இலங்கை | நீர்கொழும்பில் பதற்றம் - இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
இலங்கை, மேல் மாகாணம், நீர்கொழும்பில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் பாரியளவில் வெடித்ததால் நீர்கொழும்பில் உள்ள 11 பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதே வேளை, குறித்த முறுகல் நிலை தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப் படலாம் என்ற அச்சத்தில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.
இதன் படி, பேஸ்புக், வாட்ஸப், மெசேஞ்சர் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. எனினும் IMO என்னும் சமூக வலைத்தளம் மட்டும் தடையின்றி இயங்கி வருகிறது.
![]() |
Image Credit: Virakesari.lk |
நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதி நிலவுகின்ற போதிலும் ஆங்காங்கே நடைபெறும் சோதனை நடவடிக்கைகளும் கைப்பற்றப்படும் பொருட்கள் தொடர்பிலான தகவல்களும் தொடர்ந்தும் அச்ச நிலைமையை நீடிக்கச் செய்துள்ளன.
இலங்கை | நீர்கொழும்பில் பதற்றம் - இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
https://newsigaram.blogspot.com/2019/05/social-media-ban-again-in-sri-lanka.html
#SocialMedia #Ban #LK #LKA #lanka #srilanka #ISIS #Terrorism #Colombo #Negombo #WesternProvince #Fb #WhatsApp #Viber #VPN #Google #PlayStore
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்