பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்

ஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். 

பத்தாம் நாள் காலை 07.15 மணிக்கு பெண்கள் உறங்கும் அறையில் அலாரம் அடிக்கிறது. பெண்கள் வேலைக்காரர்களாக இருப்பதால் ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருக்கும் உடைகளை எடுத்து அணிந்து கொண்டு எஜமானர்களான ஆண்களுக்கு தேநீர் தயார் செய்வதற்காக விரைவாக எழுப்பி விடப்படுகின்றனர்.

காலை 08.00 மணிக்கு குத்துப் பாடலுடன் காலைப் பொழுது விடிகிறது. 

காலை 08.45 மணிக்கு ஜனனியும் ரித்விகாவும் காலைத் தேநீரை அவர்கள் அறையில் அமர்ந்து பருகியபடி பேசிக்கொண்டிருக்கின்றனர். 

காலை 09.45 மணிக்கு பிக் பாஸிடம் பேச வேண்டும் எனக் கூறுகிறார் மும்தாஜ். பிக் பாஸ் தன்னை அழைத்துப் பேசும் வரை மைக்கை மாட்ட முடியாது என்று கழற்றி வைக்கிறார். ஏனைய அனைத்து பெண் போட்டியாளர்களும் சாரி அணிந்திருக்க மும்தாஜ் சாரி அணியவில்லை. 

மும்தாஜ் சாரி மாற்ற பெண்கள் அறையிலுள்ள குளியலறையை திறந்து தர வேண்டும் என கூறுகிறார். பின்னர் ஒரு வழியாக நித்யா சமாதானப்படுத்த மும்தாஜ் சாரியை மாற்றுகிறார். 

வேலை செய்யாத வேலைக்காரர்களை தண்டிக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறியிருக்கிறாராம். அதனால் யாருக்கு என்ன தண்டனை வழங்குவது என்று ஆண்கள் கூடிப் பேசுகின்றனர். மும்தாஜ் காலை உடை மாற்ற காலை இரண்டு மணி நேரம் தாமதமானதால் அவர் நீச்சல் குளத்தை இரண்டு மணி நேரம் சுத்தம் செய்ய வேண்டும் என கூறுகின்றனர். மும்தாஜ் மறுக்க விவாதம் வலுக்கிறது. 

மமதி பொன்னம்பலம் குறித்து சத்தமாக பேசியதால் அவர் டாஸ்க் முடியும் வரை யாரிடமும் பேசக் கூடாது என்று தண்டனை வழங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து வேலைக்காரர்களுக்கு கொடுக்கப்படும் வேலைகள் தொடர்பில் விவாதம் அனல் பறக்கிறது. 

பெண் போட்டியாளர்கள் அவர்களது வேலைகள் தொடர்பில் ஆண்களுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்க மும்தாஜும் மமதியும் அமைதியாக அமர்ந்திருக்கின்றனர். பிரச்சினை வலுக்கிறது. குரல்கள் உயர்கின்றன. மும்தாஜ் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றுக் கொள்ளாததால் அது குறித்து பிக்பாஸுடன் பெண் போட்டியாளர்களைப் பேசி முடிவெடுக்குமாறு டேனி கூறுகிறார். 




மதியம் இரண்டு மணிக்கு பிக்பாஸ் ஓலை அனுப்புகிறார். அதில் போட்டியாளர்கள் அனைவரும் கட்டாயம் மைக்கை அணிந்திருக்க வேண்டும் எனக் கூறுகிறார். அப்போது நித்யா அறிவுறுத்திய பின்னர் மும்தாஜ் மைக்கை அணிந்து கொள்கிறார். மேலும் பெண்கள் அறையிலுள்ள குளியலறை அவசர நேரத்தில் மட்டுமே திறக்கப்படும் என்பதை உறுதியாக கூறுகிறார் பிக்பாஸ். 

மாலை 06.45க்கு அடுத்த ஓலையை அனுப்பும் பிக் பாஸ் பெண் வேலைக்காரர்கள் ஆண் எஜமானர்களை ஆடிப்பாடி மகிழ்விக்க வேண்டும் என்றும் ஆண்கள் யார் சிறப்பாக ஆடிப்பாடியது என்று கூடிப்பேசி தெரிவு செய்து பரிசு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறார். போட்டி முற்றத்தில் இடம்பெறும். பரிசும் போட்டி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். 

பிக் பாஸ் நடனப்போட்டி இரவு 09.30 மணிக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு பெண் போட்டியாளரும் அவரவர் திறமையை வெளிப்படுத்துகின்றனர். ஆடலும் பாடலும் களை கட்டுகிறது. பிக் பாஸ் ஒரு மாதிரியான ஆளு தான் போல. கிளுகிளுப்பான பாடல்களுக்கு நடனமாட வைக்கிறார். ஆண்கள் சாப்பிட்டுக்கொண்டே போட்டியை ரசிக்க பழங்கள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கின்றன. போட்டியின் நிறைவில் ஐஸ்வர்யா நன்றாகப் பாடியதாக தெரிவு செய்யப்படுகிறார். மும்தாஜ் மற்றும் நித்யாவுக்கும் பரிசு வழங்கப்படுகிறது. 

அத்துடன் பிக்பாஸ் காட்சிகள் முடிவடைகின்றன. இன்னும் எஜமானர் - வேலைக்காரர் போட்டி முடிவடையவில்லை. அதற்கான 1600 புள்ளிகளும் முழுமையாக வழங்கப்படுமா எனத் தெரியவில்லை. இன்னும் வீட்டு வேலைகளுக்கான அணிகளும் பிரிக்கப்படவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிகளுக்காக எஞ்சியிருக்கின்றன. பார்க்கலாம் பிக் பாஸ் என்ன செய்யப் போகிறார் என்று! 

பிக் பாஸ் தமிழ் - 02 | வாரம் - 02 | வெளியேறப்போவது யார்? 


இந்த வாரம் வெளியேற்றத்திற்காக நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபருக்கு 'BIGG BOSS VOTE' என்று கூகுளில் தேடுவதன் மூலமோ அல்லது அலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமோ வாக்களிக்கலாம். குறைவான வாக்குகளைப் பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார். 

வாக்களிப்பு முழு விவரம் இங்கே: 


'சிகரம்' இணையத்தள வாசகர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக விசேட வாக்களிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளோம். உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் எம்மோடு பகிந்து கொள்ள முடியும். இது உத்தியோக பூர்வ வாக்களிப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிகரத்தில் வாக்களிக்க: 


இந்த வெளியேற்றத்தை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள். இந்த பதினாறு போட்டியாளர்களில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார்? யாராச்சும் கேட்டார்களா? நாம கேப்போம். 

உங்க எண்ணங்களை இங்கே சொல்லுங்க: 


வாழ்க பிக் பாஸ்! வளர்க பிக் பாஸ்!! 

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்வாக்களிப்பு #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #BiggBossOnlineVote #BiggBossVote #VijayTV #KamalHassan #Maiam #Vishwaroopam2 #SIGARAMCO #சிகரம்

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!