Posts

Showing posts from 2019

பதினான்காம் ஆண்டில் கால் பதிக்கும்'சிகரம்' !

Image
பதின்மூன்று ஆண்டுகளைக் கடந்து பதினான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கிறது நமது 'சிகரம்' !.  பாடசாலை மாணவனாக இருந்தபோது ஆரம்பித்த பெருங்கனவு, தந்தையாக ஆன பின்பும் இன்னமும் தீராக் கனவாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  2006.06.01 அன்று பாடசாலையில் கையெழுத்துப் பத்திரிகையாக தனது பயணத்தை ஆரம்பித்தது 'சிகரம்'.  இன்று வலைத்தளமாகவும் இணையத்தளமாகவும் பரிணமித்திருக்கிறது.  உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் முதல்தர இணையத்தளமாகவும் அச்சு ஊடகமாகவும் 'சிகரம்' உருவாக வேண்டும் என்பதே என் அவா.  என் கனவை என்றேனும் நனவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையில் என் நெஞ்சில் சுமந்து திரிகிறேன்.  நனவாகிவிடு என் பெருங்கனவே!  என் சராசரி ஆயுளின் இரண்டில் ஒரு பகுதியை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கடக்கப் போகிறேன். ஆன போதிலும் இன்னும் கனவு கனவாகவே இருக்கிறது. கனவை நனவாக்க முடியாமலே போய்விடுமோ என்பதே என் பேரச்சமாக இருக்கிறது. எனினும் ஏதாவது ஒரு வழியில் கனவை நனவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வந்தவண்ணமே இருக்கிறேன்.  நனவாகிவிடு என் பெருங்கனவே

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் - மே 18!

Image
முள்ளிவாய்க்கால்!  ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாள். ஆயிரமாயிரம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நாள். தர்மத்தின் வாழ்வுதனை மீண்டும் சூது கவ்விய நாள்!  மே 18!  18.05.2009  தமிழர்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நாள். சர்வதேசத்தை முழுமையாக ஒவ்வொரு தமிழனுக்கும் புரிய வைத்த நாள்.  30 வருட கால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் இம்மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள்.  Image Credit: Vikatan.com தமது இன விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்ட நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக மட்டுமே தமிழர்களால் நினைவுகூர முடிந்திருக்கிறது.  பத்தாண்டுகள் கடந்து விட்டன. தமிழர்களுக்கான நீதியோ அல்லது உரிமைகளோ கிடைப்பதற்கான வழிவகைகளையோ அல்லது அதற்கான அறிகுறிகளையோ சற்றும் காணவில்லை.  உறவுகளை இழந்தவர்கள் உணர்வுகளை இழந்து நடைப்பிணமாய் வாழ்ந்து வருகிறார்கள். காணாமல் போன உறவுகள் இன்றாவது வந்துவிட மாட்டார்களா என்று சில உறவுகள் காத்திருக்கின்றனர்.  தமிழரின் உரிமைக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும். கடந்த காலங்களைப் போல எதிர்காலத்திலும் தமிழர்கள

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 02

Image
பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்  https://newsigaram.blogspot.com/2019/05/bigg-boss-tamil-3-kamal-hassan-condition-for-shooting.html   #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  பிக் பாஸ் 3-இல் நான் இல்லை - பிரபல நடிகர் விளக்கம் | கட்டுரை | News 18 தமிழ்  https://sigarambiggboss.blogspot.com/2019/05/bigg-boss-tamil-season-3-actor-ramesh-thilak-statement.html   #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  பிக் பாஸ் 3-இல் பங்கேற்கிறேனா? - அஜித் பட நடிகை அதிரடி விளக்கம் | கட்டுரை | News 18 தமிழ்  https://sigarambiggboss.blogspot.com/2019/05/am-i-participate-in-bb-tamil-3-laila.html   #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #Indi

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்

Image
பிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சி சீசன் 2 ஆகவும் ஒளிப்பரப்பானது. பிக் பாஸ் சீசன் 3 இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாக சில பிரபலங்களின் பெயரும் வெளியானது. ஆனால் அது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பட்டியலை பிக்பாஸ் குழு உறுதி செய்து விட்டதாகவும் அதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் டீம் எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கமலின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கமல் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் படப்பிடிப்பைத் தொடங்க ஒத்துக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் பாதகமான முடிவுகள் வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு மீண்டும் மக்கள் மனதில்

பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன் | கட்டுரை | சமயம் செய்திகள்

Image
தனியார் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் 3 சீசன் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த 2017ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதில், ஆரவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2ஆவது சீசன் அப்படியில்லை. ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.  இந்த நிலையில், 3ஆவது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், கமல் ஹாசன் அதற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டு பிஸியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதிலிருந்து இந்த சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கயிருப்பதாக தெளிவாகியுள்ளது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், முதல் 3 போட்டியாளர்கள் பற்றிய புதிய தகவலும் வெளியாகியுள்ளது.  அத

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 01

Image
பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | வருமா, வராதா? https://sigarambiggboss.blogspot.com/2019/03/BIGG-BOSS-TAMIL-SEASON-3-HAPPENING-OR-NOT.html #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் - 01  https://sigarambiggboss.blogspot.com/2019/03/BIGG-BOSS-TAMIL-SEASON-3-A-TRAVEL-01.html   #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் - 02  https://sigarambiggboss.blogspot.com/2019/04/BIGG-BOSS-TAMIL-SEASON-3-A-TRAVEL-02.html   #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  Image Credit: Google கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 3'  https://sigara

இன்றைய செய்திகள் 09-05-2019 | News Today 09-05-2019

Image
இலங்கைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜயம்; பாதுகாப்பு நிலவரம் குறித்து பங்களாதேஷ் அவதானம்  http://metronews.lk/article/46250   #ODI #Cricket #Bangladesh #SriLanka #LK #LKA #CWC19 #CWC2019 #ICC #BCB #SLC #EasterAttack #EasterSundayAttacks  இந்தியா செல்லும் இருவகை இலங்கை ஏ அணிகளின் தலைவராக ஆஷான் ப்ரியஞ்சன்  http://metronews.lk/article/46262   #ashan_priyanjan #Cricket #SriLanka #LK #LKA #India #BCCI #SLC #SriLankaA #IndiaA #Tournament  Image Credit : Google பார்சிலோனாவுக்கு பதிலடி கொடுத்த லிவர்பூல் சம்பியன்ஸ் லீக் இறுதியில் விளையாடத் தகுதி  http://metronews.lk/article/46265   #liverpoolvsbarcelona #liverpool #barcelona #Champions_League #Sports #Football  அனுமதிப் பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது http://metronews.lk/article/46259   #Arrest #License #Fishermen #Police #Illeagal #LK #LKA  4,000 ரூபா அபராதத்துடன் ரயன் வென்ரோயன் விடுதலை!  http://metronews.lk/article/46271   #Actor #RayanVanRoyan #RayanRoyan #MakandureMadush #Bail

நிகழ்வுகள் - 08-05-2019

Image
ஜனாதிபதியின் சாய்ந்தமருது வருகையை முன்னிட்டு, சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபாவினால் ஜனாதிபதிக்கு சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்ட போது...  இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்- லாய் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை நேற்றைய தினம் (07) சந்தித்த போது... (Image Credit: defence.lk)  2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான இலங்கை அணி இங்கிலாந்து நோக்கிப் பயணமானது. (Image Credit: ICC/ SLC)  நிகழ்வுகள் - 08-05-2019  https://newsigaram.blogspot.com/2019/05/news-by-pic-08-05-2019.html  #நிகழ்வுகள் #செய்தி #இலங்கை #விளையாட்டு #தொகுப்பு #ஜனாதிபதி #மைத்திரிபால #கிரிக்கெட் #LK #LKA #News #SIGARAM 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | தென்னாபிரிக்கா அணி விபரம்

Image
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  தென்னாபிரிக்கா அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  Image Credit: ICC  பெப் டு ப்லெஸிஸ் (தலைவர்)  ஹாஷிம் அம்லா  குயின்டன் டீ கொக் (விக்கெட் காப்பாளர்)  ஜே.பி. டுமினி  ஐடென் மார்க்ரெம்  டேவிட் மில்லர்  லுங்கி எங்கிடி  அன்ரிச் நோர்ட்ஜெ  அண்டில் பெஹ்லுக்வாயோ  டிவைன் பிரிட்டோரியஸ்  காகிஸோ றபாடா  டப்றைஸ் ஷம்சி  டேல் ஸ்டெய்ன்  இம்ரான் தாஹிர்  ரஸ்சி வான் டெர் டுசென்  கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | தென்னாபிரிக்கா அணி விபரம்  https://newsigaram.blogspot.com/2019/05/icc-cricket-world-cup-2019-team-squad-southafrica.html  #CWC19 #SouthAfrica #LKA #LK #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | பாகிஸ்தான் அணி விபரம்

Image
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  பாகிஸ்தான்  அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  Image Credit: ICC  சப்ராஸ் அஹமட் (தலைவர் / விக்கெட் காப்பாளர்)  அபிட் அலி  பாபர் அஸாம்  பஹீம் அஷ்ரப்  பாகர் ஸமன்  ஹரிஸ் சொஹைல்  ஹசன் அலி  இமாட் வஸீம்  இமாம் உல் ஹக்  ஜுனைட் கான்  மொஹம்மட் ஹபீஸ்  மொஹம்மட் ஹஸ்னின்  ஷதாப் கான்  ஷஹீன் ஷா அப்ரிடி  சொஹைப் மலிக்  கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | பாகிஸ்தான் அணி விபரம்  https://newsigaram.blogspot.com/2019/05/icc-cricket-world-cup-2019-team-squad-pakistan.html  #CWC19 #Pakistan #LKA #LK #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

sigaram.co இணைய முகவரி குறித்த விசேட அறிவித்தல்!

Image
வணக்கம் வலைத்தள நண்பர்களே!  'சிகரம் பாரதி' ஆகிய நான் எனது பெயரில் பதிவு செய்து நடத்திவந்த sigaram.co அல்லது www.sigaram.co அல்லது https://www.sigaram.co என்னும் இணைய முகவரி இனி எனக்கோ அல்லது எனது 'சிகரம்' இணையத் தளத்துக்கோ எதுவித உரிமையோ அல்லது தொடர்போ இல்லை என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்.  2002ஆம் ஆண்டு அல்லது 2003ஆம் ஆண்டு முதல் நான் எழுத்துத் துறையில் இருந்து வருகிறேன். 2010ஆம் ஆண்டளவில் வலைத்தள உலகில் கால் பதித்தேன். 'சிகரம்' வலைத்தளத்தை தொடர்ந்து 'சிகரம்' இணையத்தளத்தை 2017ஆம் ஆண்டில் ஆரம்பித்தேன்.  இதற்காக sigaram.co என்னும் இணைய முகவரியை (Domain) கொள்வனவு செய்திருந்தேன். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இணைய முகவரியை வருடாந்த புதுப்பித்தலுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நான் அதனைச் செய்யத் தவறியதால் sigaram.co இணைய முகவரியை தற்போது நான் இழந்துள்ளேன்.  மே மாதம் 2019ஆம் ஆண்டு முதல் sigaram.co இணைய முகவரி வெளியாருக்கு சொந்தமாகியுள்ளது. புதிய முகவரியுடன் மீண்டும் நாம் எழுந்து வருவோம்.  இணையத்தளம் புதுப் பொலிவுட

இலங்கை | நீர்கொழும்பில் பதற்றம் - இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

Image
இலங்கை, மேல் மாகாணம், நீர்கொழும்பில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் பாரியளவில் வெடித்ததால் நீர்கொழும்பில் உள்ள 11 பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  இதே வேளை, குறித்த முறுகல் நிலை தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப் படலாம் என்ற அச்சத்தில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.  இதன் படி, பேஸ்புக், வாட்ஸப், மெசேஞ்சர் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. எனினும் IMO என்னும் சமூக வலைத்தளம் மட்டும் தடையின்றி இயங்கி வருகிறது.  Image Credit: Virakesari.lk நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதி நிலவுகின்ற போதிலும் ஆங்காங்கே நடைபெறும் சோதனை நடவடிக்கைகளும் கைப்பற்றப்படும் பொருட்கள் தொடர்பிலான தகவல்களும் தொடர்ந்தும் அச்ச நிலைமையை நீடிக்கச் செய்துள்ளன.  இலங்கை | நீர்கொழும்பில் பதற்றம் - இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்   https://newsigaram.blogspot.com/2019/05/social-media-ban-again-in-sri-lanka.html  #SocialMedia #Ban #LK #LKA #lanka #srilanka #ISIS #Terrorism #Colombo #Negombo #Western

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

Image
இதன் வரலாறு 1920-களில் தொடங்குகிறது. இன்றைக்கு, பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய விஷயங்களைப் பேசுகிற, குரல் கொடுக்கிற எழுத்தாக உலகெங்கும் மாறியுள்ளது. பத்திகள் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பத்திகள் உண்டு என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. மேலைநாடுகளில் பத்தி எழுதுபவர்களை Columnist என்பார்கள்.  அவர்களை,  Advice columnist Critic Editorial opinion columnist Gossip columnist Humor columnist Food columnist -  என்று பிரிப்பது வழக்கம்.  Advice columnist – என்பது கேள்வி பதில்களாக சமகால வாழ்வில் உண்டாகும் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது பிரசித்தமான ஒரு எழுத்துமுறை. உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினையை நீங்கள் கடிதமாக எழுதினால் தீர்வு சொல்வார்கள். Critic – என்பவர்கள் விமர்சகர்கள், கலை, இலக்கியம், கட்டுமானம், உணவு போன்ற துறைகளில் விமர்சிப்பவர்கள். Editorial opinion columnist – சமகால அரசியல் சமூக நிகழ்வுகள

இலங்கை | பேரூந்து (பஸ்) ஆசன முன்பதிவு செய்வது எப்படி?

Image
இலங்கையில் தனியார் மற்றும் அரச பேரூந்துகள் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றன.  கடந்த வருடம் வரை பேருந்துகளில் ஆசன முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் கொழும்பு, புறக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் அல்லது அரச பிரதான பேரூந்து நிலையங்களுக்கே நேரடியாகச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.  ஆனால் கடந்த வருட இறுதியில் அரச மற்றும் தனியார் பேருந்துகளை இணையத்தளம் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்களும் பேரூந்து முன்பதிவு இணையத்தள சேவைகளை மேற்கொண்டு வருகின்றன.  Image Credit : Google / srilankantours.org  பேரூந்து முன்பதிவு செய்வது எப்படி?  பேரூந்து முன்பதிவு இணையத்தளத்தை திறவுங்கள்  நீங்கள் புறப்படும் இடத்தை உள்ளிடுங்கள்  நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை உள்ளிடுங்கள்  பயணத் திகதியை உள்ளிடுங்கள் (நள்ளிரவு 12 மணி என்பது அடுத்த நாளைக் குறிக்கும் என்பதைக் கவனத்திற் கொள்க)  நீங்கள் முன்பதிவு செய்யக் கூடிய பேருந்துகளின் பட்டியல் காண்பிக்கப்படும்  உங்கள் விருப்ப ஆசனத்தை கவனமாக அவதானித்து தெரிவு செய்யுங்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இலங்கை அணி விபரம்

Image
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  இலங்கை அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  Image Credit : ICC  Dimuth Karunaratne – Captain - திமுத் கருணாரத்ன - தலைவர்  Avishka Fernando - அவிஷ்க பெர்னாண்டோ  Lahiru Thirimanne - லஹிரு திரிமான்னே  Kusal Janith Perera - குசல் ஜனித் பெரேரா  Kusal Mendis - குசல் மெண்டிஸ் (விக்கெட் காப்பாளர்)  Angelo Mathews - ஏஞ்சலோ மத்தியூஸ்  Dhananjaya De Silva - தனஞ்சய டீ சில்வா  Jeffrey Vandersay - ஜெப்ரி வெண்டெர்சே  Thisara Perera - திசர பெரேரா  Lasith Malinga - லசித் மலிங்க  Isuru Udana - இசுறு உதான  Suranga Lakmal - சுரங்க லக்மால்  Nuwan Pradeep - நுவான் பிரதீப்  Jeevan Mendis - ஜீவன் மெண்டிஸ்  Milinda Siriwardana - மிலிந்த சிறிவர்தன  Standby Players  Oshada Fernando - ஒஷாத பெர்னாண்டோ  Angelo Perera - ஏஞ்சலோ பெரேரா  Kasun Rajitha - கசுன் ராஜித  Wanindu Hasaranga - வனிது ஹசரங்க   கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இலங்கை அணி விபரம்  h

இலங்கை சிந்தும் ரத்தம் உண்மையில் யாருக்கானது ? வரலாறு தரும் புதுக்கோணம் ! | கட்டுரை | கலைஞர் செய்திகள் | ராஜசங்கீதன்

Image
இனப்படுகொலையால் சிவந்த மண் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவந்திருக்கிறது. இயேசு மீது சிதறிய ரத்தம் இலங்கையோடு நிற்காமல் இந்தியப்பெருங்கடலுக்கும் பரவும் வாய்ப்பை அலசுகிறது இக்கட்டுரை. ராஜசங்கீதன் மனித வரலாறை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, போர்க்காலம். இரண்டு, போருக்கு தயாராகும் காலம். சமாதானம் என ஒன்றை மனிதன் அறிந்ததே இல்லை (ஓஷோ).  உலகப்போர்கள் திடுமென ஒரு நாளில் தொடங்கி விடுவதில்லை. முதல் உலகப்போர் ஆஸ்த்ரிய ஹங்கேரி நாட்டின் இளவரசர் கொல்லப்பட்டதில் தொடங்கியதாக நாம் படித்திருப்போம். ஆனால், அக்கொலைக்கு முன் இருந்த உலகச்சூழலை அலசி பார்த்தால் முக்கியமான உண்மை தெரியும். அத்தகைய சூழல் எப்போதுமே உலகில் இருந்து வருகிறது என்கிற உண்மை!  உலகப்போர்களுக்கான காரணங்கள் என்ன? முதல் உலகப்போருக்கு முன், உலக வணிகத்தில் முதன்மையாக இருந்த நாடு பிரிட்டன். உலகின் பெரும்பான்மையான நாடுகளை அடிமையாக்கி காலனிகளாக வைத்திருந்தது. அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, வணிகத்தையும் பெருக்கி படாடோபமாக கல்லா கட்டிக் கொண்டிருந்தது. ‘சூரியன் மறையாத பேரரசு’ என சொல்லி மார்தட்ட