Posts

Showing posts from January, 2024

வாசிப்பும் பகிர்வும் - 03 | வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்| வாசிப்பு அனுபவக் குறிப்புகள்

Image
பா. ராகவன் எழுதிய உக்ரையீனா புத்தகம் பற்றிய எனது எண்ணங்களை கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.  இன்று நாம் பார்க்கவிருக்கும் புத்தகம் - வாசிப்பது எப்படி?  நூலாசிரியர் - செல்வேந்திரன் தலைப்பைப் பார்த்ததும் இதற்கெல்லாம் ஒரு புத்தகம் தேவையா என்ற எண்ணம் நமக்குள் எழலாம். ஆனால் அதற்கான தேவை இருக்கிறது என்பதை இந்த புத்தகத்தை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.  82 பக்க கட்டுரைகளை மட்டும் கொண்ட ஒரு புத்தகம் இது. ஒருசில மணிநேரத்திற்குள் இதனை வாசித்துவிட முடியும்.  ஆனால் ஆசிரியர் சொல்ல வந்த கருத்தை நாம் உணர்ந்து வாசிப்பது அவசியம்.  நாம் வாசிப்பு என்ற உடனேயே புத்தக வாசிப்பை மாத்திரமே கருத்திற்கொள்வோம். ஆனால் நாளிதழ் வாசிப்பதும் வாசிப்பின் ஒரு அங்கம் என்பதையும், புத்தகம் வாசிப்பவர்கள் நாளிதழ்களை வாசிக்கப் பழக வேண்டும் என்பதையும் செல்வேந்திரன் வலியுறுத்துகிறார்.  உயிருள்ள பாடப்புத்தகம் என நாளிதழ்களை அழைக்கும் செல்வேந்திரன், அந்த நாளிதழ்களை எப்படி வாசிப்பது என நமக்கு கற்றுத்தருகிறார்.  ஆசிரியர் நமக்கு ஒரு கோரிக்கையை முன்னுரையில் முன்வைக்கிறார். இந்த புத்தகத்தை முழுதாகப் படிக்கும் பொறுமை இல்லாதவர்கள் வாசிப்ப

வாசிப்பும் பகிர்வும் -02 - உக்ரையீனா - பா ராகவன்

Image
வாசிப்பு என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று. ஏன் எனக்குப் பிடித்தமானதும் கூட. சிறுவயதில் இருந்தே நூல்களும் நூலகங்களும் எனக்குப் பிடித்தவையாக இருந்திருக்கின்றன. வாசிப்பின் தொடர்ச்சியாக பாடசாலைக் காலத்தில் கையெழுத்து சஞ்சிகையும் தொடர்ந்து வந்த காலத்தில் வலைப்பதிவுகளும் பின்னர் ஒரு சில இணையத்தளங்களும் என என் முயற்சிகள் விரிவடைந்து சென்றிருக்கின்றன. ஆனாலும் புத்தகம் வெளியிட நினைத்தாலும் இதுவரை அந்த எண்ணம் ஈடேறவில்லை. இருந்தாலும் இடைநடுவில் சிலகாலம் வாசிப்பை விட்டு நான் பிரிந்திருக்க நேரிட்டது. அதற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக வாசிக்கிறேன். ஆனால் உரிய காலத்திற்குக் காத்திருந்ததன் விளைவாக இந்த ஆண்டு வாசிப்பு மாரத்தான் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பங்குபற்றுகிறேன்.  எனது முதல் வாசிப்பு பதிவாக எழுத்தாளர் பா. ராகவன் Pa Raghavan எழுதிய உக்ரையீனாவை பதிவு செய்ய விரும்புகிறேன். அளவில் சிறியதாக இருந்தாலும் விடயத்தில் பெரியதாக இருக்கிறது இந்த நூல். உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே தற்போது மூண்டுள்ள இந்த போர், ஏன், எதற்கு என்பதை விரிவாக ஆராய்கிறது உக்ரையீ