விஜய் 62 - சர்க்கார் - தீபாவளி வெளியீடு!

இளைய தளபதி விஜய்யின் 62வது திரைப்படத்தின் முதல் பார்வை முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக விஜய்யின் 62வது திரைப்படம் குறித்த தகவல்கள் மற்றும் முதல் பார்வை ஒளிப்படங்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. 



விஜய் நடிக்கும் 62வது திரைப்படத்தின் பெயர் 'சர்க்கார்'. இத்திரைப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். துப்பாக்கி, கத்தி ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் முருகதாஸ் விஜய்யுடன் இணைகிறார். 

இத்திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், கருப்பையா, ராதாரவி என பலரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. சன் பிச்சர்ஸ் நீண்ட காலத்திற்குப் பின்னர் களத்தில் இறங்கியுள்ளது. 



வழக்கம் போல இத்திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் இப்போதே ஆரம்பித்து விட்டன. படத்தின் தலைப்பு தமிழில் இல்லாமை, விஜய் புகைப்பிடிக்கும் காட்சி ஆகியன சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளன. 

இது அரசியல் சார்ந்த கதையாகும். பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா பயணமாகவுள்ளனர். 

சர்க்கார் எப்படி இருக்கும்? பார்க்கலாம். 

#சர்க்கார் #விஜய் #இளையதளபதி #இசைப்புயல் #விஜய்62 #தீபாவளி #கீர்த்திசுரேஷ் #Thalapathy #SARKAR #VIJAY62 #ARRAHMAN #Deepavali #KeerthiSuresh #SunPictures #SIGARAMCO #சிகரம் 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!