சம்பந்தப்படுகின்றனர். அரசியல் காரணங்கள், வளங்கள் இன்மை என எத்தனை சவால்கள் இருந்தாலும் அதையும் தாண்டி மலையகக் கல்வி அபிவிருத்தி, மாணவனின் முன்னேற்றம் என்பதை நோக்காகக் கொண்டு உழைப்பவரே உண்மையான ஆசிரியர். 

ஆசிரியர் தொழில் என்பது பலருக்கு ஒரு வருமான மார்க்கமாக மட்டுமே இருக்கிறது. தமது குடும்ப சூழ்நிலைகளின் பிரதிபலிப்புகளை அவர்கள் பாடசாலைக்குள் வெளிக்காட்டுகின்றனர். இது தவறாகும். ஆசிரியர்களிடையே கையடக்கத் தொலைபேசியின் பாவனை அதிகரித்து வருகின்றது. பாடங்களை நடத்தும்போது அழைப்புகள் வந்தால் பேசியே பாடத்தை முடித்து விடுகின்றனர். 

Image Credit: Google 


மாணவர்களை முழுமையாக கல்வி நடவடிக்கையில் உள்வாங்க ஆசிரியர்கள் முயற்சிப்பதில்லை. அதாவது 8 பாட வேளைகளும் பூரணமாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை. இது பெறுபேறுகளில் வீழ்ச்சி ஏற்பட ஏதுவாகிறது. 

திறன் குறைந்த மாணவர்கள் மட்டந்தட்டப்படுதல் என்பது முக்கியமானதொரு காரணி. கற்கும் திறன் கூடியவர்களுக்கே வகுப்பில் அதிகளவில் முக்கியத்துவமளிக்கப்படுகிறது. ஏனையோர் பார்வையாளர்களாகவே கருதப்படுகின்றனர். இது மாணவர்களை மனதளவில் பாதிப்பதுடன் அவர்களது எதிர்காலத்தையும் பாதிப்படையச் செய்கிறது. 

அக்கறையின்றி கற்பித்தல் கூட கல்வி நிலை பின்னடைய காரணமாகிறது. ஐந்தாம் தரத்தை கடந்த பின்னரும் சில பிள்ளைகள் தமிழ் எழுத்துக்களை அடையாளம் காணும் திறனற்றவர்களாகவும் உயர் தரத்திலும் எழுத்துப் பிழையின்றி எழுத முடியாதவர்களாகவும் பல மாணவர்கள் காணப்படுகின்றனர். இவ்வாறான மாணவர்கள் தோட்டப்புற மாணவர்களாகவே காணப்படுகின்றனர். 

பல ஆசிரியர்கள் 'தோட்டப்புற மாணவர்களால் படிக்க முடியாது' என்ற முடிவுடனேயே கற்பிக்க ஆரம்பிக்கின்றனர். ஆரம்ப வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் விடும் தவறுகளை அன்புடனும் பண்புடனும் சொல்லிப் புரிய வைத்திருக்க வேண்டும். 

சில ஆசிரியர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். 'நீ எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன' என்ற வார்த்தைப் பிரயோகம் பல ஆசிரியர்களால் பயன்படுத்தப்படுவதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். அவர்களின் வீட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கான கோபத்தை மாணவர்கள் மீது காட்டுகின்றனர். 

ஆசிரியர்கள் என்றாலே தவறானவர்கள் என்ற கருத்தை நான் முன்வைக்க வரவில்லை. மாறாக அவர்களின் தரப்பில் காணப்படும் குறைகளை சுட்டிக் காட்டியிருக்கிறேன், அவ்வளவுதான். இன்றைக்கு மலையகத்தில் ஓரளவுக்கேனும் ஒரு சிறப்பான கல்வி நிலை காணப்படுகிறதென்றால் உண்மையான அக்கறையுள்ள ஆசிரியர்களின் கடின உழைப்புதான் என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. 

நாம் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். ஆனால், இருக்கின்ற குறைகளை ஒப்புக் கொண்டு திருத்த முயல்வது தானே சிறந்த பண்பு. 

மாணவர்கள் தரப்பிலும் குறைகள் இருப்பதை சுட்டிக் காட்டியாக வேண்டும். திரைப்படத்தோடும் மது பாவனை, காதல் வயப்படுதல், கல்வி மீது அக்கறையின்றி செயற்படல் என்பன மாணவர் தரப்புக் குறைபாடுகள். எனினும், சிறு வயதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டலைப் பொறுத்தே அவர்கள் பிற்காலத்தில் செயற்படும் விதம் அமையும். எனவே மலையகக் கல்வி பின்னடைவுக்கு ஆசிரிய சமூகமே பொறுப்பு என்பது நிதர்சனமான உண்மை. 

தோட்டப்புற, நகர்ப்புற பிரிப்புகளும் ஆசிரியர்களாலேயே ஏற்படுகின்றன. தோட்டப்புற பாடசாலைகளில் பணிபுரிய பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை. அவர்கள் வசதி வாய்ப்புகளுடன் நகரத்தில் வாழவே விரும்புகின்றனர். 

என்னதான் யுத்தம் நடந்தாலும் வடக்கு கிழக்கு பிரதேச மாணவர்கள் கல்வியை கைவிடவில்லை. நாம் வறுமை என்னும் போலிக் காரணத்தைக் கூறி பின்வாங்கிக் கொண்டிருக்கிறோம். 

அரசியலில் நாம் நம்மவர்களாலேயே ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே நமக்குத் தேவையானது அசுர வளர்ச்சி, விரைவாக கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழும் சாதனைகள், அதனைக் கண்டு வியக்கும் உலகம். உலகத்துக்கொரு முன்மாதிரியான, முன்னேற்றகரமான மலையகம் உருவாக வேண்டுமென்பதே என் அவா. எனவே உரிய தரப்பினர் தமது குறைகளைத் திருத்திக் கொண்டு இனிமேலாவது மலையக அபிவிருத்திக்காக பாடுபட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

குறிப்பு: இக்கட்டுரை இலங்கையின் பிரபல மலையக வார இதழ் 'சூரிய காந்தி'யில் 22.07.2009ஆம் ஆண்டு 'தமிழமுதன்' என்னும் புனை பெயரில் என்னால் எழுதப்பட்டது. (பக்கம் 06) 

மலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும் 
https://newsigaram.blogspot.com/2019/04/teachers-are-responsible-for-upcountry-education-status-down.html 
#மலையகம் #கல்வி #ஆசிரியர்கள் #மாணவர்கள் #பாடசாலை #சூரியகாந்தி #கட்டுரை #தமிழ் #தமிழமுதன் #சிகரம்பாரதி #வலைத்தளம் 

டிஷ் டிவி செய்மதி தொலைக்காட்சி சேவையின் இலவச தமிழ் அலைவரிசைகள் 04-16-2019


டிஷ் டிவி செய்மதி தொலைக்காட்சி சேவையின் இலவச தமிழ் அலைவரிசைகள் 04-16-2019 (அன்றைய தின நிலவரப்படி) 

Dish tv Satellite d2h service Free Tamil Channel List as at 04-16-2019 

இலவச / கட்டணமில்லா / விலையில்லா தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் 


Image Credit: Google


அலைவரிசை இலக்கம் / அலைவரிசை 

522 - 7S Music 

524 - புதுயுகம் 

545 - கலைஞர் 

549 - தந்தி 

550 - Polimer 

551 - சிரிப்பொலி 

552 - வசந்த் 

555 - முரசு 

556 - மாலை முரசு செய்திகள் 

557 - Captain 

560 - வேந்தர் 

563 - DD Tamil (பொதிகை) 

565 - தமிழன் 

572 - இசையருவி 

577 - Cauvery News 

578 - நம்பிக்கை 

582 - புதிய தலைமுறை 

583 - Polimer News 

585 - கலைஞர் செய்திகள் 

586 - மக்கள் 

587 - Sathiyam 

590 - வெளிச்சம் 

593 - Sahana 

மொத்தமாக, கட்டண அலைவரிசைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் அலைவரிசைகள் இருந்தாலும், இதன் மூலம் 23 இலவச தமிழ் அலைவரிசைகளை நீங்கள் பார்த்து மகிழலாம். இதற்கு மாதாந்த கட்டணம் 130 இந்திய ரூபா (GST உட்பட 154 ரூபா) மட்டுமே! 

கட்டண அலைவரிசைகளைப் புறக்கணித்தால் அவர்களும் தங்கள் அலைவரிசைகளின் கட்டணங்களை குறைப்பார்கள். அல்லது இலவசமாக தர முன்வந்தாலும் வரலாம். கட்டண அலைவரிசைகளுக்கும் விளம்பர வருமானம் தாராளமாக இருக்கிறது. அதற்கு நாம் வேறு கட்டணம் செலுத்த வேண்டுமா? சற்று சிந்தியுங்கள்... 

டிஷ் டிவி செய்மதி தொலைக்காட்சி சேவையின் இலவச தமிழ் அலைவரிசைகள் 04-16-2019 
https://newsigaram.blogspot.com/2019/04/dish-tv-fta-tamil-channel-list-as-at-04-16-2019.html 
#dishtv #d2h #dth #trai #satellitetv #videocond2h #tatasky #airteltv #airteldigiteltv #reliancetv #bigtv #paytv #FTA #tamilchannels #channellist #channelguide 

Tuesday, 16 April 2019

வலைப்பதிவு வழிகாட்டி - 03

பிளாக்கர் (Blogger) துணையுடன் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

Image Credit : Google 


பிளாக்கர் வலைப்பதிவு ஒன்றை உருவாக்க ஜிமெயில் (GMail) மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருப்பது அவசியம். ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கு இதுவரை உங்களிடம் இல்லையென்றால் இப்போதே அதனை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

அடுத்து https://www.blogger.com என்னும் முகவரிக்கு சென்று உங்களுக்கான வலைப்பதிவை உருவாக்க ஆரம்பியுங்கள். உங்களுக்கான பயனர் பெயரை உருவாக்கிக் கொள்ளுங்கள். கூகிள் பிளஸ் (Google Plus) சமூக வலைத்தள கணக்கை உருவாக்கவோ அதனை பிளாக்கருடன் இணைக்கவோ இனி முடியாது என்பதைக் கவனிக்கவும். 

வலைப்பதிவை உருவாக்குதல் 

இப்போது நாம் படம் - 06இல் காட்டப்பட்டுள்ள திரையில் இருக்கிறோம். 

படம் - 06 
இப்போது 'CREATE NEW BLOG' என்னும் பொத்தானை சொடுக்குங்கள். 

அடுத்து உங்களுக்கு கீழ் காட்டப்பட்டுள்ள திரை காட்சியளிக்கும். 

படம் - 07 
இது மிக முக்கியமான இடம். அவசரத்தில் தவறிழைத்துவிடாதீர்கள்! 

இங்கு நீங்கள் மூன்று மிக முக்கியமான படிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். 

படிமுறை 01: வலைப்பதிவுக்கான தலைப்பை (Title) உருவாக்க வேண்டும். 

உங்கள் வலைப்பதிவு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறதோ அதனை மையமாக வைத்து உங்கள் வலைப்பதிவுக்கான தலைப்பை நீங்கள் உருவாக்க வேண்டும். எந்த மொழியிலும் வலைப்பதிவு தலைப்பை உருவாக்கலாம். 

வலைப்பதிவின் தலைப்பை எப்போதும் மாற்றிக் கொள்ள முடியும். என்றாலும் உங்கள் வலைப்பதிவை அடையாளப் படுத்தப் போவது இது என்பதால் தீர்க்கமாக சிந்தித்து வலைப்பதிவு தலைப்பை அமைப்பது நல்லது. 

படம் - 08


படிமுறை 02: உங்கள் வலைப்பதிவுக்கான முகவரியை உருவாக்க வேண்டும். 

வலைப்பதிவின் தலைப்போடு தொடர்புடையதாகவும் சுருக்கமாகவும் அடிக்கடி உங்கள் வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் வலைப்பதிவு முகவரியை உருவாக்குங்கள். 

வலைப்பதிவு முகவரியையும் நீங்கள் பின்னர் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், வலைப்பதிவின் தலைப்பை மாற்றுவது என்பது வீட்டுக்கு வெள்ளையடிப்பது போன்றது. வலைப்பதிவின் முகவரியை மாற்றுவது என்பது வீட்டையே மாற்றுவது போன்றது. பழைய முகவரிக்கான உரிமையை நீங்கள் இழந்து விடுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

வலைப்பதிவின் தலைப்பு மற்றும் முகவரி ஆகியன தேடல் இயந்திரங்களில் செல்வாக்கு செலுத்தும் என்பதால் அடிக்கடி மாற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. 

படம் - 09 
நீங்கள் வழங்கும் தலைப்பு கிடைக்காவிட்டால் எச்சரிக்கை அறிவிப்பு காண்பிக்கப்படும். ஆகவே பொருத்தமான புதிய வலைப்பதிவு முகவரியை உருவாக்குங்கள். 

படம் - 10 
உங்கள் வலைப்பதிவு முகவரி ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் சரி அடையாளம் காண்பிக்கப்படும். எழுத்துப் பிழைகள் இன்றி உங்கள் வலைப்பதிவு முகவரியை உள்ளிட்டு இருக்கிறீர்களா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். பிழை இருந்தால் சரியாக உள்ளிட்டு மீண்டும் முயற்சியுங்கள். 

படிமுறை 03: உங்கள் வலைப்பதிவுக்கான Theme ஐ தெரிவு செய்ய வேண்டும். 

'Simple' என்னும் Theme ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள். இது உங்கள் வலைப்பதிவு எவ்வாறு வாசகர்களுக்கு காட்சியளிக்கும் என்பதை தீர்மானிக்கும். 

படம் - 11


இதனை நீங்கள் பின்னர் உங்கள் தேவைக்கேற்ப மாற்றவும் உங்கள் விருப்பப்படி கட்டமைக்கவும் முடியும். 

இப்போது 'Create blog!' என்னும் பொத்தானை சொடுக்கினால் உங்களுக்கான வலைப்பதிவு தயார். 

இத்தோடு எல்லாம் முடிந்து விட்டதா? இல்லை. இன்னும் பல படிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் நாம் பார்க்கலாம். 

வலைப்பதிவு வழிகாட்டி - 03 
https://newsigaram.blogspot.com/2019/04/valaippathivu-valikaatti-03.html 
#Blogger #WordPress #Tamil #Guide #பிளாக்கர் #வேர்ட்பிரஸ் #வலைப்பதிவு #வழிகாட்டி #தமிழ் #இணையத்தளம் #வலைத்தளம் #வலைப்பூ 

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts