Posts

Showing posts from October, 2014

மன்னிக்க வேண்டும்!

Image
மன்னிக்க வேண்டும்! எனது வலைத்தள நண்பர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர விரும்புகிறேன். ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு குறித்து facebook இல் நான் வெளியிட்ட இரு பதிவுகளைத் தொகுத்து " மாண்புமிகு முதலமைச்சர்! " என்ற தலைப்பில் "சிகரம்" வலைப்பதிவில் பதிவிட்டிருந்தேன். ஆனால் அதற்கு தீய எண்ணம் கொண்டவர்களால் தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் 51 பின்னூட்டங்கள் [ Comments ] வழங்கப்பட்டிருந்தன. சுமார் 26 மணித்தியாலங்களுக்குப் பின்னரே அதனை நான் பார்த்தேன். உடனடியாக அனைத்தையும் எனது பக்கத்தில் இருந் து நீக்கிவிட்டேன். எனது வலைத்தள நண்பர்கள் யாரேனும் இதனைக் கண்ணுற்றிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த நாசகார வேலைக்கு நான் பொறுப்பல்ல என்றாலும் மிகக் கேவலமான , தரமற்ற , தவறான வார்த்தைப் பிரயோகங்களுடனான பின்னூட்டங்கள் உங்கள் மனங்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதே என் எண்ணம். இத்தகைய நாசகார வேலையை செய்தவர்களுக்கு அதற்கான பலனை காலம் நிச்சயம் வழங்கும். சிகரம்பாரதி இதழியலாளர் / எழுத்தாளர் / ஆசிரியர் வலைப்பதிவுகள் : சிகரம், சிகரம் 3 , தூறல்கள். http://newsigara

மாண்புமிகு முதலமைச்சர்!

Image
# சிட்டிசன் படம் பார்த்திருக்கிறீர்களா? அதன் இறுதிக்காட்சி நினைவிருக்கிறதா? அதில் மக்களுக்கு துரோகம் இழைத்த அரசியல்வாதிகளுக்கு கதாநாயகன் வழமையான முறையில் அல்லாமல் வித்தியாசமான ஒரு தண்டனையைக் கோருவார். படம் பார்க்கும் பலருக்கும் அது மிகைப்படுத்தப்பட்ட காட்சியாகவே தோன்றியிருக்கும். ஆனால் இன்று அ.இ.அ.தி.மு.க வின் தானைத் தலைவியின் வழக்கையும் அதன் தீர்ப்பை ஒட்டி தமிழகத்தில் நடைபெறும் அக்கிரமங்களையும் பார்க்கும் போது அந்தக் காட்சி மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்பது புரியும். ஜெயலலிதாவை கைது செய்யாமல் இப்படி தண்டனை வழங்கியிருந்தால் என்ன? * இந்தியாவின் எந்தவொரு தேர்தல்களிலும் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ ஆயுட்காலத்தடை. * ஊழல் பணம் மற்றும் அதன் மூலம் பெற்ற வருமானம் அதன் மூலம் பயன் பெற்றோரின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். * இந்த ஊழலில் கட்சியினர் சம்பந்தப் பட்டிருந்தால் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஊழலுக்குத் துணை போனவர்களுக்கும் ஆயுட்கால அரசியல் தடை. * இந்த ஊழலுக்கு துணை போன அரசு அதிகாரிகள், ஊழல் வழக்கை திசை திருப்ப முயன்ற போலி சாட்சிகள், வழக்கை தாமதப்