உலகம் | அல்ஜீரிய இடைக்கால ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
புதிய இடைக்கால ஜனாதிபதிக்கு எதிரான போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக அல்ஜீரிய பொலிஸார் தண்ணீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
அல்ஜீரியாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்து வந்த அப்தலசீஸ் போடேஃபிலிகா, பல வார தொடர் ஆர்ப்பாட்டங்களையடுத்து தான் பதவி விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.
![]() |
Photo Credit: Google / BBC / Reuters |
இதனையடுத்து, நாடாளுமன்ற மேல் சபையின் சபாநாயகரான அப்தெல்காதெர் பென்சலாஹ் புதிய இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும்வரை பதவி வகிக்கவுள்ள பென்சலாஹ், தான் மக்களின் நலன்களுக்காகப் பணியாற்றவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனினும் மக்களில் பலர் இன்னும் தீவிரமான மாற்றத்தை விரும்புகின்றனர்.
“மக்களுக்கான சொல்லை கூடிய விரைவில் மீண்டும் கொண்டு வருவதற்காக உண்மையுடனும் அர்ப்பணிப்புடனும் கடுமையாக உழைப்பதற்காக இக் காலப்பகுதியில் இந் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அரசியலமைப்பை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என பதவியேற்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.
பென்சலாஹ் இடைக்கால ஜனாதிபதியாக 90 நாட்களுக்குப் பதவி வகிக்கவுள்ளார்.
தற்போது போராட்டங்கள் அமைதியாக முன்னெடுக்கப்படுவதுடன் வேறு கடுமையான வழிமுறைகள் எதனையும் பொலிஸார் கையாளவில்லை.
உலகம் | அல்ஜீரிய இடைக்கால ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
https://newsigaram.blogspot.com/2019/04/protest-against-algeria-interim-president.html
#Algeria #police #water_cannon #protest #protesters #Abdelkader_Bensalah #interim_president #President #Abdelaziz_Bouteflika #Change #People #Parliament #News #World_News
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்