பாங்கொக் வணிக வளாகத்தில் தீ விபத்து - மூவர் பலி!
பாங்கொக்கிலுள்ள வணிக வளாகமொன்றில் இன்று (10) ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
56 மாடிகளைக் கொண்ட சென்டெரா கிராண்ட் ஹோட்டல் கட்டடத்தின் எட்டாவது மாடியில், உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து, சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
குறைந்தபட்சம் ஒருவர் கட்டடத்தில் இருந்து வீழ்ந்ததனால் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
![]() |
| Photo Credit: thethaiger.com |
குறித்த பாரிய வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மாலை நேரத்தில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக சம்பவ இடத்தை சென்றடைவதற்கு தீயணைப்புப் படையினர் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தினால் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் இருவர் வைத்தியசாலையில் பலியானதாக பாங்கொக் ஆளுநர் அஸ்ஸாவின் க்வான்முவாங் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. உலக அளவில் 11ஆவது மிகப்பெரிய வணிக வளாகம் இது எனவும் அறியப்படுகிறது.
பாங்கொக் வணிக வளாகத்தில் தீ விபத்து - மூவர் பலி!
https://newsigaram.blogspot.com/2019/04/Bangkok-Shopping-Complex-fire-accident.html
#Bangkok #Central_World_Hotel #Centara_Grand_Hotel #Fire #News #Shopping_Complex#WorldNews

Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்