Posts

Showing posts with the label வெள்ளித்திரை

சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே -எனக்குப் பிடித்த பாடல்

Image
வணக்கம் வலைத்தள நண்பர்களே...!  நலம், நலமறிய ஆவல்.  நீண்ட நாட்களுக்கு பின் வலைத்தளத்தில் சந்திக்கிறோம்.  இன்று நான் என்னைக் கவர்ந்த பாடலொன்று பற்றி இங்கு பகிர்ந்துள்ளேன்.  நயன்தாராவின் நடிப்பில் வெளியான நெற்றிக் கண் திரைப்படத்தில் இடம்பெற்ற இதுவும் கடந்து போகும் என்ற பாடலே அது.  பேசுவதற்கு இப்போது அதிக நேரமில்லை.  ஆனால் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.  கேட்ட மாத்திரத்தில் பாடலை பிடித்து விட்டது.  எளிமையான இசையும், அழகான வரிகளும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.  நீங்களும் கேளுங்க..  விரைவில் சந்திப்போம்.... பாடலும், வரிகளும் இதோ..! இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் சுடரி இருளில் ஏங்காதே வேலி தான் கதவை மூடாதே ஆறு காலங்களும் மாறி மாறி வரும் இயற்கையின் விதி இதுவே அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே இதுவும...

ராஜா ராஜா தான்!

Image
இளையராஜா!  எப்போதுமே இசையின் ராஜா தான்.  அண்மையில் அவரது பிறந்த நாளின் போது வானொலியைக் கேட்க நேர்ந்தது.  அப்போது சில பாடல்களை கேட்டேன்.  என்ன சொல்ல?  ஆஹா.... சிறப்பு...  ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா... இதயம் ஒரு கோவில்  என்ன சத்தம் இந்த நேரம்  குருவாயூரப்பா  பாடறியேன் படிப்பறியேன்  சொர்க்கமே என்றாலும்  தென்மதுரை வைகை நதி  கரகாட்டக்காரன்  இதெல்லாம் எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்கள்.  இது மட்டும் தான் என்று சொல்ல முடியாது. கேட்டது இவ்வளவு தான்.  வருடம் முழுவதும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கச் சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  அப்படி ஒரு மாயவித்தை அந்த பாடல்களுக்குள் இருக்கிறது.  அப்போதே எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.  மீண்டும் சந்திப்போம்!

விஜய் 62 | சர்க்கார் | ஒளிப்படத் தொகுப்பு | VIJAY 62 | SARKAR | STILLS COLLECTION

Image
தளபதி விஜய்யின் 62வது திரைப்படமான 'சர்க்கார்' படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் இடம்பெற்று வருகிறது. 2018 தீபாவளிக்கு 'சர்க்கார்' திரைக்கு வருகிறது. தளபதி ரசிகர்களுக்காக 'சர்க்கார்' ஒளிப்படத் தொகுப்பு இதோ:  #சர்க்கார் #விஜய் #இளையதளபதி #இசைப்புயல் #விஜய்62 #தீபாவளி #கீர்த்திசுரேஷ் #Thalapathy #SARKAR #VIJAY62 #ARRAHMAN #Deepavali #KeerthiSuresh #SunPictures #SIGARAMCO #சிகரம்

பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல்

Image
நடிகர் பிரபு தேவாவின் புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. மெர்க்குரி திரைப்படத்தைத் தொடர்ந்து லக்ஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பிரபு தேவா நடித்து வருகிறார். அந்த வரிசையில் இணையும் புதிய திரைப்படம் 'பொன் மாணிக்கவேல்' ஆகும்.  ஏ. சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கிறார். இமான் இசையமைக்க நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கிறார். கே. ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. சி. முகில் செல்லப்பன் பிரபு தேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஜபக்ஸ் மூவிஸ் தயாரிக்கிறது. விரைவில் முன்னோட்ட காணொளிகள் வெளியாகவுள்ளன.  தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரி பொன் மாணிக்கவேல். இவர் அண்மையில் 60 வருடங்களுக்குப் பின் குஜராத்தில் இருந்து ராஜராஜன் சிலையை தமிழகத்திற்கு மீட்டு வந்தார். 7000 சிலைகள் தமிழகத்தில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில் இவற்றை மீட்பது குறித்து பரபரப்பு நிலவி வருகிறது.  இந்நிலையில் பிரபு தேவாவின் படத்துக்கும் இந்தக் கத...

விஜய் 62 - சர்க்கார் - தீபாவளி வெளியீடு!

Image
இளைய தளபதி விஜய்யின் 62வது திரைப்படத்தின் முதல் பார்வை முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக விஜய்யின் 62வது திரைப்படம் குறித்த தகவல்கள் மற்றும் முதல் பார்வை ஒளிப்படங்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.  விஜய் நடிக்கும் 62வது திரைப்படத்தின் பெயர் 'சர்க்கார்'. இத்திரைப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். துப்பாக்கி, கத்தி ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் முருகதாஸ் விஜய்யுடன் இணைகிறார்.  இத்திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், கருப்பையா, ராதாரவி என பலரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. சன் பிச்சர்ஸ் நீண்ட காலத்திற்குப் பின்னர் களத்தில் இறங்கியுள்ளது.  வழக்கம் போல இத்திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் இப்போதே ஆரம்பித்து விட்டன. படத்தின் தலைப்பு தமிழில் இல்லாமை, விஜய் புகைப்பிடிக்கும் காட்சி ஆகியன சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளன.  இது ...

மழைக்காகத்தான் மேகம்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இது எம்.எஸ்.வி சிறப்புப் பதிவு. எம்.எஸ்.வி - இந்த மூன்றெழுத்துக்கு இன்றளவிலும் தமிழ் இசையுலகில் தனி மதிப்பு உண்டு. தமிழ்த் திரையுலகை வளர்த்தெடுத்ததில் இவருக்கு தனிப் பங்குண்டு. இவரது பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவை. இசையமைப்பாளர் , பாடகர் , நடிகர் எனப் பல அவதாரம் எடுத்தவர் எம்.எஸ்.வி.  24.06.1928 இல் கேரளா, பாலக்காடு, எலப்புள்ளி கிராமத்தில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தார்  எம்.எஸ்.வி  என்னும் மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன். கருப்பு வெள்ளை முதல் கலக்கல் வண்ணத்திரை வரை தன் இசையால் முத்திரை பதித்தவர்  எம்.எஸ்.வி. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.  இவரது இசையைப் போலவே கணீரென்ற குரலும் பாடலை மெய்மறந்து ரசிக்க வைத்தது என்றால் மிகையில்லை. 'பாசமலர்' திரைப்படத்தில் துவங்கி பல படங்களில் தன் சொந்தக் குரலில் பாடி அசத்தியுள்ளார்  எம்.எஸ்.வி.  'சங்கமம்' திரைப்படத்தில் 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங...

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும்!

அண்மையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நிகழ்வொன்றில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் சாடியிருந்தார். நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் ஒரு குழுவாக இணைந்து திரைப்படத்தை உருவாக்கினால் தமிழ் ராக்கர்ஸ் அதை இணையத்தில் வெளியிட்டு இன்புறுகிறார்கள். அவர்களை இன்னும் ஆறு மாதத்தில் கண்டுபிடித்து அழிப்பேன் என சூளுரைத்தார். இன்று தொழிநுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் பல்வேறு தொழிநுட்பங்களினால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் திரையரங்குகளும் மக்களுக்கு புது அனுபவத்தை வழங்கி வரும் நிலையில் மக்கள் இறுவட்டுக்களையும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களையும் நாடிச் செல்வது ஏன்? இதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சரி செய்யாமல் இணையத்தளங்களைக் குறை கூறுவது நியாயமில்லை.  காரணம் திரையரங்கக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. சாமானியன் நெருங்கக் கூடிய இடத்தில் திரையரங்குகள் இல்லை. ஆக இறுவட்டுக்களும் இவ்வாறான இணையத்தளங்களுமே மக்களின் திரைப்படப் பொழுதுபோக்கிற்கு தீனி போடுகின்றன. வாழ்க தமிழ் ராக்கர்ஸ்! இவர்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். திரைத்துறை ஏழை எளிய மக்களுக்கானதாக்கப்பட...

கில்லி முதல் பைரவா வரை...

Image
நடிகர் விஜய்யின் ( இளைய தளபதி என்று சொல்ல எந்த அவசியமும் நேரவில்லை இதுவரைக்கும் ) கில்லி திரைப்படம் நேற்று ( 2017.01.29) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இறுதியாக அண்மையில் ( 2017 ஜனவரி ) பைரவா திரைப்படம் வெளியாகியிருந்தது. 2004 கில்லிக்கும் 2017 பைரவாவுக்கும் இடையில் 21 திரைப்படங்கள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளன. இவற்றில் கில்லிக்கு அடுத்து மதுர, திருப்பாச்சி, சுக்ரன், சிவகாசி மற்றும் நண்பன் ஆகிய ஐந்து திரைப்படங்கள் மட்டுமே எனது ரசனைக்கான தெரிவு. கில்லியும் இந்த ஐந்து திரைப்படங்களும் கூட மிகைப்படுத்தப்பட்ட கற்பனை, வணிக நோக்கு மற்றும் இன்னபிற அம்சங்கள் கொண்டவையாக இருந்தாலும் நடிகர் விஜய்யின் இயல்பான, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்திழுத்தன என்றே சொல்லலாம். இவை தவிர வேறெந்தத் திரைப்படங்களிலும் நல்ல கதையம்சமோ அல்லது நடிகர் விஜய்யின் குறிப்பிடத்தக்க நடிப்போ இல்லை என்பதே உண்மை. இயக்குனர்களே விஜய்யின் நடிப்புத் திறன் வீழ்ச்சியடைந்தமைக்கு முக்கிய காரணம். தமிழில் வெளிவரும் திரைப்படங்களில் ஒன்றிரண்டு தவிர எல்லாமே வ...

வர்லாம் வா... வர்லாம் வா... பைரவா!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். பைரவா பாத்துட்டீங்களா? சிலர் திரையரங்கில் பார்த்திருப்பீர்கள். பலர் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். நானும் உங்களில் பலரைப் போல் 'தமிழ் ராக்கர்ஸ்' இன் உபயத்தில் இணையத்தினூடே பார்த்து ரசித்தேன். இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரைக்கதை இணையத்தில் வெளியாகிவிடுகிறது. ஏன் சில நேரங்களில் திரைப்படமே வெளியாகிவிடுவதுமுண்டு. திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டு அத்திரைப்படம் முடிந்து ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியே வருவதற்குள்ளாகவே திரைப்படம் குறித்து தமது கருத்தினை இணையத்தளங்களூடாகவும் சமூக வலைத்தளங்களூடாகவும் வெளிட்டுவிடுகின்றனர். முதல் நாள் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் இணையத்தில் திரைப்படம் வெளியாகிவிடுகிறது. இந்தச் சூழலில் திரைக்கதையும் படக்குழுவும் சரியான பாதையில் பயணித்தால் மட்டுமே மக்களை திரையரங்கின் பக்கம் ஈர்க்க முடியும்.  பைரவா. பரதனின் கதை-வசனம்-இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நடித்து விஜயா புரொடக்க்ஷன்ஸ் வெளியிட்டிருக்கும் திரைப்படம். ம...

சிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே!  2016.10.24 * 'ரெமோ' சிவகார்த்திகேயன் - கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம். இறுவட்டில் பார்த்தேன். திரையரங்கில் திரைப்படத்தைப் பார்க்கப் போனால் சில ஆயிரங்கள் கரைந்து போகிற காரணத்தால் ஏழைகளுக்கு இறுவட்டே துணை. சரி, நமது பார்வைக்கு வருவோம். இத்திரைப்படம் Tootsie என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் பிரதி என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகன் கதாநாயகியைக் காதலிக்கிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் தில்லு முல்லுகளே ரெமோ. சாமானிய ரசிகனை திருப்திகொள்ள வைத்துவிடுகிறது. சற்றே திரைப்பட நுணுக்கங்கள் தெரிந்தவர்களை கழுத்தை நெரிக்கிறது. சதீஷின் நகைச்சுவை கைகொடுக்கவில்லை. சிவாவுக்கு பராட்டா சூரி தான் பொருத்தம். கே.எஸ்.ரவிக்குமார் எல்லாம் எதற்கு இந்தப்படத்தில்? இயக்குனர் வேடத்திலும் வேறு யாரையேனும் போட்டிருக்கலாமே? ஆங்கில மூலத்தைப் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை முன்னைய சிவகார்த்திகேயனின் படங்கள் அளவுக்கு ரெமோ ஈர்க்கவில்லை.  Tootsie - டூட்ஸி. மொழி புரியாவிட்டாலும் படம் பிடித்திருக்கிறது. நான்கு பாட்டு , இ...

வெள்ளித்திரை-தோழா!

Image
அனைவருக்கும் இனிய வணக்கங்கள். தோழா ! அருமையான திரைப்படம். பொதுவாகவே நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் விறுவிறுப்பாக இருக்கும். தோழா நகைச்சுவையுடன் வலிகளைக் கலந்து தந்திருக்கிறது. முதலில் தோழா திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சில காட்சிகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். # "நாலு மாசத்துக்கு நீ சத்தியவானா இருக்கணும்" "தமிழ்ல சொல்லுங்க" "நா சொன்னது தமிழ்தான்டா" # "உன் பெட்ரூமை காட்டுறேன் வா" "இது பெட்ரூமா?" "ஆமா. இது ரூமு. இது பெட்டு" என முதியோர் இல்ல பராமரிப்பாளர் கூறுவது சிரிப்பு. #விக்ரமாதித்யாவை (நாகார்ஜுனா) கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு ஆள் எடுப்பது அருமை.  # வேலை கிடைத்ததும் தனது படுக்கை அறையையும் குளியலறையையும் பார்த்து பிரமிப்படைவது அருமை.  # கண்காட்சியில் ஓவியத்தை பார்த்துவிட்டு தானும் ஓவியம் வரைய முற்படுவது. # நாகார்ஜுனா மணிக்கூண்டை உற்றுப்பார்ப்பதைக் கண்டதும் "இதெல்லாம் விற்க மாட்டாங்க" என கார்த்தி கலாய்ப்பது. # பராமளிப்பாளர் என்பதற்காக காவலாளி போல விறைப்பாக இல்லாமல் விளையாட்டுத் த...

சொய்............... சொய்...............

Image
வணக்கம் அன்பு சொந்தங்களே! இன்று அண்மையில் வெளியான என் மனம் கவர்ந்த பாடல்கள் பற்றி பகிர்ந்துகொள்ளப் போகிறேன். வாருங்கள் போகலாம். "கும்கி" இதுதான் இன்றளவில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படப் பாடல்கள் இடம்பெற்றுள்ள திரைப்படம். 5 காதல் பாடல்கள். அத்தனையும் அழகான மெல்லிசைப் பாடல்கள். டி.இமானின் இசையில் பிரபுசாலமனின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படமே கும்கி.  நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் நடிகை லட்சுமி மேனனும் அறிமுகமாகும் திரைப்படம் இது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து வெளியிடுகின்றன. இதுவரை கேட்டதில் இரண்டு பாடல்கள் என்னைக் கவர்ந்துள்ளன. ஒன்று சொல்லிட்டாளே அவ காதல பாடலும் மற்றையது சொய்... சொய்... பாடலும் தான். இரண்டுமே அருமையான காதல் கானங்கள். இந்த வருடத்தின் முத்தான பாடல்கள் இவைதான் என்றால் கூட மிகையில்லை. சொல்லிட்டாளே அவ காதல பாடலை ரஞ்சித் மற்றும் ஸ்ரேயா கௌஷல் ஆகியோரும் சொய்.. சொய்.. பாடலை மகிழினி மணிமாறனும் பாடியுள்ளனர்.யுகபாரதியின் பாடல் வரிகள் அருமை. ஏனைய பாடல்கள்: ...

வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு....

Image
இது எனது 16வது திரைப்படம். (என்னாது? நீங்க படமெல்லாம் எடுக்குறீங்களா சார்? - இது என்ன உங்க புதுப் பட தலைப்பா? - அப்படின்னெல்லாம் அவசரப்பட்டு கேள்வி கேட்கக் கூடாது. அதாவது நான் திரையரங்கில் பார்க்கும் 16வது படம்னு சொல்ல வந்தேன்.) சினிசிட்டி திரையரங்கு - மருதானை, கொழும்பு-10. நுழைவுச்சீட்டின் விலை 20 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. (எந்த விலைதான் கூடாமல் இருக்கிறது?) அரங்கம் நிறைந்த காட்சின்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். முன்வரிசை ஆசனங்கள் அப்படியே கிடந்தன. படம் வந்து ஒரு மாசமாயிருச்சில்ல? (நான் படம் பார்த்தது 2012/05/13 - ஞாயிற்றுக் கிழமை - மாலை 06:30 மணி) இப்ப எந்த படத்தைப் பத்தி பேசப் போறேன்னு தலைப்பை வச்சே நீங்க புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' பத்தி தான் பேசப் போறேன். கதையே இல்லாமல் வெற்றி கரமாக ஓடிய திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. வலுவான திரைக்கதைப் பின்னணி ஏதும் இதற்கு இல்லை.  நகைச்சுவைத் திரைப்படம் என்றாலும் கூட திரைக்கதை மனதில் ஓட்ட வேண்டும். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சற்று ஏமாற்றம் தந்ததாகவே உணர முடிகிறது. சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லை. க...