தமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 02

வணக்கம் வலைத்தள வாசகர்களே! தமிழாக்கம் - விரிவாகப் பேசப்படவேண்டிய விடயம். அதற்கு முதலில் நீங்கள் நமது முதலாவது பதிவை படித்துவிட்டு வரவேண்டும். இணைப்பு இதோ: தமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 01 தமிழாக்கம் என்பது என்ன? பிறமொழிச் சொற்களை தமிழ்ப்படுத்துவது. அதாவது பிறமொழிச் சொற்களுக்கான சரியான தமிழ்ப் பதத்தைக் கண்டறிவதாகும். எதையெதை மொழிபெயர்க்கலாம்? பெயர்ச்சொற்கள் தவிர்ந்த அனைத்தையும் மொழிபெயர்க்கலாம். ஏன் பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது? பெயர்ச்சொற்கள் குறிப்பிட்ட ஒருவரை அல்லது குறித்த ஒரு பொருளை விளிப்பதற்கு பயன்படுவது. பெயர்ச்சொற்களை மொழிபெயர்த்தால் சொல்லின் மூலம் சிதைந்து விடும். ஆகவே பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. தொடர்ந்து ஒருவிடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது கடந்த வருடம் (2015) டிசம்பர் மாதத்தில் பேஸ்புக்கில் கவிஞர் மகுடேசுவரன் அவர்களுக்கும் எனக்குமிடையில் பெயர்ச்சொற்களை தமிழாக்கம் செய்வது சரியா தவறா என்பது குறித்து நடந்த உரையாடலை இங்கே தருகின்றேன். # கவிஞர் மகுடேசுவரன் : செய்கோள் தொலைக்காட்சிச் சேவைக்கு டாடா ந...