வலைப்பதிவு வழிகாட்டி - 01
வலைப்பதிவொன்றை உருவாக்குவது எப்படி? வலைப்பதிவை உருவாக்க பிளாக்கரா அல்லது வேர்ட்பிரஸ்ஸா சிறந்தது? வலைப்பதிவு உருவாக்குவது சிறந்ததா அல்லது இணையத்தளம் உருவாக்குவது சிறந்ததா? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்ல வருகிறது நமது 'வலைப்பதிவு வழிகாட்டி' தொடர்.
தமிழ் வலைத்தள உலகில் முன்னணியில் இருப்பவை இரண்டு தளங்கள் மட்டுமே. ஒன்று பிளாக்கர் (Blogger), மற்றையது வேர்ட்பிரஸ் (WordPress).
எது சிறந்தது என்ற ஒப்பீட்டை மேற்கொள்வது சற்றுக் கடினம். இரண்டிலுமே நமக்கு சாதகமான அம்சங்களும் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் வேர்ட்பிரஸை விட பிளாக்கர் இலகுவானது என ஒப்பீட்டளவில் கூறலாம்.
![]() |
பட உதவி: கூகிள் Image Credit: Google |
அல்லது பிளாக்கர் ஆரம்ப நிலை வலைப்பதிவர்களுக்கானது எனவும் வேர்ட்பிரஸ் இடைநிலை வலைப்பதிவர்களுக்கானது எனவும் வரையறுக்கலாம்.
அத்துடன் இன்றைய நிலையில் (2019) கணினியில் பயன்படுத்த பிளாக்கர் இலகுவானதாகவும் திறன்பேசியில் பயன்படுத்த வேர்ட்பிரஸ் இலகுவானதாகவும் இருக்கிறது. பிளாக்கரின் ஆன்ட்ராய்டு செயலி 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இற்றைப் படுத்தப்படவில்லை. வேர்ட்பிரஸ் ஆன்ட்ராய்டு செயலி தொடர்ச்சியாக இற்றைப் படுத்தப்பட்டிருக்கிறது.
ஆரம்ப நிலை மற்றும் இடைநிலை வலைப்பதிவர்களைப் பற்றிப் பேசியிருந்தோம். உயர் நிலை வலைப்பதிவர்களுக்கும் பொருத்தமான சேவைகளை வழங்கும் தளமாக வேர்ட்பிரஸ் இருக்கிறது.
பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகிய இரண்டு வலைப்பதிவு தளங்களிலும் கணக்கை உருவாக்கி செயற்படுத்தும் அனைத்து படிமுறைகளையும் ஒவ்வொன்றாக இங்கு விளக்க எண்ணியுள்ளேன்.
பிளாக்கரை மடிக்கணினி, மேசைக்கணினி அல்லது டேப் (Tab) ஆகிய ஏதேனும் ஒன்றில் இலகுவாகப் பயன்படுத்தலாம். திறன்பேசியில் பயன்படுத்துவது சிரமமானது. வேர்ட்பிரஸ்ஸை எதிலுமே பயன்படுத்த முடியும்.
பிளாக்கரை பயன்படுத்த அடிப்படை கணினி அறிவு இருந்தால் போதுமானது. வேர்ட்பிரஸ்ஸை பயன்படுத்த கொஞ்சம் கூடுதலான கணினி அறிவு அவசியமாகிறது.
பிளாக்கர் மூலமாக 'ஆட்சென்ஸ் (Adsense)' விளம்பர சேவையை இணைத்து பணம் சம்பாதிக்கவும் முடியும்.
வலைப்பதிவு உருவாக்குவது தொடர்பாக ஏற்கனவே சில பதிவுகள் இணையத்தில் இருக்கின்றன. அவற்றில் சில இங்கே உங்களுக்காக.
இப்பதிவுகள் சில வேளைகளில் பழைய படிமுறைகளைக் கொண்டிருக்கலாம்.
வலைப்பதிவை ஆரம்பிப்பது முதல் அதில் பணம் சம்பாதிப்பது வரை அனைத்தையும் உங்களுக்காக இங்கு விரிவாகவும் முழுமையாகவும் விளக்கவுள்ளேன். இலகுவாக விளங்கிக்கொள்வதற்காக பட விளக்கங்களும் இணைக்கப்படும்.
A Tamil blog creator guide. How to create Blogger site in Tamil? How to create WordPress site in Tamil? How to create Personal Website? Blog creator guide in Tamil.
(வழிகாட்டி வருவான்...)
வலைப்பதிவு வழிகாட்டி - 01
https://newsigaram.blogspot.com/2019/04/valaippathivu-valikaatti-01.html
#Blogger #WordPress #Tamil #Guide #பிளாக்கர் #வேர்ட்பிரஸ் #வலைப்பதிவு #வழிகாட்டி #தமிழ் #இணையத்தளம் #வலைத்தளம் #வலைப்பூ
நல்ல விஷயம்.
ReplyDeleteபுதியவர்கள் பதிவுலகிற்கு வருவதற்கு வகை செய்யும்.
தொடர்கிறேன்.
அருமையான தொடர்
ReplyDeleteபாராட்டுகள்
Nice article. It's helpful to me. Thank You. Do you want to create article submission WordPress site. Click here.
ReplyDelete