இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு? - 02
இதோ இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நாளை (2019.04.16) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வரவிருக்கின்றன. வேட்பாளர்கள் அனைவரும் இறுதிக் கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
யாருக்கு உங்கள் வாக்கு? முடிவு செய்துவிட்டீர்களா? எந்த அடிப்படையில் நீங்கள் வாக்களிப்பதற்கான வேட்பாளரை தெரிவு செய்திருக்கிறீர்கள்?
ஆண்டாண்டாய் நம்மை மாறி மாறி ஆண்டு வரும் அதிமுக, திமுக கட்சிகளுக்கா உங்கள் வாக்கு? அல்லது உங்கள் உறவினர்களும் நண்பர்களும் போட்டியிடும் கட்சிகளுக்கா உங்கள் வாக்கு? இலவசங்களை அள்ளி வழங்குபவர்களுக்கா உங்கள் வாக்கு? அல்லது வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கா உங்கள் வாக்கு?
![]() |
Image Credit: Google |
வாக்களிக்க முன் சற்று சிந்தியுங்கள். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லக் கூடிய கட்சிக்கு உங்கள் வாக்கை அளியுங்கள். தமிழர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களை தேர்ந்தெடுங்கள். பல தசாப்தங்களாய் நம்மை ஆண்டு வரும் கட்சிகளுக்கு சற்று ஓய்வளிப்போம்.
அதாவது அதிமுக, திமுக கட்சிகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஓய்வெடுக்கட்டும். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கட்சிகளைப் புறக்கணிப்போம். இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்தால் அதன் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் நம் பட்டியலில் இருந்து வெளியேறிவிடும்.
ஊழல் கட்சி அமமுக கட்சியும் வேண்டாம். ஒரு வேளை ஊழல் இராணி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்தால் அமமுக வின் தலைவியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எஞ்சியிருப்பது மக்கள் நீதி மய்யமும் நாம் தமிழர் கட்சியும் தான். அல்லது மே 17 இயக்கம் போன்றவர்களை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த தெரிவுகளும் பிடிக்கவில்லையென்றால் புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள். இதுவரை சட்டமன்ற நாற்காலிகளையும் நாடாளுமன்ற நாற்காலிகளையும் அலங்கரித்தவர்கள் சற்று ஓய்வெடுக்கட்டும். புதியவர்கள் களத்திற்கு வரட்டும். என்ன நா சொல்றது சரி தானே?
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு? - 02
https://newsigaram.blogspot.com/2019/04/election-india-vote-post2.html
#தேர்தல் #இந்தியா #நாடாளுமன்றம் #பாஜக #காங்கிரஸ் #அதிமுக #திமுக #ஜெயலலிதா #சட்டமன்றம் #வாக்கு #வாக்காளர் #உரிமை #அரசியல்
https://newsigaram.blogspot.com/2019/04/election-india-vote-post2.html
#தேர்தல் #இந்தியா #நாடாளுமன்றம் #பாஜக #காங்கிரஸ் #அதிமுக #திமுக #ஜெயலலிதா #சட்டமன்றம் #வாக்கு #வாக்காளர் #உரிமை #அரசியல்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்