பிரெக்ஸிட்டை 2020 வரை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லையை 2020 வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது.
கடந்த மாதம் 29ஆம் திகதியுடன் முடிவடைந்த பிரெக்ஸிட்டுக்கான கால எல்லையை இம்மாதம் 12ஆம் திகதிவரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்திருந்தது.
எனினும் பிரித்தானிய பிரதமர் தெரெசா மேயின் பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஆதரவளிக்கவில்லை. இதனால் மேலுமொரு குறுகிய கால நீட்டிப்பை தெரெசா மே எதிர்பார்த்திருந்தார்.
![]() |
Photo Credit: Google / BBC |
எனினும் குறுகிய கால நீட்டிப்பை பெற்றுக் கொள்வதற்கான தெரெசா மேயின் பேச்சுவார்த்தைகளின் மீதான நம்பிக்கையற்ற தன்மை காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பிரித்தானியாவுக்கு கால அவகாசம் வழங்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்ட் டஸ்க் எதிர்பார்த்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய 27 நாடுகளின் மத்தியிலும் பிரெக்ஸிட்டை நீண்டகாலத்துக்கு தாமதப்படுத்துவதற்கான ஆதரவு அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது.
இவ்வாண்டு டிசம்பர் அல்லது 2020 மார்ச் ஆகிய இரண்டு திகதிகளில் ஒன்றை பிரெக்ஸிட்டுக்காக பிரித்தானியாவுக்கு வழங்க உத்தேசித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமருடனான விசேட சந்திப்பில் நீண்டகால பிரெக்ஸிட்டை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெக்ஸிட்டை 2020 வரை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
https://newsigaram.blogspot.com/2019/04/eu-seeks-delay-brexit-until-2020.html
#Brexit #Britain #EU #Article50 #Paris #Berlin #Paris #Berlin #EUSummit #Donald_Tusk #Theresa_May #France #EUParliament #EUElections #NoDealBrexit #News #World_News
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்