சிகரம் வலைப்பூங்கா - 04

உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான நினைவுகள் சுற்றிப்பிடித்து விழுங்க ஆரம்பிக்கும். இதனைச் சமநிலை குலையாமல் எழுதும் போதே சுயபுனைவுக்கான வடிவம் கூடிவருகிறது. இவற்றை சுயசரிதையாக வெறுமே கருத முடிவதில்லை. ஊகங்களாகக் கடந்து செல்ல வேண்டியவற்றைக் கூட சம்பவங்களாக எழுதி ஆசிரியரால் இட்டு நிரப்படப்படுகிறது. புனைவுக்கான முடிச்சுகளுடன் கச்சிதமாக முடிக்கப்படுகின்றன.


திருக்குறள் கதைகள் - அறத்துப்பால் - 255. சரஸ்வதியின் சந்தேகம்

"மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே..."

"என்ன பாட்டு இது? சானலை மாத்துங்க" என்றாள் சரஸ்வதி.

கோமதிநாயகம் டிவியை செய்தி சானலுக்கு மாற்றினார்.

"என்ன பாட்டு இது? மனுஷனை மனுஷன் சாப்பிடறதாவது! கேக்கவே ஒரு மாதிரி இருக்கு."

"இந்தப் பாட்டுக்கு அர்த்தம் அது இல்ல" என்றபடியே தொலைக்காட்சியின் ஒலியை அதிகரித்தார் கோமதிநாயகம்.




உறுத்தல் - விகடன் சிறுகதை 

பாத்ரூமிலிருந்து பாவாடையை மார்பு வரை மேலேற்றிக் கட்டிக் கொண்டாள் தமயந்தி. தலையின் ஈரம் போக துண்டைக் எடுத்து கட்டியபடி, கண்ணாடியில் முகம் பார்த்தாள். ’கருப்பென்னடி கருப்பு. பெருமாள் கூட கருப்புத்தான். ஒலகமே அவன் காலடியில கிடக்கலை. அதும் போல என் தமயந்தி காலடில கிடக்க ஒருத்தன் வராமயா போயிருவான்?” செத்துப் போன லெட்சுமி பாட்டியின் குரல் ஏனோ நியாபகத்துக்கு வந்தது. வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க “சுபா.. யாருன்னு பாரு?” என்று உள்ளிருந்து ஹாலில் டேப்பில் செஸ் ஆடிக்கொண்டிருக்கும் தன் மகளுக்கு குரல் கொடுத்தாள். பரபரவென நெஞ்சிலிருந்த பாவாடையை இடுப்பில் கட்டி, உள்பாடி, ஜாக்கெட்டை போட்டு, சட்டென புடவைக் கட்டி, மீண்டும் ஒரு முறை கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு திரும்பிய போது சுபா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து “யாரோ சுந்தர்னு ஒரு அங்கிள் வந்திருக்காரு” என்றாள். 


பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை? - ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்

எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அந்தத் தோழி சில நேரங்களில் கறுப்பிலும், பல சந்தர்ப்பங்களில் நிறங்களிலுமான ‘அபாயா’ என்னும் நீண்ட ஆடையினை அணிந்து வருவார். முஸ்லிம் பெண்ணான அவளைக் கடந்த உயிர்த்த ஞாயிறிலிருந்து வீட்டுப்பக்கம் காணவில்லை. என்னவென்று விசாரிக்க மாயா சொன்ன பதில், “அய்யோ! சரியான பாவம். போன ஞாயிற்றுக் கிழமையில இருந்து அவ வீட்ட விட்டு வெளியிலயே வரல்ல. நான்தான் போய் பார்த்துட்டு வந்தன். நல்லா பயந்து போய் இருக்கிறா. அவவுக்கு அபாயா இல்லாம வெளிய வர பழக்கமில்லதானே. உடுத்தாத மாதிரி இருக்கும் என்டு வராம இருக்கா. உடுத்துட்டு வந்தா இப்ப பிரச்சினையா இருக்குமோ என்டு பயந்து போய் வீட்டு உள்ளுக்கேயே இருக்கா. சரியான கவலையா இருந்திச்சு.” நானும் சல்வார், கமீஸ் உடுத்து தலையை மூடும் ஒரு முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில், அந்த அச்ச உணர்வை என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.


’டெக் டிக்ஷனரி’ -20 ல்; லேசி லோடிங் – சோம்பலிறக்கம்

இணையத்தில் டவுண்லோடிங் (தரவிறக்கம்)  தெரியும், அப்லோடிங் (பதிவேற்றம்) தெரியும். லேசி லோடிங் தெரியுமா?

லேசி லோடிங் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும் கூட, நீங்கள் தினந்தோறும் அதை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியுமா? 


சிகரம் வலைப்பூங்கா - 04 
https://newsigaram.blogspot.com/2019/05/sigaram-valaip-poongaa-04.html 
#வலைப்பதிவு #வலைப்பூ #வலைப்பூங்கா #தமிழ்மணம் #திரட்டி #பதிவு #படித்ததில்_பிடித்தது #தமிழ் #எழுத்து #பகிர்வு 

Comments

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!