திருவள்ளுவர் சேவா சங்கம் நடாத்தும் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி - தமிழ்நாடு

*வாழ்க குறள் நெறி !*

*வளர்க திருவள்ளுவர் புகழ் !!*

*திருவள்ளுவர் சேவா சங்கம்*
*Thiruvalluvar Public Association*

*சான்றோனாக வாழ திருக்குறள் படி*

*சி.16, ச.சு. கோயில் மான்யம், எடத்தெரு பின்புறம், சலவன்பேட்டை, வேலூர்-632 001.*
----------------------------------------



*மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள்*

"அணுவை துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்" என்று ஔவையாரால் போற்றப் பெற்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருப்பெயரால் செவ்வனே இயங்கி வரும் இயக்கம் திருவள்ளுவர் சேவா சங்கம் ஆகும்.

இச்சங்கத்தின் சார்பாக பள்ளி மாணாக்கரிடையே சமூக மற்றும் தன் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அளவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், மாவட்ட அளவில் பேச்சுப்போட்டியும் நடைபெறும். அனைத்து மாணாக்கர்களும் பங்கு பெற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த அழைக்கின்றோம்.

----------------------------------------

பேச்சுப் போட்டிக்கான தலைப்பு : *"எழுவாரை எல்லாம் பொறுத்து"*

----------------------------------------

எனவே தங்களின் பள்ளி மாணாக்கர்களை அனுப்பி சிறப்பிக்க வேண்டுகிறோம். பள்ளிக்கு 3 மாணாக்கர்கள் பங்கேற்கலாம். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் கடிதம் மூலமாக கீழ் தந்துள்ள முகவரிக்கு *திருக்குறள் மாமணி ச.ஸ்ரீதர்,பி.ஏ,.* நிறுவனத் தலைவர், சி.16, சந்தரேஸ்வரர் சுவாமி கோயில் மான்யம், எடத்தெரு பின்புறம், சலவன்பேட்டை, வேலூர் - 632 001. செல் :86105 98560, 99941 71564 தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.



வரும் 18/06/2018 தேதிக்குள் தங்களின் பெயர்களைபதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பங்கு பெறும் அனைத்து மாணாக்கர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு 20/06/2018 மாலையில் பரிசும், பாராட்டு சான்றிழும் வழங்கி சிறப்பிக்கப்படும். ஏற்கனவே கலந்து கொண்டு பரிசு பெற்றவர்கள் போட்டியில் பங்கேற்க வேண்டாம்.

----------------------------------------

போட்டி நிகழ்விடம்

நாள் : *20/06/2018* புதன்கிழமை நேரம் : காலை *9.00* மணி அளவில்

இடம் : *நகர அரங்கம் (Town Hall),* அண்ணா சாலை (ஆபிசர்ஸ் லைன்),

வடக்கு காவல் நிலையம் அருகில், பழைய பேருந்து நிலையம், வேலூர் - 4.

தலைப்பு : *"திருக்குறள் 1330 ஒப்பிவித்தல்"*

----------------------------------------


*மாநில அளவில் பரிசளிப்பு சுமார் 03.00 மணி அளவில் நடைபெறும்*



*மாநில அளவில் திருக்குறள் போட்டிக்கான பரிசுகள்*

*முதல் பரிசு : திருவள்ளுவர் வெள்ளி கேடயம்*

*2-வது பரிசு : திருவள்ளுவர் வெள்ளி கேடயம்*

*3-வது பரிசு : திருவள்ளுவர் வெள்ளி கேடயம்*

*மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிக்கான பரிசுகள்*

*முதல் பரிசு : திருவள்ளுவர் கோப்பை*

*2-வது பரிசு : திருவள்ளுவர் கோப்பை*

*3-வது பரிசு : திருவள்ளுவர் கோப்பை*


*நிறுவனத் தலைவர் திருக்குறள் மாமணி ச. ஸ்ரீதர்,பி.ஏ,.*

*துணைத் தலைவர்கள் ரா. எல்லம்மாள் ராஜ், ரா. ஏழுமலை*

*செயலாளர் நீ. முத்துக்குமார்*

*பொருளாளர் மு. கோபிநாத்*

*கொள்கை பரப்புச் செயலாளர் ச. சீனிவாசன், B.Com,.*

*கௌரவத்தலைவர் து. டைமன்ராஜன்*

*மற்றும் உறுப்பினர்கள்*

----------------------------------------

#திருக்குறள் #திருவள்ளுவர் #தமிழ்நாடு #திருவள்ளுவர்சேவாசங்கம் #Thirukkural #thiruvalluvar #TamilNadu #ThiruvalluvarSevaSangam #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #சிகரம் #சிகரம்பாரதி 

Comments