Posts

Showing posts from July, 2017

பாரா வின் ஒரே ஒரு அறிவுரை

Image
சிலருக்கு அப்பாவைப் பிடிக்கும். பலருக்கு அம்மாவைப் பிடிக்கும். ஒரு சிலருக்கு யாரையுமே பிடிப்பதில்லை. நமக்கு அப்பாக்கள் இருக்கும் வரை அவர்களைப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிவதே இல்லை. ஏனெனில் கண்டிப்புடனேயே கடைசி வரை இருந்துவிடுவது தான். சிறுவயதில் அப்பாவை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி அதிகம் புரியும். இது ஒரு சிறுகதை. அப்பாவை இழந்த ஒரு மகனின் கதை. இருபத்தைந்து வருடங்களாக தன் கூடவே இருந்த தந்தையின் இறுதிக் கிரியை நிகழ்வும் அந்த நிகழ்வின் தாக்கத்தினால் மகனின் எண்ண ஓட்டத்தில் வந்து போகும் சில சம்பவங்களும் தான் கதை. வலிமைமிக்க சொற்களினால் கதையை செதுக்கியுள்ளார் கதாசிரியர் பாரா. ஒவ்வொரு எழுத்துக்களும் நமது இதயத்தின் அடி ஆழத்தைத் தொட்டுவிட்டுத் திரும்புகின்றன.
பார்த்தசாரதி ராகவன் என்னும் பாரா தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் எனலாம். 'சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துக…

வணக்கம் சிகரம்!

Image
வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். 'சிகரம்' இணையத்தளம் ஜூலை முதலாம் திகதி முதல் தமிழ்ப்பணியாற்றிவருவது நாம் அறிந்ததே. தமிழ் கூறும் நல்லுலகின் பங்களிப்போடு வெற்றிகரமாக எமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். இதுவரை காலமும் என் வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைவரையும் 'சிகரம்' இணையத்தளத்தை வெற்றிபெறச் செய்ய பங்களிக்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

எமது மகுட வாசகம்:
தமிழ் கூறும் நல்லுலகு!

எமது தூரநோக்கு:
தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்!
அழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்!

உங்கள் திறமைகளை எங்கள் சிகரத்தோ…

என்ன மச்சான்? சொல்லு மச்சி!

Image
"பிக் பாஸ்" பாத்தியா?
யாருடா பிக் பாஸ்?
யாரு இல்ல, நிகழ்ச்சி...
ஓ! நம்ம விஜய் தொலைக்காட்சியா?
ம்ம்...


நல்லதொரு .குடும்பம்... பல கலைக் கலகம்....
எல்லா கெரகமும் சேர்ந்து கலகம் பண்ணிக்கிட்டிருக்கு
பேஸ்புக், யூடியூப் னு நக்கலும் நையாண்டியும் களை கட்டுது
ம்ம். நாம நிகழ்ச்சியை கலாய்ச்சிக்கிட்டிருக்கோம்னு நெனச்சிக்கிட்டிருக்கோம்.
பின்னே?
அதுதான் இல்ல. அவங்க நம்மள கலாய்க்க வச்சிக்கிட்டிருக்காங்க.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முழுப் பதிவையும் படிக்க நமது 'சிகரம்' இணையத்தளத்துக்கு வாருங்கள்!
https://sigaram.co/preview.php?n_id=93&code=ndalbOS6