பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன் | கட்டுரை | சமயம் செய்திகள்
தனியார் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் 3 சீசன் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த 2017ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதில், ஆரவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2ஆவது சீசன் அப்படியில்லை. ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 3ஆவது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், கமல் ஹாசன் அதற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டு பிஸியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதிலிருந்து இந்த சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கயிருப்பதாக தெளிவாகியுள்ளது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், முதல் 3 போட்டியாளர்கள் பற்றிய புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை லைலா, சாந்தினி தமிழரசன், சுதா சந்திரன் ஆகியோர் பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி : சமயம் செய்திகள்
கட்டுரை மூலம்: பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன்
பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன் | கட்டுரை | சமயம் செய்திகள்
https://newsigaram.blogspot.com/2019/05/kamal-hassan-busy-with-bigg-boss-tamil-3-shooting.html #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்